இலங்கையில் நிலவும் மோசமான காலநிலை காரணமாக இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 212 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன், 218 பேர் காணாமல்போயுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று மாலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பதுளை மாவட்டத்திலேயே அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். அதேவேளை, கண்டி மாவட்டத்திலேயே அதிகமானோர் காணாமல்போயுள்ளனர்.
நாடு முழுவதும் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு உள்ளிட்ட அனர்த்தங்களால் 2 இலட்சத்து 73 ஆயிரத்து 606 குடும்பங்களைச் சேர்ந்த 9 இலட்சத்து 98 ஆயிரத்து 918 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட மக்களுக்காக 1,275 பாதுகாப்பு மத்திய நிலையங்கள் செயற்படுத்தப்பட்டுள்ளன. இதில் 51 ஆயிரத்து 228 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 80 ஆயிரத்து 499 பேர் தற்போது தங்கவைக்கப்பட்டுள்ளார்கள்.
நிவாரண விநியோகம், தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இருநூறைத் தாண்டியது உயிரிழப்பு எண்ணிக்கை; 218 பேர் மாயம் 10 இலட்சம் பேர் நிர்க்கதி இலங்கையில் நிலவும் மோசமான காலநிலை காரணமாக இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 212 ஆக அதிகரித்துள்ளது.அத்துடன், 218 பேர் காணாமல்போயுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று மாலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.பதுளை மாவட்டத்திலேயே அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். அதேவேளை, கண்டி மாவட்டத்திலேயே அதிகமானோர் காணாமல்போயுள்ளனர்.நாடு முழுவதும் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு உள்ளிட்ட அனர்த்தங்களால் 2 இலட்சத்து 73 ஆயிரத்து 606 குடும்பங்களைச் சேர்ந்த 9 இலட்சத்து 98 ஆயிரத்து 918 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர்.பாதிக்கப்பட்ட மக்களுக்காக 1,275 பாதுகாப்பு மத்திய நிலையங்கள் செயற்படுத்தப்பட்டுள்ளன. இதில் 51 ஆயிரத்து 228 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 80 ஆயிரத்து 499 பேர் தற்போது தங்கவைக்கப்பட்டுள்ளார்கள்.நிவாரண விநியோகம், தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.