• Nov 26 2024

யாழில் இடம்பெற்ற பன்னாட்டு கருத்தரங்க ஆய்வு மாநாடு...!

Sharmi / May 25th 2024, 12:59 pm
image

தமிழிலக்கியங்களில் சமூக அரசியல் பொருளாதார நிலை பன்னாட்டு கருத்தரங்க ஆய்வு மாநாடு கடந்த 15 ஆம் திகதி வாலை அம்மன் சனசமூக நிலையத்தில் இடம்பெற்றது.

திருநெல்வேலி முத்தமிழ் சங்கம்,வாலை அம்மன் சனசமூக நிலையம், அந்தமான் தமிழ் சங்கம், செம்மூதாய் பதிப்பகம்,வள்ளார் சன்மார்க்க சங்கம் பிரான்ஸ் இணைந்து இந் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்நிகழ்வில் பேராசிரியர்கள் , ஆய்வாளர்கள் பாரம்பரிய சிலம்ப மரியாதையுடன் அரங்கிற்கு  அழைத்து வரப்பட்டு தமிழ்த்தாய் வாழ்த்து நடன நிகழ்வை தொடர்ந்து அரங்க நிகழ்வுகள் ஆரம்பமானது. 

இந் நிகழ்வில் செஞ்சொற் செல்வர் ஆறு.திருமுருகன் , பேராசிரியர் வ.மகேஸ்வரன்,பேராசிரியர் விசாக ரூபன்,  யாழ் பல்கலைக்கழக தமிழ்த் துறை தலைவர் மற்றும் பேராசிரியர் கலாநிதி விக்னேஸ்வரி.பவனேசன் ஆகியோருடைய பிரசன்னத்துடன் உள்நாட்டு, வெளிநாட்டு ஆய்வாளர்களின் ஆய்வு அடங்கிய பனுவல் முத்தமிழ் சங்க வெளியீடாக வெளியிடப்பட்டது.

இதன்போது பைந்தமிழ் பாவலர், செந்தமிழ் பாவலர், வளர் தமிழ் ஆய்வாளர் ஆகிய விருதுகளும் வழங்கி கௌரவித்தமையை தொடர்ந்து பட்டிமன்ற நிகழ்வும் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.




யாழில் இடம்பெற்ற பன்னாட்டு கருத்தரங்க ஆய்வு மாநாடு. தமிழிலக்கியங்களில் சமூக அரசியல் பொருளாதார நிலை பன்னாட்டு கருத்தரங்க ஆய்வு மாநாடு கடந்த 15 ஆம் திகதி வாலை அம்மன் சனசமூக நிலையத்தில் இடம்பெற்றது.திருநெல்வேலி முத்தமிழ் சங்கம்,வாலை அம்மன் சனசமூக நிலையம், அந்தமான் தமிழ் சங்கம், செம்மூதாய் பதிப்பகம்,வள்ளார் சன்மார்க்க சங்கம் பிரான்ஸ் இணைந்து இந் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்.இந்நிகழ்வில் பேராசிரியர்கள் , ஆய்வாளர்கள் பாரம்பரிய சிலம்ப மரியாதையுடன் அரங்கிற்கு  அழைத்து வரப்பட்டு தமிழ்த்தாய் வாழ்த்து நடன நிகழ்வை தொடர்ந்து அரங்க நிகழ்வுகள் ஆரம்பமானது. இந் நிகழ்வில் செஞ்சொற் செல்வர் ஆறு.திருமுருகன் , பேராசிரியர் வ.மகேஸ்வரன்,பேராசிரியர் விசாக ரூபன்,  யாழ் பல்கலைக்கழக தமிழ்த் துறை தலைவர் மற்றும் பேராசிரியர் கலாநிதி விக்னேஸ்வரி.பவனேசன் ஆகியோருடைய பிரசன்னத்துடன் உள்நாட்டு, வெளிநாட்டு ஆய்வாளர்களின் ஆய்வு அடங்கிய பனுவல் முத்தமிழ் சங்க வெளியீடாக வெளியிடப்பட்டது.இதன்போது பைந்தமிழ் பாவலர், செந்தமிழ் பாவலர், வளர் தமிழ் ஆய்வாளர் ஆகிய விருதுகளும் வழங்கி கௌரவித்தமையை தொடர்ந்து பட்டிமன்ற நிகழ்வும் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement