எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சங்கு சின்னத்தில் போட்டியிடும் பா.அரியநேந்திரனை ஆதரித்து, வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் கேவில், கட்டைக்காடு, வெற்றிலைக்கேணி பகுதிகளில் இன்றையதினம்(09) பிரச்சார நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
தமிழ் பொது வேட்பாளருக்கான ஆதரவு வடமராட்சி கிழக்கு மக்கள் இடையே பெருகிவருவதால் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் இளைஞர்கள் சிலர் தாமாகவே முன்வந்து பொதுவேட்பாளருக்கான ஆதரவு பிரசாரத்தை மேற்கொண்டு வருவதுடன் வீடு வீடாக சென்று தமிழ் பொது வேட்பாளருக்கான தேவையை வலியுறுத்தியதுடன் துண்டுப் பிரசுரங்களையும் கையளித்தனர்
கேவில்,கட்டைக்காடு,வெற்றிலைக்கேணி பிரதேசங்களை சேர்ந்த அதிகளவான மக்கள் பொது வேட்பாளருக்கான நியாயப்பாட்டை உணர்ந்துள்ளதாக முன்னாள் மணல்காடு கிராம அபிவிருத்தி சங்க தலைவர் கமலதாஸ் தெரிவித்துள்ளார்
இதில் ஜனநாயக போராளிகள் கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள், முன்னாள் பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர்கள், மணல்காடு கிராம அபிவிருத்தி சங்க தலைவர், தாளையடிகடற்தொழிலாளர் கூட்டுறவு சங்க செயலாளர், இளைஞர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
தமிழ் பொதுவேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து வடமராட்சியில் தேர்தல் பிரச்சாரம் தீவிரம். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சங்கு சின்னத்தில் போட்டியிடும் பா.அரியநேந்திரனை ஆதரித்து, வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் கேவில், கட்டைக்காடு, வெற்றிலைக்கேணி பகுதிகளில் இன்றையதினம்(09) பிரச்சார நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.தமிழ் பொது வேட்பாளருக்கான ஆதரவு வடமராட்சி கிழக்கு மக்கள் இடையே பெருகிவருவதால் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் இளைஞர்கள் சிலர் தாமாகவே முன்வந்து பொதுவேட்பாளருக்கான ஆதரவு பிரசாரத்தை மேற்கொண்டு வருவதுடன் வீடு வீடாக சென்று தமிழ் பொது வேட்பாளருக்கான தேவையை வலியுறுத்தியதுடன் துண்டுப் பிரசுரங்களையும் கையளித்தனர்கேவில்,கட்டைக்காடு,வெற்றிலைக்கேணி பிரதேசங்களை சேர்ந்த அதிகளவான மக்கள் பொது வேட்பாளருக்கான நியாயப்பாட்டை உணர்ந்துள்ளதாக முன்னாள் மணல்காடு கிராம அபிவிருத்தி சங்க தலைவர் கமலதாஸ் தெரிவித்துள்ளார் இதில் ஜனநாயக போராளிகள் கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள், முன்னாள் பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர்கள், மணல்காடு கிராம அபிவிருத்தி சங்க தலைவர், தாளையடிகடற்தொழிலாளர் கூட்டுறவு சங்க செயலாளர், இளைஞர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.