• Feb 04 2025

கனடாவில் அதிக அளவில் களவாடப்படும் அலைபேசிகள்!

Tharmini / Feb 3rd 2025, 12:54 pm
image

கனடாவில் அதிக எண்ணிக்கையிலான அலைபேசிகள் களவாடப்படுவதாக அல்லது காணாமல் போவதாக தெரிவிக்கப்படுகிறது. 

கனடாவின் ரொறன்ரோவில் அமைந்துள்ள முன்னணி அலைபேசி விற்பனை நிலையங்களில் இவ்வாறு அலைபேசிகள் களவாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

கடந்த நவம்பர் மாதம் முதல் இதுவரையில் ஹால்டன் பிராந்தியத்தில் மட்டும் சுமார் 100க்கும் மேற்பட்ட அலைபேசிகள் களவாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவங்கள் தொடர்பில் ஹால்டன் போலீசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

காணாமல் போன அலைபேசிகளுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

சி சி டிவி காணொளிகள் மூலம் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

அலைபேசிகள் எவ்வாறு களவாடப்படுகின்றன என்பது குறித்த காணொளிகளும் வெளியிடப்பட்டுள்ளன.

குழுவாக கடைகளுக்குள் பிரவேசித்து கடை விற்பனையாளர்களின் கவனத்தை திசை திருப்பி அலைபேசிகள் களவாடப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

மிகவும் நூதனமான முறையில் சில நொடிகளில் அலைபேசிகள் களவாடப்பட்டு சந்தேகம் இன்றி கடையை வெட்டு வெளியேறி சென்று விடுவதாக தெரிவிக்கப்படுகிறது.

கனடாவில் அதிக அளவில் களவாடப்படும் அலைபேசிகள் கனடாவில் அதிக எண்ணிக்கையிலான அலைபேசிகள் களவாடப்படுவதாக அல்லது காணாமல் போவதாக தெரிவிக்கப்படுகிறது. கனடாவின் ரொறன்ரோவில் அமைந்துள்ள முன்னணி அலைபேசி விற்பனை நிலையங்களில் இவ்வாறு அலைபேசிகள் களவாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த நவம்பர் மாதம் முதல் இதுவரையில் ஹால்டன் பிராந்தியத்தில் மட்டும் சுமார் 100க்கும் மேற்பட்ட அலைபேசிகள் களவாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இந்த சம்பவங்கள் தொடர்பில் ஹால்டன் போலீசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.காணாமல் போன அலைபேசிகளுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.சி சி டிவி காணொளிகள் மூலம் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.அலைபேசிகள் எவ்வாறு களவாடப்படுகின்றன என்பது குறித்த காணொளிகளும் வெளியிடப்பட்டுள்ளன.குழுவாக கடைகளுக்குள் பிரவேசித்து கடை விற்பனையாளர்களின் கவனத்தை திசை திருப்பி அலைபேசிகள் களவாடப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.மிகவும் நூதனமான முறையில் சில நொடிகளில் அலைபேசிகள் களவாடப்பட்டு சந்தேகம் இன்றி கடையை வெட்டு வெளியேறி சென்று விடுவதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement