வலிந்து காணாமலாக்கப்பட்ட எமது உறவுகளுக்கான நீதியானது தற்போது ஆட்சிப்பீடம் ஏறியுள்ள அநுர தலைமையிலான அரசாங்கத்திலும் கிடைக்காது என மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவி அ.அமலநாயகி தெரிவித்துள்ளார்.
யாழில் இன்றையதினம்(07) காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்
ஜனாதிபதி அநுர தான் இன்னுமொரு ஐந்து வருடங்கள் ஆட்சியிலிருப்பதறகாக பாதிக்கப்பட்ட எங்களுடைய பிரச்சனைகளை கதைக்காமல் அபிவிருத்தியை நோக்கியே செல்கின்றார்.
காணாமலாக்கப்பட்டோர்களின் விடயங்கள் சார்பாக அசமந்தப் போக்குடனே செயற்படுகின்றார்.
ஆட்சிக்கு வரமுன்னர் ஒரு மாதிரியான கருத்தும், ஆட்சிபீடத்தில் ஏறியதன் பிற்பாடு இன்னொரு விதமாக கதைக்கிறார்.
சர்வதேச விசாரணைக்கு இடமளிக்க மாட்டோம் என்றும் யுத்த குற்ற ஆதாரங்களை சேகரிக்க இடமளிக்க மாட்டோம் என்பதையும் இவ் அரசு குறிப்பிடுகிறது.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் ஊடாகத்தான் எமது உறவுகளை வலிந்து காணாமலாக்கப்பட்டார்கள்.
அந்த தடைச்சட்டத்தை நீக்கப் போவதில்லை என உறுதியாகவும் இலங்கைப் போர்க்குற்றவாளிகளை எக்காரணம் கொண்டும் தண்டிக்க மாட்டோம் என புதிய ஜனாதிபதி கூறிக்கொண்டு இருக்கின்றார்.
இப்படியான அரசினால் எங்களுக்கு தீர்வு கிடைக்கும் என்பதில் எமக்கு நம்பிக்கை இல்லை.
ஜனாதிபதி படிப்படியாகத்தான் காணாமலாக்கப்பட்வர்கள் தொடர்பான விடயத்தை கையாள முடியும் என்று .தமிழ் கட்சிக்காரர்களுடன் கதைத்த வேளையிலே கூறியுள்ளார்.
இவர் தனது ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதற்கான தந்திரோபாயத்தை மேற்கொள்கின்றார்.
ஆனால் ஒரு தமிழ் இனமாக ஏமாற்றப்பட்ட இனமாக 15 வருடங்களாக எங்களுடைய உறவுகளைத் தேடி கண்ணீருடன் அலைந்து கொண்டிருப்பது எந்தவொரு சிங்கள அரசிற்கும் விளங்கப் போவதுமில்லை தீர்வு கிடைக்கப் போவதுமில்லை.
இந்த நேரத்தில் இலங்கை அரசு குற்றம் செய்தவர்களை விசாரிக்க மாட்டோம் என உறுதியளித்திருக்கிறார்கள்.
எங்களுடைய உறவுகளை இராணுவத்தின் கைகளில் கொடுத்து விட்டு அவர்களை விசாரிக்க மாட்டோம் என்றால் எங்களுக்கான தீர்வு எங்கே? அது எப்போதுமே கிடைக்கப்போவதுமில்லை என்பதையே ஜனாதிபதி மறைமுகமாக சொல்கிறார்.
எங்களுடைய இனம் அழிந்ததிற்கு தமிழருக்கு நடந்த கொடுமைக்கு அநுர அரசும் பதில் சொல்லாது என்பதை மறைமுகமாகவும் நேரடியாகவும் சொல்லிக் கொள்கிறார்கள்.
ஆகவே, இந்த மாயைக்குள் சர்வதேசமும் மூழ்கிப் போகாமல் எமக்கான தீர்வினை பெற்றுத்தர வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்
காணாமலாக்கப்பட்டோர் விவகாரத்திற்கு அநுர அரசாங்கத்திலும் தீர்வு கிடைக்காது- அமலநாயகி ஆதங்கம். வலிந்து காணாமலாக்கப்பட்ட எமது உறவுகளுக்கான நீதியானது தற்போது ஆட்சிப்பீடம் ஏறியுள்ள அநுர தலைமையிலான அரசாங்கத்திலும் கிடைக்காது என மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவி அ.அமலநாயகி தெரிவித்துள்ளார்.யாழில் இன்றையதினம்(07) காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ஜனாதிபதி அநுர தான் இன்னுமொரு ஐந்து வருடங்கள் ஆட்சியிலிருப்பதறகாக பாதிக்கப்பட்ட எங்களுடைய பிரச்சனைகளை கதைக்காமல் அபிவிருத்தியை நோக்கியே செல்கின்றார். காணாமலாக்கப்பட்டோர்களின் விடயங்கள் சார்பாக அசமந்தப் போக்குடனே செயற்படுகின்றார். ஆட்சிக்கு வரமுன்னர் ஒரு மாதிரியான கருத்தும், ஆட்சிபீடத்தில் ஏறியதன் பிற்பாடு இன்னொரு விதமாக கதைக்கிறார்.சர்வதேச விசாரணைக்கு இடமளிக்க மாட்டோம் என்றும் யுத்த குற்ற ஆதாரங்களை சேகரிக்க இடமளிக்க மாட்டோம் என்பதையும் இவ் அரசு குறிப்பிடுகிறது. பயங்கரவாத தடைச்சட்டத்தின் ஊடாகத்தான் எமது உறவுகளை வலிந்து காணாமலாக்கப்பட்டார்கள். அந்த தடைச்சட்டத்தை நீக்கப் போவதில்லை என உறுதியாகவும் இலங்கைப் போர்க்குற்றவாளிகளை எக்காரணம் கொண்டும் தண்டிக்க மாட்டோம் என புதிய ஜனாதிபதி கூறிக்கொண்டு இருக்கின்றார். இப்படியான அரசினால் எங்களுக்கு தீர்வு கிடைக்கும் என்பதில் எமக்கு நம்பிக்கை இல்லை. ஜனாதிபதி படிப்படியாகத்தான் காணாமலாக்கப்பட்வர்கள் தொடர்பான விடயத்தை கையாள முடியும் என்று .தமிழ் கட்சிக்காரர்களுடன் கதைத்த வேளையிலே கூறியுள்ளார்.இவர் தனது ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதற்கான தந்திரோபாயத்தை மேற்கொள்கின்றார். ஆனால் ஒரு தமிழ் இனமாக ஏமாற்றப்பட்ட இனமாக 15 வருடங்களாக எங்களுடைய உறவுகளைத் தேடி கண்ணீருடன் அலைந்து கொண்டிருப்பது எந்தவொரு சிங்கள அரசிற்கும் விளங்கப் போவதுமில்லை தீர்வு கிடைக்கப் போவதுமில்லை. இந்த நேரத்தில் இலங்கை அரசு குற்றம் செய்தவர்களை விசாரிக்க மாட்டோம் என உறுதியளித்திருக்கிறார்கள். எங்களுடைய உறவுகளை இராணுவத்தின் கைகளில் கொடுத்து விட்டு அவர்களை விசாரிக்க மாட்டோம் என்றால் எங்களுக்கான தீர்வு எங்கே அது எப்போதுமே கிடைக்கப்போவதுமில்லை என்பதையே ஜனாதிபதி மறைமுகமாக சொல்கிறார். எங்களுடைய இனம் அழிந்ததிற்கு தமிழருக்கு நடந்த கொடுமைக்கு அநுர அரசும் பதில் சொல்லாது என்பதை மறைமுகமாகவும் நேரடியாகவும் சொல்லிக் கொள்கிறார்கள். ஆகவே, இந்த மாயைக்குள் சர்வதேசமும் மூழ்கிப் போகாமல் எமக்கான தீர்வினை பெற்றுத்தர வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்