• Apr 29 2026

அமைதிக்கான நடைபயணத்தின் இறுதி நாள் இன்று! கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்

Chithra / Apr 28th 2026, 8:07 am
image

இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் 'அமைதி நடைப்பயணம்' இன்று கொழும்பு நகரை மையமாகக் கொண்டு நடைபெறவுள்ளதால் விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. 


இன்று நண்பகல் 12.00 மணிக்கு களனி ரஜமஹா விகாரையில் ஆரம்பமாகும் இந்த அமைதிக்கான நடைபயணம், சுதந்திர சதுக்கத்தை நோக்கி பயணிக்கவுள்ளது. 


அதனைத் தொடர்ந்து, மாலை 4.00 மணிக்கு சுதந்திர சதுக்கத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பங்கேற்புடன் விசேட அரச விழா நடைபெறவுள்ளது. 


இதன்போது, வணக்கத்திற்குரிய பஞ்ஞாக்கர தேரர் உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவிடம் ஸ்ரீ மகா போதியின் கன்று ஒன்றை ஜனாதிபதி உத்தியோகபூர்வமாக கையளிக்கவுள்ளார். 


சுதந்திர சதுக்கத்திலிருந்து மாலை 5.30 மணிக்கு மீண்டும் ஆரம்பமாகும் நடைபயணம், கொழும்பு கங்காராம விகாரையை சென்றடைந்ததும் நிறைவு பெறவுள்ளது. 


இதனை முன்னிட்டு, கொழும்பு போக்குவரத்துப் பிரிவினரால் குறித்த பகுதிகளில் விசேட போக்குவரத்துத் திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. 


இதன்படி, இன்று காலை 11.00 மணி முதல் பின்வரும் வீதிகளில் நிலவும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப அவ்வப்போது போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும். 


பண்டாரநாயக்க சுற்றுவட்டம் முதல் பேஸ்லைன் வீதி ஊடாக பொரளை சந்தி வரை, மருதானை வீதி, நந்ததாச கோதாகொட மாவத்தை, வோர்ட் பிளேஸ், சொய்சா சுற்றுவட்டம், லிப்டன் சுற்றுவட்டம், தர்மபால மாவத்தை, எஃப். ஆர். சேனாநாயக்க மாவத்தை, சி.டபிள்யூ.டபிள்யூ. கன்னங்கர மாவத்தை, ஹோர்டன் சுற்றுவட்டம், நந்தா மோட்டார்ஸ், சுதந்திர மாவத்தை, பிரேமசிறி கேமதாச மாவத்தை, கேம்பிரிட்ஜ் பிளேஸ், கிளாஸ் ஹவுஸ் சந்தி, மார்கஸ் பெர்னாண்டோ மாவத்தை, நூலக சந்தி, மலர் வீதி, பித்தளை சந்தி, ஜேம்ஸ் பீரிஸ் மாவத்தை, முத்தையா வீதி, பேபுரூக் வீதி, ஸ்டேபில் வீதி மற்றும் கங்காராம விகாரையைச் சூழவுள்ள வீதிகள். 


இக்காலப்பகுதியில் ஏற்படக்கூடிய போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், சாரதிகள் மற்றும் பொதுமக்கள் தங்களால் இயன்றவரை மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

அமைதிக்கான நடைபயணத்தின் இறுதி நாள் இன்று கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் 'அமைதி நடைப்பயணம்' இன்று கொழும்பு நகரை மையமாகக் கொண்டு நடைபெறவுள்ளதால் விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இன்று நண்பகல் 12.00 மணிக்கு களனி ரஜமஹா விகாரையில் ஆரம்பமாகும் இந்த அமைதிக்கான நடைபயணம், சுதந்திர சதுக்கத்தை நோக்கி பயணிக்கவுள்ளது. அதனைத் தொடர்ந்து, மாலை 4.00 மணிக்கு சுதந்திர சதுக்கத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பங்கேற்புடன் விசேட அரச விழா நடைபெறவுள்ளது. இதன்போது, வணக்கத்திற்குரிய பஞ்ஞாக்கர தேரர் உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவிடம் ஸ்ரீ மகா போதியின் கன்று ஒன்றை ஜனாதிபதி உத்தியோகபூர்வமாக கையளிக்கவுள்ளார். சுதந்திர சதுக்கத்திலிருந்து மாலை 5.30 மணிக்கு மீண்டும் ஆரம்பமாகும் நடைபயணம், கொழும்பு கங்காராம விகாரையை சென்றடைந்ததும் நிறைவு பெறவுள்ளது. இதனை முன்னிட்டு, கொழும்பு போக்குவரத்துப் பிரிவினரால் குறித்த பகுதிகளில் விசேட போக்குவரத்துத் திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இதன்படி, இன்று காலை 11.00 மணி முதல் பின்வரும் வீதிகளில் நிலவும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப அவ்வப்போது போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும். பண்டாரநாயக்க சுற்றுவட்டம் முதல் பேஸ்லைன் வீதி ஊடாக பொரளை சந்தி வரை, மருதானை வீதி, நந்ததாச கோதாகொட மாவத்தை, வோர்ட் பிளேஸ், சொய்சா சுற்றுவட்டம், லிப்டன் சுற்றுவட்டம், தர்மபால மாவத்தை, எஃப். ஆர். சேனாநாயக்க மாவத்தை, சி.டபிள்யூ.டபிள்யூ. கன்னங்கர மாவத்தை, ஹோர்டன் சுற்றுவட்டம், நந்தா மோட்டார்ஸ், சுதந்திர மாவத்தை, பிரேமசிறி கேமதாச மாவத்தை, கேம்பிரிட்ஜ் பிளேஸ், கிளாஸ் ஹவுஸ் சந்தி, மார்கஸ் பெர்னாண்டோ மாவத்தை, நூலக சந்தி, மலர் வீதி, பித்தளை சந்தி, ஜேம்ஸ் பீரிஸ் மாவத்தை, முத்தையா வீதி, பேபுரூக் வீதி, ஸ்டேபில் வீதி மற்றும் கங்காராம விகாரையைச் சூழவுள்ள வீதிகள். இக்காலப்பகுதியில் ஏற்படக்கூடிய போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், சாரதிகள் மற்றும் பொதுமக்கள் தங்களால் இயன்றவரை மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement