• May 02 2024

ஒரு வருடகாலமாக இருளில் மூழ்கியுள்ள இலங்கையின் முக்கிய பகுதி..! பெரும் அவலம்

Chithra / Mar 6th 2024, 10:07 am
image

Advertisement

 

அநுராதபுரம் மாவட்டத்தின் பல கிராமங்கள், மின் துண்டிப்பு காரணமாக இருளில் மூழ்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அநுராதபுரம் மாவட்டத்தின் மஹவிலச்சிய பிரதேச செயலகப் பிரிவில் உள்ள தந்திரிமலை, இஹல கோனவெவ, குடாகம, தம்பியாவ, நிகவெவ, தங்கஸ்வெவ போன்ற கிராமங்களே இவ்வாறு இருளில் மூழ்கியுள்ளன.

இங்குள்ள மக்கள் மிகவும் குறைந்த வருமானத்தைக் கொண்டுள்ளதுடன், நாளொன்றுக்கு ஒரு தடவை மாத்திரமே உணவு உட்கொள்ளக்கூடிய அளவுக்கு மிகவும் ஏழைகளாக உள்ளனர்.

அதன் காரணமாக அவர்களால் மின்சாரக் கட்டணத்தைச் செலுத்த முடியாத நிலையில் கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக மேற்குறித்த கிராமத்தின் ஒட்டுமொத்த வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

மின்சாரத்தை மீண்டும் பெற்றுக்கொள்ள வழியற்ற குறித்த கிராம மக்கள் குப்பி விளக்கு வௌிச்சத்தின் உதவியுடன் கடந்த ஒரு வருடகாலமாக இரவுகளைக் கழித்துக் கொண்டிருப்பதாக தெரியவந்துள்ளது.

ஒரு வருடகாலமாக இருளில் மூழ்கியுள்ள இலங்கையின் முக்கிய பகுதி. பெரும் அவலம்  அநுராதபுரம் மாவட்டத்தின் பல கிராமங்கள், மின் துண்டிப்பு காரணமாக இருளில் மூழ்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.அநுராதபுரம் மாவட்டத்தின் மஹவிலச்சிய பிரதேச செயலகப் பிரிவில் உள்ள தந்திரிமலை, இஹல கோனவெவ, குடாகம, தம்பியாவ, நிகவெவ, தங்கஸ்வெவ போன்ற கிராமங்களே இவ்வாறு இருளில் மூழ்கியுள்ளன.இங்குள்ள மக்கள் மிகவும் குறைந்த வருமானத்தைக் கொண்டுள்ளதுடன், நாளொன்றுக்கு ஒரு தடவை மாத்திரமே உணவு உட்கொள்ளக்கூடிய அளவுக்கு மிகவும் ஏழைகளாக உள்ளனர்.அதன் காரணமாக அவர்களால் மின்சாரக் கட்டணத்தைச் செலுத்த முடியாத நிலையில் கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக மேற்குறித்த கிராமத்தின் ஒட்டுமொத்த வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.மின்சாரத்தை மீண்டும் பெற்றுக்கொள்ள வழியற்ற குறித்த கிராம மக்கள் குப்பி விளக்கு வௌிச்சத்தின் உதவியுடன் கடந்த ஒரு வருடகாலமாக இரவுகளைக் கழித்துக் கொண்டிருப்பதாக தெரியவந்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement