• May 20 2025

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் இழுத்து மூடப்பட்ட தொழிற்சாலை; 2000 பேருக்கு நெருக்கடி

Chithra / May 20th 2025, 4:28 pm
image

 

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்று இன்று திடீரென இழுத்து மூடப்பட்டுள்ளது. இந்த தொழிற்சாலையில் 2 ஆயிரம் பேர் பணியாற்றி வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

1978 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த தொழிற்சாலை சுமார் 47 ஆண்டுகளாக இயங்கி வந்துள்ளது. 

குறித்த ஆடைத்தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் ஆடை வகைகள் இங்கிலாந்துக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றது.

இந்த தொழிற்சாலையில் தற்போது பணியாளர்கள் எவரும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் உற்பத்தித் துறையின் வளர்ச்சி குறைவடைந்து வருவதால் தொழிற்சாலையை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக நிர்வாக அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்த தொழிற்சாலையை சுற்றி பாதுகாப்பு அதிகாரிகள் மாத்திரமே இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் இழுத்து மூடப்பட்ட தொழிற்சாலை; 2000 பேருக்கு நெருக்கடி  கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்று இன்று திடீரென இழுத்து மூடப்பட்டுள்ளது. இந்த தொழிற்சாலையில் 2 ஆயிரம் பேர் பணியாற்றி வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.1978 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த தொழிற்சாலை சுமார் 47 ஆண்டுகளாக இயங்கி வந்துள்ளது. குறித்த ஆடைத்தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் ஆடை வகைகள் இங்கிலாந்துக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றது.இந்த தொழிற்சாலையில் தற்போது பணியாளர்கள் எவரும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.நாட்டில் உற்பத்தித் துறையின் வளர்ச்சி குறைவடைந்து வருவதால் தொழிற்சாலையை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக நிர்வாக அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.தற்போது இந்த தொழிற்சாலையை சுற்றி பாதுகாப்பு அதிகாரிகள் மாத்திரமே இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement