முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் வடக்கு கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள, புலிபாய்ந்த கல் பகுதியில் தமிழ் மக்களின் பூர்வீக மீனவ வாடிகளை அகற்றிவிட்டு, அந்த இடத்தில் அனுமதிகள் எவற்றையும் பெறாது அத்துமீறி பெரும்பான்மை இனத்தவர்களால் அமைக்கப்பட்ட வாடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்திய நிலையில், கரைதுறைப்பற்று பிரதேசசெயலாளர் மஞ்சுளாதேவி சதீசன் குறித்த பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள வாடிகளை அகற்றுமாறு குறித்தபகுதியில் இன்று அறிவித்தலைக் காட்சிப்படுத்தியுள்ளார்.
அத்தோடு அப்பகுதியில் அத்துமீறி வாடி அமைத்த சந்தேகநபராக இனங்காணப்பட்ட W.L.நிசாந்த என்னும் பெரும்பான்மை இனத்தவருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படுமெனவும் கரைதுறைப்பற்று பிரதேசசெயலாளர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில்,
தமிழ் மீனவர்கள் பன்நெடுங்காலமாக மீன்பிடியில் ஈடுபட்டுவரும் முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் புலிபாய்ந்தகல் பகுதியை ஆக்கிரமித்து அங்கு வாடிஅமைப்பதற்கு பெரும்பான்மையின மீனவர்கள் தொடர்ந்து முனைப்பு காட்டிவருகின்றனர்.
அந்தவகையில் கடந்தவருடமும் அத்துமீறி குறித்த பகுதியில் வாடிஅமைப்பதற்கு சில மீனவர்கள் முயற்சி மேற்கொண்டிருந்தனர். இந் நிலையில் அப்பகுதி மீனவர்கள் மற்றும் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் ஆகியோர் இணைந்து குறித்த அத்துமீறல் நடவடிக்கையைத் தடுத்து நிறுத்தியிருந்தனர்.
இத்தகைய சூழலில் மீளவும், கடந்த 02.04.2025அன்று குறித்த புலிபாய்ந்தகல் பகுதியில் தென்னிலங்கையைச் சேர்ந்த சில பெரும்பான்மையின மீனவர்கள், முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களத்திடமோ, கரைதுறைப்பற்று பிரதேசசெயலக காணிப் பிரிவிடமோ எவ்வித அனுமதிகளையும் பெறாது அத்துமீறி வாடிகளை அமைத்திருந்தனர்.
அத்தோடு புலிபாய்ந்தகல் பகுதியில் பூர்வீகமாக மீன்பிடியில் ஈடுபடும் சில தமிழ் மீனவர்களின் வாடிகளை அடாவடித்தனமாக அகற்றியே இவ்வாறு தென்னிலங்கை பெரும்பான்மையின மீனவர்களால் வாடி அமைக்கப்பட்டுமிருந்தது.
அதேவேளை அப்பகுதியில் OFRP-A-5491 CHW என்னும் இலக்கமுடைய மீன்பிடிப் படகொன்றும் அனுமதி பெறப்படாமல் அப்பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.
இந் நிலையில் கொக்குத்தொடுவாய் கடற்றொழிலாளர் சங்கத்தின் அழைப்பை ஏற்று கடந்த 04.04.2025அன்று அப்பகுதிக்குச் சென்ற வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நிலமைகளைப் பார்வையிட்டதுடன், அப்பகுதியில் பெரும்பான்மையின தென்னிலங்கை மீனவர்களால் அத்துமீறி வாடி அமைக்கப்பட்டமைதொடர்பில் கரைதுறைப்பற்று காணி உத்தியோகத்ருக்கு தெரியப்படுத்தியதுடன் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினார்.
அதேவேளை கொக்குத்தொடுவாய் வடக்கு கிராம அலுவலரையும் உடனடியாக குறித்த இடத்திற்கு அழைத்து நிலமைகளைக் காண்பித்ததுடன் அவரிடமும் இதுதொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தியிருந்தார்.
அதனைத் தொடர்ந்து முல்லைத்தீவு கடற்றொழில் நீரியல் வளத்திணைக்கள உதவிப் பணிப்பாளர் க. மோகனகுமாருடனும் தொலைபேசியில் தொடர்பினை ஏற்படுத்தி, அனுமதியின்றி கரையே நிறுத்திவைக்கப்பட்டுள்ள படகுதொடர்பிலும் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தியிருந்தார்.
இந்நிலையில் குறித்த பகுதியில் அனுமதிகள் எவையும் பெறப்படாமல் அத்துமீறி அடாவடியாக தென்னிலங்கை மீனவர்களால் அமைக்கப்பட்டுள்ள வாடிகளை உடனடியாக அங்கிருந்து அகற்றுமாறு கரைதுறைப்பற்று பிரதேசசெயலக்காணிப் பிரிவால் அப்பகுதியில் துண்டுப்பிரசுரம் காட்சிப்படுத்தப்படுமென கரைதுறைப்பற்று பிரதேசசெயலக காணி உத்தியோகத்தரால் நாடாளுமன்ற உறுப்பினரிடம் தெரிவிக்கப்பட்டிருந்ததுடன், கொக்குத்தொடுவாய் கிராம அலுவலரும் இது தொடர்பில் உரிய இடங்களுக்கு தாம் தெரியப்படுத்துவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினரிடம் தெரிவித்திருந்தார்.
அத்தோடு அனுமதிபெறப்படாது கரையே நிறுத்திவைக்கப்பட்டுள்ள குறித்த படகுதொடர்பில் தம்மால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்திணைக்கள உதவிப்பணிப்பாளர் க.மோகனகுமார் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களிம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் 11.04.2025 இன்றையதினம் குறித்த விடயம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்து கரைதுறைப்பற்று பிரதேச செயலக காணி உத்தியோகத்தருக்கு தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தி கேட்டதுடன், உடனடியாக புலிபாய்ந்த கல் பகுதியில் சட்ட விரோதமாக அமைக்கப்பட்ட வாடியை அகற்ற அப்பகுதியில் அறிவித்தல்களை காட்சிப்படுத்துமாறும் வலியுறுத்தினார்.
இதனைத்தொடர்ந்து வன்னிமாட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், கரைதுறைப்பற்று பிரதேசசெயலாளர் திருமதி.மஞ்சுளாதேவி சதீசன், கரைதுறைப்பற்று காணி உத்தியோகத்தர், கரைதுறைப்பற்று மேலதிக பிரதேசசெயலாளர், கொக்குத்தொடுவாய் வடக்கு கிராமஅலுவலர் ஜெயபாலகுணசேகரன் சுஜீனோ ஆகியோர் குறித்த பகுதிக்கு நேரடியாகச் சென்று நிலமைகளைப் பார்வையிட்டிருந்தனர்.
இந் நிலையில் குறித்த பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட சிலவாடிகள் முழுமையாகவும், சிலவாடிகள் பகுதியளவிலும் அகற்றப்பட்டுக் காணப்பட்டிருந்தன.
இவ்வாறு குறித்த பகுதிக்கு களவிஜயம் மேற்கொண்டிருந்தவர்கள் அங்குள்ள நிலைமைகளை அவதானித்தனர்.
அதனைத் தொடர்ந்து கரைதுறைப்பற்று பிரதேசசெயலாளரால் குறித்தபகுதியில் சட்டவிரோத மாக அமைக்கப்பட்டுள்ள வாடிகளை முழுமையாக அகற்றுமாறு அறிவித்தல்களும் அப்பகுதியில் காட்சிப்படுத்தப்பட்டன.
கரைதுறைப்பற்று பிரதேச செயலாளரால் அப்பகுதியில் காட்சிப்படுத்தப்பட்ட குறித்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,
" கொக்குத்தொடுவாய் வடக்கு கிராமஅலுவலர் பிரிவில் அமைந்துள்ள புலிபாய்ந்தகல் பிரதேசத்தில் காணப்படும் இக்காணியானது அரச காணியாகக் காணப்படுவதால் இப்பிரதேசத்தில் எமது அனுமதியின்றி வாடிகள் அமைத்தல் மற்றும் எவ்விதமான கட்டுமானப் பணிகளும் மேற்கொள்ளவேண்டாம் என்பதனை தெரிவித்துக்கொள்வதுடன் மீறி வாடிகள், கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டில் தங்கள்மீது சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதை தங்களுக்கு தயவுடன் அறியத்தருகின்றேன்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந் நிலையில் குறித்த பகுதிக்கு வருகைதந்த W.L.நிசாந்த என்பவர் தாமே அப்பகுதியில் வாடி அமைத்ததாகத் தெரிவித்தார்.
இந் நிலையில் அரச காணியில் அனுமதியின்றி எவ்வாறு வாடி அமைத்தீர்கள் என குறித்த நபரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மற்றும், பிரதேசசெயலாளர் ஆகியோர் கேள்வி எழுப்பியதுடன், கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் குறித்த நபரிடம் பெயர் விபரங்களைப் பெற்றதுடன் அவருக்கெதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படுமெனவும் தெரிவித்தார்.
அத்தோடு குறித்த பகுதியில் அனுமதியின்றி நிறுத்திவைக்கப்பட்டுள்ள படகுக்குரிய சட்டநடவடிக்கையை விரைந்து மேற்கொள்ளுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத் திணைக்கள உதவிப் பணிப்பாளரிடம் தொலைபேசியூடாக வலியுறுத்தியிருந்தார். இந்நிலையில் அதற்குரிய சட்டநடவடிக்கை விரைந்து மேற்கொள்ளப்படுமென முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் நீரியல் வளத் திணைக்கள உதவிப்பணிப்பாளர் இதன்போது தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
புலிபாய்ந்தகல்லில் பெரும்பான்மை இனத்தவர் அத்துமீறி வாடி அமைத்த விவகாரம்; அகற்றுமாறு பிரதேசசெயலர் அறிவிப்பு முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் வடக்கு கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள, புலிபாய்ந்த கல் பகுதியில் தமிழ் மக்களின் பூர்வீக மீனவ வாடிகளை அகற்றிவிட்டு, அந்த இடத்தில் அனுமதிகள் எவற்றையும் பெறாது அத்துமீறி பெரும்பான்மை இனத்தவர்களால் அமைக்கப்பட்ட வாடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்திய நிலையில், கரைதுறைப்பற்று பிரதேசசெயலாளர் மஞ்சுளாதேவி சதீசன் குறித்த பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள வாடிகளை அகற்றுமாறு குறித்தபகுதியில் இன்று அறிவித்தலைக் காட்சிப்படுத்தியுள்ளார். அத்தோடு அப்பகுதியில் அத்துமீறி வாடி அமைத்த சந்தேகநபராக இனங்காணப்பட்ட W.L.நிசாந்த என்னும் பெரும்பான்மை இனத்தவருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படுமெனவும் கரைதுறைப்பற்று பிரதேசசெயலாளர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில், தமிழ் மீனவர்கள் பன்நெடுங்காலமாக மீன்பிடியில் ஈடுபட்டுவரும் முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் புலிபாய்ந்தகல் பகுதியை ஆக்கிரமித்து அங்கு வாடிஅமைப்பதற்கு பெரும்பான்மையின மீனவர்கள் தொடர்ந்து முனைப்பு காட்டிவருகின்றனர். அந்தவகையில் கடந்தவருடமும் அத்துமீறி குறித்த பகுதியில் வாடிஅமைப்பதற்கு சில மீனவர்கள் முயற்சி மேற்கொண்டிருந்தனர். இந் நிலையில் அப்பகுதி மீனவர்கள் மற்றும் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் ஆகியோர் இணைந்து குறித்த அத்துமீறல் நடவடிக்கையைத் தடுத்து நிறுத்தியிருந்தனர். இத்தகைய சூழலில் மீளவும், கடந்த 02.04.2025அன்று குறித்த புலிபாய்ந்தகல் பகுதியில் தென்னிலங்கையைச் சேர்ந்த சில பெரும்பான்மையின மீனவர்கள், முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களத்திடமோ, கரைதுறைப்பற்று பிரதேசசெயலக காணிப் பிரிவிடமோ எவ்வித அனுமதிகளையும் பெறாது அத்துமீறி வாடிகளை அமைத்திருந்தனர். அத்தோடு புலிபாய்ந்தகல் பகுதியில் பூர்வீகமாக மீன்பிடியில் ஈடுபடும் சில தமிழ் மீனவர்களின் வாடிகளை அடாவடித்தனமாக அகற்றியே இவ்வாறு தென்னிலங்கை பெரும்பான்மையின மீனவர்களால் வாடி அமைக்கப்பட்டுமிருந்தது. அதேவேளை அப்பகுதியில் OFRP-A-5491 CHW என்னும் இலக்கமுடைய மீன்பிடிப் படகொன்றும் அனுமதி பெறப்படாமல் அப்பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. இந் நிலையில் கொக்குத்தொடுவாய் கடற்றொழிலாளர் சங்கத்தின் அழைப்பை ஏற்று கடந்த 04.04.2025அன்று அப்பகுதிக்குச் சென்ற வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நிலமைகளைப் பார்வையிட்டதுடன், அப்பகுதியில் பெரும்பான்மையின தென்னிலங்கை மீனவர்களால் அத்துமீறி வாடி அமைக்கப்பட்டமைதொடர்பில் கரைதுறைப்பற்று காணி உத்தியோகத்ருக்கு தெரியப்படுத்தியதுடன் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினார்.அதேவேளை கொக்குத்தொடுவாய் வடக்கு கிராம அலுவலரையும் உடனடியாக குறித்த இடத்திற்கு அழைத்து நிலமைகளைக் காண்பித்ததுடன் அவரிடமும் இதுதொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தியிருந்தார். அதனைத் தொடர்ந்து முல்லைத்தீவு கடற்றொழில் நீரியல் வளத்திணைக்கள உதவிப் பணிப்பாளர் க. மோகனகுமாருடனும் தொலைபேசியில் தொடர்பினை ஏற்படுத்தி, அனுமதியின்றி கரையே நிறுத்திவைக்கப்பட்டுள்ள படகுதொடர்பிலும் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தியிருந்தார். இந்நிலையில் குறித்த பகுதியில் அனுமதிகள் எவையும் பெறப்படாமல் அத்துமீறி அடாவடியாக தென்னிலங்கை மீனவர்களால் அமைக்கப்பட்டுள்ள வாடிகளை உடனடியாக அங்கிருந்து அகற்றுமாறு கரைதுறைப்பற்று பிரதேசசெயலக்காணிப் பிரிவால் அப்பகுதியில் துண்டுப்பிரசுரம் காட்சிப்படுத்தப்படுமென கரைதுறைப்பற்று பிரதேசசெயலக காணி உத்தியோகத்தரால் நாடாளுமன்ற உறுப்பினரிடம் தெரிவிக்கப்பட்டிருந்ததுடன், கொக்குத்தொடுவாய் கிராம அலுவலரும் இது தொடர்பில் உரிய இடங்களுக்கு தாம் தெரியப்படுத்துவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினரிடம் தெரிவித்திருந்தார். அத்தோடு அனுமதிபெறப்படாது கரையே நிறுத்திவைக்கப்பட்டுள்ள குறித்த படகுதொடர்பில் தம்மால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்திணைக்கள உதவிப்பணிப்பாளர் க.மோகனகுமார் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களிம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் 11.04.2025 இன்றையதினம் குறித்த விடயம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்து கரைதுறைப்பற்று பிரதேச செயலக காணி உத்தியோகத்தருக்கு தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தி கேட்டதுடன், உடனடியாக புலிபாய்ந்த கல் பகுதியில் சட்ட விரோதமாக அமைக்கப்பட்ட வாடியை அகற்ற அப்பகுதியில் அறிவித்தல்களை காட்சிப்படுத்துமாறும் வலியுறுத்தினார். இதனைத்தொடர்ந்து வன்னிமாட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், கரைதுறைப்பற்று பிரதேசசெயலாளர் திருமதி.மஞ்சுளாதேவி சதீசன், கரைதுறைப்பற்று காணி உத்தியோகத்தர், கரைதுறைப்பற்று மேலதிக பிரதேசசெயலாளர், கொக்குத்தொடுவாய் வடக்கு கிராமஅலுவலர் ஜெயபாலகுணசேகரன் சுஜீனோ ஆகியோர் குறித்த பகுதிக்கு நேரடியாகச் சென்று நிலமைகளைப் பார்வையிட்டிருந்தனர். இந் நிலையில் குறித்த பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட சிலவாடிகள் முழுமையாகவும், சிலவாடிகள் பகுதியளவிலும் அகற்றப்பட்டுக் காணப்பட்டிருந்தன. இவ்வாறு குறித்த பகுதிக்கு களவிஜயம் மேற்கொண்டிருந்தவர்கள் அங்குள்ள நிலைமைகளை அவதானித்தனர். அதனைத் தொடர்ந்து கரைதுறைப்பற்று பிரதேசசெயலாளரால் குறித்தபகுதியில் சட்டவிரோத மாக அமைக்கப்பட்டுள்ள வாடிகளை முழுமையாக அகற்றுமாறு அறிவித்தல்களும் அப்பகுதியில் காட்சிப்படுத்தப்பட்டன. கரைதுறைப்பற்று பிரதேச செயலாளரால் அப்பகுதியில் காட்சிப்படுத்தப்பட்ட குறித்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, " கொக்குத்தொடுவாய் வடக்கு கிராமஅலுவலர் பிரிவில் அமைந்துள்ள புலிபாய்ந்தகல் பிரதேசத்தில் காணப்படும் இக்காணியானது அரச காணியாகக் காணப்படுவதால் இப்பிரதேசத்தில் எமது அனுமதியின்றி வாடிகள் அமைத்தல் மற்றும் எவ்விதமான கட்டுமானப் பணிகளும் மேற்கொள்ளவேண்டாம் என்பதனை தெரிவித்துக்கொள்வதுடன் மீறி வாடிகள், கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டில் தங்கள்மீது சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதை தங்களுக்கு தயவுடன் அறியத்தருகின்றேன்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந் நிலையில் குறித்த பகுதிக்கு வருகைதந்த W.L.நிசாந்த என்பவர் தாமே அப்பகுதியில் வாடி அமைத்ததாகத் தெரிவித்தார். இந் நிலையில் அரச காணியில் அனுமதியின்றி எவ்வாறு வாடி அமைத்தீர்கள் என குறித்த நபரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மற்றும், பிரதேசசெயலாளர் ஆகியோர் கேள்வி எழுப்பியதுடன், கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் குறித்த நபரிடம் பெயர் விபரங்களைப் பெற்றதுடன் அவருக்கெதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படுமெனவும் தெரிவித்தார். அத்தோடு குறித்த பகுதியில் அனுமதியின்றி நிறுத்திவைக்கப்பட்டுள்ள படகுக்குரிய சட்டநடவடிக்கையை விரைந்து மேற்கொள்ளுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத் திணைக்கள உதவிப் பணிப்பாளரிடம் தொலைபேசியூடாக வலியுறுத்தியிருந்தார். இந்நிலையில் அதற்குரிய சட்டநடவடிக்கை விரைந்து மேற்கொள்ளப்படுமென முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் நீரியல் வளத் திணைக்கள உதவிப்பணிப்பாளர் இதன்போது தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.