• Nov 26 2024

புதிய வருடத்தின் முதலாவது பாராளுமன்ற அமர்வு இன்று..! - கட்சி தாவல்கள் குறித்தும் பேச்சு

Chithra / Jan 9th 2024, 8:48 am
image

 

புதிய வருடத்தின் முதலாவது பாராளுமன்ற அமர்வு இன்று (09) சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடவுள்ளது.

பாராளுமன்றம் இந்த வாரம் 12 ஆம் திகதி வரை கூடவுள்ளதுடன், நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குமுறை அதிகாரசபை சட்டமூலம் இன்று (09) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.

வாடிக்கையாளர்களின் பாதுகாப்பையும், கடன் வழங்கும் வணிகத்தையும் உறுதி செய்வதே இங்கு எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதனைத் தொடர்ந்து பி.ப 05.00 மணி முதல் பி.ப 05.30 மணி வரை சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணை  மீதான விவாதம் நடைபெறவுள்ளது.

இதேவேளை இவ்வாரம் கட்சித்தாவல்கள் இடம்பெறும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஆளுங்கட்சியின் சிலர் ஐக்கிய மக்கள் சக்தியின் பக்கம் செல்ல நேற்றுவரை தீர்க்கமான பேச்சுகள் நடந்தன.

அதேபோல பொதுஜன பெரமுனவின் சில உறுப்பினர்கள் ரணிலுக்கு ஆதரவளிக்கும் நிமல் லான்சாவின் கூட்டணிக்கு ஆதரவை பாராளுமன்றில் வெளியிடும் வாய்ப்பு இருப்பதாகவும் அறியமுடிகின்றது.

எவ்வாறாயினும் ஜனாதிபதி ரணில் இன்று பாராளுமன்றத்திற்கு செல்லவுள்ளார்.அங்கு எதிர்க்கட்சி எம்.பிக்கள் சிலரை அவர் சந்திக்கவுள்ளாரென சொல்லப்பட்டது. 


புதிய வருடத்தின் முதலாவது பாராளுமன்ற அமர்வு இன்று. - கட்சி தாவல்கள் குறித்தும் பேச்சு  புதிய வருடத்தின் முதலாவது பாராளுமன்ற அமர்வு இன்று (09) சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடவுள்ளது.பாராளுமன்றம் இந்த வாரம் 12 ஆம் திகதி வரை கூடவுள்ளதுடன், நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குமுறை அதிகாரசபை சட்டமூலம் இன்று (09) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.வாடிக்கையாளர்களின் பாதுகாப்பையும், கடன் வழங்கும் வணிகத்தையும் உறுதி செய்வதே இங்கு எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.இதனைத் தொடர்ந்து பி.ப 05.00 மணி முதல் பி.ப 05.30 மணி வரை சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணை  மீதான விவாதம் நடைபெறவுள்ளது.இதேவேளை இவ்வாரம் கட்சித்தாவல்கள் இடம்பெறும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.ஆளுங்கட்சியின் சிலர் ஐக்கிய மக்கள் சக்தியின் பக்கம் செல்ல நேற்றுவரை தீர்க்கமான பேச்சுகள் நடந்தன.அதேபோல பொதுஜன பெரமுனவின் சில உறுப்பினர்கள் ரணிலுக்கு ஆதரவளிக்கும் நிமல் லான்சாவின் கூட்டணிக்கு ஆதரவை பாராளுமன்றில் வெளியிடும் வாய்ப்பு இருப்பதாகவும் அறியமுடிகின்றது.எவ்வாறாயினும் ஜனாதிபதி ரணில் இன்று பாராளுமன்றத்திற்கு செல்லவுள்ளார்.அங்கு எதிர்க்கட்சி எம்.பிக்கள் சிலரை அவர் சந்திக்கவுள்ளாரென சொல்லப்பட்டது. 

Advertisement

Advertisement

Advertisement