இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைமைக்கான வேட்பாளர்களில் சுமந்திரன் மற்றும் சிறீதரன் ஆகியோர் ஏட்டிக்குப் போட்டியான பிரசாரங்களில் ஈடுபட்டு வருவதாக தெரியவருகின்றது.
இந்நிலையில், கட்சியின் தற்போதைய தலைவர் மாவை.சோ.சேனாதிராஜாவின் கோரிக்கைக்கு அமைவாக எதிர்வரும் 20ஆம் திருகோணமலையில் மத்திய குழு கூட்டத்தினைக் கூட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இலங்கை தமிழரசுக்கட்சியின் புதிய தலைமைக்கான தெரிவு எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ளது.
சுமந்திரன், சிறீதரன், யோகேஸ்வரன் ஆகியோர் இடையே மும்முனைப் போட்டி நிலவுவதால் பொதுச்சபை உறுப்பினர்களின் மூலம் இரகசிய வாக்கெடுப்பின் ஊடாக தலைமைத் தெரிவு நடைபெறவுள்ளது.
தற்போது வாக்களிப்பதற்கான அட்டைகள் அச்சிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதோடு, வாக்கெடுப்புக்கான ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறான நிலையில், தலைமைக்கு போட்டியிடுகின்ற வேட்பாளர்களில் சுமந்திரன், மற்றும் சிறீதரன் ஆகியோர் வடக்கு, கிழக்கில் உள்ள எட்டு மாவட்டங்களிலும் ஏட்டிக்குப் போட்டியான பிரசாரங்களை ஆரம்பித்துள்ளனர்.
நேற்றுமுன்தினம் சுமந்திரன் திருகோணமலைக்குச்சென்று கூட்டங்களை நடத்தியிருந்த நிலையில் சிறீதரன் நேற்று (13) திருகோணமலைக்குச் சென்று கூட்டங்களை நடத்தியுள்ளதாக தெரியவருகின்றது.
இதனையடுத்து ஏனைய மாவட்டங்களிலும் அவ்விதமான கூட்டங்களுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
தமிழரசுக் கட்சியின் புதிய தலைமை - ஏட்டிக்குப் போட்டியாக பிரசாரங்களில் ஈடுபட்டுவரும் வேட்பாளர்கள். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைமைக்கான வேட்பாளர்களில் சுமந்திரன் மற்றும் சிறீதரன் ஆகியோர் ஏட்டிக்குப் போட்டியான பிரசாரங்களில் ஈடுபட்டு வருவதாக தெரியவருகின்றது.இந்நிலையில், கட்சியின் தற்போதைய தலைவர் மாவை.சோ.சேனாதிராஜாவின் கோரிக்கைக்கு அமைவாக எதிர்வரும் 20ஆம் திருகோணமலையில் மத்திய குழு கூட்டத்தினைக் கூட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.இலங்கை தமிழரசுக்கட்சியின் புதிய தலைமைக்கான தெரிவு எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ளது.சுமந்திரன், சிறீதரன், யோகேஸ்வரன் ஆகியோர் இடையே மும்முனைப் போட்டி நிலவுவதால் பொதுச்சபை உறுப்பினர்களின் மூலம் இரகசிய வாக்கெடுப்பின் ஊடாக தலைமைத் தெரிவு நடைபெறவுள்ளது.தற்போது வாக்களிப்பதற்கான அட்டைகள் அச்சிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதோடு, வாக்கெடுப்புக்கான ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.இவ்வாறான நிலையில், தலைமைக்கு போட்டியிடுகின்ற வேட்பாளர்களில் சுமந்திரன், மற்றும் சிறீதரன் ஆகியோர் வடக்கு, கிழக்கில் உள்ள எட்டு மாவட்டங்களிலும் ஏட்டிக்குப் போட்டியான பிரசாரங்களை ஆரம்பித்துள்ளனர். நேற்றுமுன்தினம் சுமந்திரன் திருகோணமலைக்குச்சென்று கூட்டங்களை நடத்தியிருந்த நிலையில் சிறீதரன் நேற்று (13) திருகோணமலைக்குச் சென்று கூட்டங்களை நடத்தியுள்ளதாக தெரியவருகின்றது.இதனையடுத்து ஏனைய மாவட்டங்களிலும் அவ்விதமான கூட்டங்களுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.