• Sep 20 2024

சவாலை உருவாக்கியுள்ள ஆசிரியர்களின் வெளியேற்றம் - அரச பாடசாலைகளில் பாரிய சிக்கல்..! samugammedia

Chithra / Aug 21st 2023, 8:56 pm
image

Advertisement

அரசாங்கம் அறிமுகப் படுத்தியுள்ள விடுமுறைத் திட்டத்தின் கீழ் பெரும் எண்ணிக்கையிலான தகுதிவாய்ந்த ஆசிரியர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதால் அரச பாடசாலைகளில் பாரிய வெற்றிடங்கள் உருவாகியுள்ளன. 

இதன் காரணமாக புதிய ஆசிரியர்களை பணிக்கு அமர்த்துவதற்கு அமைச்சரவையின் ஒப்புதலை பெற்றுக்கொள்ள வேண்டிய சூழ்நிலை கல்வியமைச்சுக்கு ஏற்பட்டுள்ளது.

அரச சுற்றறிக்கையின் பிரகாரம் ஐந்து ஆண்டு ஊதியமற்ற விடுமுறைக்கு ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம். இதன் காரணமாக அரச பாடசாலைகளில் ஆசிரியர்களுக்கான வெற்றிடங்கள் ஏற்பட்டுள்ளன.

நாட்டில் கடந்த ஒன்பது மாதங்களில் ஏறத்தாழ ஐயாயிரம் ஆசிரியர்களுக்கு ஐந்தாண்டுகளுக்கான ஊதியமற்ற விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

இதேவேளை, நாட்டைவிட்டு வெளியேறும் ஆசிரியர்களை கல்வியமைச்சினால் தடுக்க முடியாதென அமைச்சின் செயலாளர் நிஹால் ரணசிங்க தெரிவித்தார்.

புதிதாக உருவாகியுள்ள ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு அனுமதிகோரி ஏற்கனவே அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக் கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, நாட்டிலுள்ள அரச பாடசாலைகளில் சுமார் 40 ஆயிரம் ஆசிரியர்களுக்கான வெற்றிடங்கள் காணப்படுவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

அரச வைத்தியசாலைகளில் பணியாற்றும் வைத்தியர்கள் நாட்டைவிட்டு வெளியேறுகின்றமையால் சுகாதாரத்துறை பெரும் சவாலை எதிர்நோக்கியுள்ள நிலையில் கல்வித் துறையும் பிரச்சினையை எதிர்நோக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

சவாலை உருவாக்கியுள்ள ஆசிரியர்களின் வெளியேற்றம் - அரச பாடசாலைகளில் பாரிய சிக்கல். samugammedia அரசாங்கம் அறிமுகப் படுத்தியுள்ள விடுமுறைத் திட்டத்தின் கீழ் பெரும் எண்ணிக்கையிலான தகுதிவாய்ந்த ஆசிரியர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதால் அரச பாடசாலைகளில் பாரிய வெற்றிடங்கள் உருவாகியுள்ளன. இதன் காரணமாக புதிய ஆசிரியர்களை பணிக்கு அமர்த்துவதற்கு அமைச்சரவையின் ஒப்புதலை பெற்றுக்கொள்ள வேண்டிய சூழ்நிலை கல்வியமைச்சுக்கு ஏற்பட்டுள்ளது.அரச சுற்றறிக்கையின் பிரகாரம் ஐந்து ஆண்டு ஊதியமற்ற விடுமுறைக்கு ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம். இதன் காரணமாக அரச பாடசாலைகளில் ஆசிரியர்களுக்கான வெற்றிடங்கள் ஏற்பட்டுள்ளன.நாட்டில் கடந்த ஒன்பது மாதங்களில் ஏறத்தாழ ஐயாயிரம் ஆசிரியர்களுக்கு ஐந்தாண்டுகளுக்கான ஊதியமற்ற விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.இதேவேளை, நாட்டைவிட்டு வெளியேறும் ஆசிரியர்களை கல்வியமைச்சினால் தடுக்க முடியாதென அமைச்சின் செயலாளர் நிஹால் ரணசிங்க தெரிவித்தார்.புதிதாக உருவாகியுள்ள ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு அனுமதிகோரி ஏற்கனவே அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக் கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.இதேவேளை, நாட்டிலுள்ள அரச பாடசாலைகளில் சுமார் 40 ஆயிரம் ஆசிரியர்களுக்கான வெற்றிடங்கள் காணப்படுவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.அரச வைத்தியசாலைகளில் பணியாற்றும் வைத்தியர்கள் நாட்டைவிட்டு வெளியேறுகின்றமையால் சுகாதாரத்துறை பெரும் சவாலை எதிர்நோக்கியுள்ள நிலையில் கல்வித் துறையும் பிரச்சினையை எதிர்நோக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement