• Nov 23 2024

நோயாளர் காவு வண்டி ஊழியர்களின் அதிரடி முடிவு..! மக்கள் அவதி..!

Chithra / Dec 18th 2023, 1:26 pm
image

 

மத்திய மாகாண அரச சுகாதார சேவை நோயாளர் காவு வண்டி ஊழியர்கள் சங்கம் நாளையும் நாளை மறுதினமும் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளது.

15 நோயாளர் காவு வண்டி சாரதிகள் வேறு நிறுவனங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக மத்திய மாகாண அரச சுகாதார சேவை நோயாளர் காவு வண்டி ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.

பொதுச் சேவை ஆணைக்குழுவின் கொள்கைகளுக்கு மாறாக நோயாளர் காவு வண்டி சேவைக்காகப் பயிற்சி பெற்ற பல வருட அனுபவமுள்ள குறித்த சாரதிகள் வேறு நிறுவனங்களுக்கு பணியமர்த்தப்படுகின்றனர்.

இதன்மூலம் அவர்களின் பயிற்சிக்காக செலவிடப்படும் அரசாங்கத்தின் பணம் வீணடிக்கப்படுவதாக அந்த சங்கத்தின் தலைவர் சம்பத் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.


நோயாளர் காவு வண்டி ஊழியர்களின் அதிரடி முடிவு. மக்கள் அவதி.  மத்திய மாகாண அரச சுகாதார சேவை நோயாளர் காவு வண்டி ஊழியர்கள் சங்கம் நாளையும் நாளை மறுதினமும் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளது.15 நோயாளர் காவு வண்டி சாரதிகள் வேறு நிறுவனங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக மத்திய மாகாண அரச சுகாதார சேவை நோயாளர் காவு வண்டி ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.பொதுச் சேவை ஆணைக்குழுவின் கொள்கைகளுக்கு மாறாக நோயாளர் காவு வண்டி சேவைக்காகப் பயிற்சி பெற்ற பல வருட அனுபவமுள்ள குறித்த சாரதிகள் வேறு நிறுவனங்களுக்கு பணியமர்த்தப்படுகின்றனர்.இதன்மூலம் அவர்களின் பயிற்சிக்காக செலவிடப்படும் அரசாங்கத்தின் பணம் வீணடிக்கப்படுவதாக அந்த சங்கத்தின் தலைவர் சம்பத் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement