• Oct 09 2024

முள்ளிவாய்க்காலில் ஆயுதங்களை தேடி முன்னெடுக்கப்பட்ட அகழ்வுப் பணி இடைநிறுத்தம்..!

Sharmi / Oct 9th 2024, 1:06 pm
image

Advertisement

முள்ளிவாய்க்காலில் ஆயுதங்களை தேடி முன்னெடுக்கப்பட்ட அகழ்வுப் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் உள்ள விளையாட்டு கழக மைதானத்தில் தமிழ் ஆயுத போராட்ட அமைப்பினரால் புதைக்கப்பட்ட ஆயுதங்கள் இருப்பதாக தெரிவித்து அகழ்வு பணி இடம்பெற்று வருகிறது

கொழும்பு நீதிமன்றின் அனுமதியுடன் குறித்த அகழ்வுப் பணியானது கொழும்பில் இருந்து வருகைதந்த பொலிஸ் குழுவினரால் நேற்று(08) மாலை முன்னெடுக்கப்பட்டிருந்தது. 

குறித்த அகழ்வு பணியின் போது, எவ்வித ஆயுதங்களும்  கிடைக்கப்பெறாத நிலையில் அங்கு தண்ணீர் அதிக வரத்து ஏற்பட்டமையால் அகழ்வு பணி இடைநிறுத்தப்பட்டு இன்றையதினம்(09) காலை மீளவும் தண்ணீர் அகற்றும் பணி ஆரம்பிக்கப்பட்டது.

இவ்வாறு முள்ளிவாய்க்கால் கிழக்கு, மேற்கு பகுதிகளில் அண்ணளவாக 11 இடங்களில் இதுவரை அகழ்வு பணிகள் இடம்பெற்ற நிலையிலும் ஆயுதங்கள் எதுவும் கிடைக்காத நிலையில் குறித்த அகழ்வுப் பணியானது இடைநிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.









முள்ளிவாய்க்காலில் ஆயுதங்களை தேடி முன்னெடுக்கப்பட்ட அகழ்வுப் பணி இடைநிறுத்தம். முள்ளிவாய்க்காலில் ஆயுதங்களை தேடி முன்னெடுக்கப்பட்ட அகழ்வுப் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் உள்ள விளையாட்டு கழக மைதானத்தில் தமிழ் ஆயுத போராட்ட அமைப்பினரால் புதைக்கப்பட்ட ஆயுதங்கள் இருப்பதாக தெரிவித்து அகழ்வு பணி இடம்பெற்று வருகிறதுகொழும்பு நீதிமன்றின் அனுமதியுடன் குறித்த அகழ்வுப் பணியானது கொழும்பில் இருந்து வருகைதந்த பொலிஸ் குழுவினரால் நேற்று(08) மாலை முன்னெடுக்கப்பட்டிருந்தது. குறித்த அகழ்வு பணியின் போது, எவ்வித ஆயுதங்களும்  கிடைக்கப்பெறாத நிலையில் அங்கு தண்ணீர் அதிக வரத்து ஏற்பட்டமையால் அகழ்வு பணி இடைநிறுத்தப்பட்டு இன்றையதினம்(09) காலை மீளவும் தண்ணீர் அகற்றும் பணி ஆரம்பிக்கப்பட்டது.இவ்வாறு முள்ளிவாய்க்கால் கிழக்கு, மேற்கு பகுதிகளில் அண்ணளவாக 11 இடங்களில் இதுவரை அகழ்வு பணிகள் இடம்பெற்ற நிலையிலும் ஆயுதங்கள் எதுவும் கிடைக்காத நிலையில் குறித்த அகழ்வுப் பணியானது இடைநிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement