• Mar 26 2026

வர்த்தமானி கூட சரியாக வெளியிட முடியாத அரசு - பட்டதாரிகளுக்கு பாரிய அநீதி - சஜித் சீற்றம்!

shanu / Feb 8th 2026, 7:01 pm
image

தேசிய மக்கள் சக்தி அரசால் ஒரு குறிப்பிட்ட நோக்கத்துடன் வர்த்தமானி ஒன்றைக் கூட அச்சிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்று  எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குற்றம் சுமத்தியுள்ளார்.


ஆசிரியர் சேவைக்கான போட்டிப் பரீட்சைக்காக வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில், 2025 ஜூன் 30 ஆம் திகதிக்கு முன்னர் பட்டப்படிப்பை நிறைவு செய்தவர்களே தகுதியுடையவர்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர். இந்தத் தீர்மானத்தினால், அதற்குப் பின்னர் பட்டப்படிப்பை முடித்த பெருமளவான இளைஞர், யுவதிகளுக்குப் பாரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்று சஜித் சுட்டிக்காட்டியுள்ளார்


ஆசிரியர் சேவை வர்த்தமானியில் உள்ள குறைபாடுகள் குறித்து இன்று விசேட அறிவிப்பொன்றை விடுத்துள்ள அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்


"இந்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ள திகதியை நீடித்து, புதிய வர்த்தமானி அறிவித்தலை அரசு வெளியிட வேண்டும்.


வர்த்தமானிகளை வெளியிடுவதற்கு முன்னர் அரச தொழில் கோரும் பட்டதாரிகள் சங்கத்தின் உறுப்பினர்களது கருத்துக்களையும் கேட்டறியுமாறு அரசைக் கேட்டுக்கொள்கின்றேன்.


2025 டிசம்பர் மாதம் வரை பட்டப்படிப்பை நிறைவு செய்த அனைவரும் ஆசிரியர் சேவைப் பரீட்சைக்குத் தோற்றக் கூடிய வகையில் இந்த வர்த்தமானி திருத்தப்பட வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால் அது பட்டதாரிகளுக்கு இழைக்கப்படும் பாரிய அநீதியாகும்." - என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மேலும் தெரிவித்துள்ளார்.

வர்த்தமானி கூட சரியாக வெளியிட முடியாத அரசு - பட்டதாரிகளுக்கு பாரிய அநீதி - சஜித் சீற்றம் தேசிய மக்கள் சக்தி அரசால் ஒரு குறிப்பிட்ட நோக்கத்துடன் வர்த்தமானி ஒன்றைக் கூட அச்சிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்று  எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குற்றம் சுமத்தியுள்ளார்.ஆசிரியர் சேவைக்கான போட்டிப் பரீட்சைக்காக வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில், 2025 ஜூன் 30 ஆம் திகதிக்கு முன்னர் பட்டப்படிப்பை நிறைவு செய்தவர்களே தகுதியுடையவர்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர். இந்தத் தீர்மானத்தினால், அதற்குப் பின்னர் பட்டப்படிப்பை முடித்த பெருமளவான இளைஞர், யுவதிகளுக்குப் பாரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்று சஜித் சுட்டிக்காட்டியுள்ளார்ஆசிரியர் சேவை வர்த்தமானியில் உள்ள குறைபாடுகள் குறித்து இன்று விசேட அறிவிப்பொன்றை விடுத்துள்ள அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்"இந்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ள திகதியை நீடித்து, புதிய வர்த்தமானி அறிவித்தலை அரசு வெளியிட வேண்டும்.வர்த்தமானிகளை வெளியிடுவதற்கு முன்னர் அரச தொழில் கோரும் பட்டதாரிகள் சங்கத்தின் உறுப்பினர்களது கருத்துக்களையும் கேட்டறியுமாறு அரசைக் கேட்டுக்கொள்கின்றேன்.2025 டிசம்பர் மாதம் வரை பட்டப்படிப்பை நிறைவு செய்த அனைவரும் ஆசிரியர் சேவைப் பரீட்சைக்குத் தோற்றக் கூடிய வகையில் இந்த வர்த்தமானி திருத்தப்பட வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால் அது பட்டதாரிகளுக்கு இழைக்கப்படும் பாரிய அநீதியாகும்." - என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மேலும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement