• Nov 22 2024

சமாதான நீதவானுக்கு ஏற்பட்ட விபரீத ஆசை....! இரகசியமாக நடைபெற்ற வியாபாரத்தால் சிக்கல்...!samugammedia

Sharmi / Dec 25th 2023, 9:11 am
image

வெல்லம்பிட்டிய, கொஹிலவத்தையில் இரண்டு மாடி வீடொன்றில் சட்டவிரோத மதுபானம் காய்ச்சிய போது சமாதான நீதவான் மற்றும் அவரது உதவியாளர் கைது செய்யப்பட்டதாக மேல்மாகாண தெற்கு மாவட்ட குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.

சந்தேகநபர்கள் இருவருடன் வடிக்கப்பட்ட  சட்டவிரோத மதுபானம், நான்கு பீப்பாய்களில் 7 இலட்சத்து 56000 கோடா, 26 அடி நீளமான இறப்பர் குழாயில் பொருத்தப்பட்ட செப்புச் சுருள் மற்றும் பல உபகரணங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் மேற்பார்வையில், நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் நீதி நடவடிக்கைகளுக்கு மக்கள் பதில் அளிக்கும் வகையில், மேல்மாகாண தென் மாவட்ட கொஹிலவத்தை பிரதேசவாசிகளிடம் இருந்து கிடைத்த இரகசியத் தகவல் குற்றப்பிரிவு, பொலிஸ் சார்ஜன்ட்  அனில் தலைமையிலான குழுவினர் அந்தந்த வீட்டை சோதனை செய்து சந்தேக நபர்கள் இருவரையும் கைது செய்தனர்.

74 வயதான சமாதான நீதவான் இரண்டு மாடி வீட்டினருகே உள்ள அறையில் 52 பேருடன் இணைந்து இந்த சட்டவிரோத மதுபானத்தை குறிப்பிட்ட சிலருக்கு இரகசியமாக விநியோகம் செய்து வந்துள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 



சமாதான நீதவானுக்கு ஏற்பட்ட விபரீத ஆசை. இரகசியமாக நடைபெற்ற வியாபாரத்தால் சிக்கல்.samugammedia வெல்லம்பிட்டிய, கொஹிலவத்தையில் இரண்டு மாடி வீடொன்றில் சட்டவிரோத மதுபானம் காய்ச்சிய போது சமாதான நீதவான் மற்றும் அவரது உதவியாளர் கைது செய்யப்பட்டதாக மேல்மாகாண தெற்கு மாவட்ட குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.சந்தேகநபர்கள் இருவருடன் வடிக்கப்பட்ட  சட்டவிரோத மதுபானம், நான்கு பீப்பாய்களில் 7 இலட்சத்து 56000 கோடா, 26 அடி நீளமான இறப்பர் குழாயில் பொருத்தப்பட்ட செப்புச் சுருள் மற்றும் பல உபகரணங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் மேற்பார்வையில், நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் நீதி நடவடிக்கைகளுக்கு மக்கள் பதில் அளிக்கும் வகையில், மேல்மாகாண தென் மாவட்ட கொஹிலவத்தை பிரதேசவாசிகளிடம் இருந்து கிடைத்த இரகசியத் தகவல் குற்றப்பிரிவு, பொலிஸ் சார்ஜன்ட்  அனில் தலைமையிலான குழுவினர் அந்தந்த வீட்டை சோதனை செய்து சந்தேக நபர்கள் இருவரையும் கைது செய்தனர்.74 வயதான சமாதான நீதவான் இரண்டு மாடி வீட்டினருகே உள்ள அறையில் 52 பேருடன் இணைந்து இந்த சட்டவிரோத மதுபானத்தை குறிப்பிட்ட சிலருக்கு இரகசியமாக விநியோகம் செய்து வந்துள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement