• Nov 23 2024

அரச கடன் பிரச்சினைகளுக்கு தற்போதுள்ள பொது வரைவு போதுமானதல்ல! - G77 மாநாட்டில் ஜனாதிபதி உரை

Chithra / Jan 21st 2024, 5:01 pm
image



  

தென் துருவ நாடுகளின் பிரச்சினைகளுக்கு முகம்கொடுப்பதற்கு G77 மற்றும் சீன குழுக்களுக்கு மத்தியில் ஒற்றுமை ஏற்பட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

உகண்டா - கம்பாலா நகரில் இன்று நடைபெறும் G77 மற்றும் சீனாவின் 3ஆவது தென் துருவ மாநாட்டில் உரையாற்றிய போதே அவர் இதை வலியுறுத்தினார்

மேலும் உரையாற்றிய அவர்,

இக்குழுவின் 60 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் தருணத்தில், 

தென் துருவத்தின் சவால்களை எதிர்கொள்ள ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பை அடிப்படை நியதிகளாக கொண்டு செயற்பட வேண்டியது அவசியம் எனவும் தெரிவித்தார்.

மேலும் கையிருப்பிலிருக்கும் நிதியை வேறு தேவைகளுக்காக பயன்படுத்துவது, மக்களுக்கு அவசியமான சேவைகள் மற்றும் நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவதில் தாக்கம் செலுத்துவதாக ஜனாதிபதி   சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்தோடு, அரச கடன் பிரச்சினைகளை நிவர்த்திப்பதற்காக தற்போதுள்ள பொது வரைவு போதுமானதல்ல என்றும் வலியுறுத்தினார். 

அரச கடன் பிரச்சினைகளுக்கு தற்போதுள்ள பொது வரைவு போதுமானதல்ல - G77 மாநாட்டில் ஜனாதிபதி உரை   தென் துருவ நாடுகளின் பிரச்சினைகளுக்கு முகம்கொடுப்பதற்கு G77 மற்றும் சீன குழுக்களுக்கு மத்தியில் ஒற்றுமை ஏற்பட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.உகண்டா - கம்பாலா நகரில் இன்று நடைபெறும் G77 மற்றும் சீனாவின் 3ஆவது தென் துருவ மாநாட்டில் உரையாற்றிய போதே அவர் இதை வலியுறுத்தினார்மேலும் உரையாற்றிய அவர்,இக்குழுவின் 60 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் தருணத்தில், தென் துருவத்தின் சவால்களை எதிர்கொள்ள ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பை அடிப்படை நியதிகளாக கொண்டு செயற்பட வேண்டியது அவசியம் எனவும் தெரிவித்தார்.மேலும் கையிருப்பிலிருக்கும் நிதியை வேறு தேவைகளுக்காக பயன்படுத்துவது, மக்களுக்கு அவசியமான சேவைகள் மற்றும் நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவதில் தாக்கம் செலுத்துவதாக ஜனாதிபதி   சுட்டிக்காட்டியுள்ளார்.அத்தோடு, அரச கடன் பிரச்சினைகளை நிவர்த்திப்பதற்காக தற்போதுள்ள பொது வரைவு போதுமானதல்ல என்றும் வலியுறுத்தினார். 

Advertisement

Advertisement

Advertisement