• Jul 05 2025

உள்ளூராட்சி மன்றங்களைக் கைப்பற்றும் புதிய எதிர்க்கட்சி கூட்டணி ஜனநாயக விரோதமானது - சம்பிக்க சுட்டிக்காட்டு

Chithra / May 20th 2025, 10:22 am
image


உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியமைப்பதற்கு எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து புதிதாக ஸ்தாபிக்கப்படும் புதிய அரசியல் கூட்டணி முற்றிலும் தவறானது.  இந்த செயற்பாட்டில் நாங்கள் பங்காளியாக போவதில்லை என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். 

கொழும்பில் உள்ள ஐக்கிய குடியரசு முன்னணியின் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

நடைபெற்று முடிந்த உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் ஆளுங்கட்சியான தேசிய மக்கள் சக்திக்கு பெரும்பான்மை பலம் கிடைக்கப் பெற்றுள்ளது. மக்களாணைக்கு அமைய அந்த கட்சி உள்ளுராட்சிமன்ற அதிகாரசபைகளில் ஆட்சியமைக்க இடமளிக்க வேண்டும். 

அரசாங்கத்தை நெருக்கடிக்குள்ளாக்குவதாக குறிப்பிட்டுக் கொண்டு தேசிய மக்கள் சக்தியை நெருக்கடிக்குள்ளாக்கும் செயற்பாடுகளுக்கு நாங்கள் ஒத்துழைப்பு வழங்க போவதில்லை.

பாராளுமன்றத்தின் அதிகாரத்தை மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு வழங்கியுள்ளார்கள். அதுபோலவே தேசிய மக்கள் சக்தி வெற்றிப்பெற்றுள்ள 265 உள்ளுராட்சிமன்றங்களில் ஆட்சியமைக்க இடமளிக்க வேண்டும்.

எதிர்க்கட்சிகளின் புதிய அரசியல் கூட்டணியில் நாங்கள் பங்காளியாக போவதில்லை ஏனெனில் அது தவறு ஜனநாயக கோட்பாடுகளுக்கு முரணானது. என்றார்.

உள்ளூராட்சி மன்றங்களைக் கைப்பற்றும் புதிய எதிர்க்கட்சி கூட்டணி ஜனநாயக விரோதமானது - சம்பிக்க சுட்டிக்காட்டு உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியமைப்பதற்கு எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து புதிதாக ஸ்தாபிக்கப்படும் புதிய அரசியல் கூட்டணி முற்றிலும் தவறானது.  இந்த செயற்பாட்டில் நாங்கள் பங்காளியாக போவதில்லை என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். கொழும்பில் உள்ள ஐக்கிய குடியரசு முன்னணியின் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.நடைபெற்று முடிந்த உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் ஆளுங்கட்சியான தேசிய மக்கள் சக்திக்கு பெரும்பான்மை பலம் கிடைக்கப் பெற்றுள்ளது. மக்களாணைக்கு அமைய அந்த கட்சி உள்ளுராட்சிமன்ற அதிகாரசபைகளில் ஆட்சியமைக்க இடமளிக்க வேண்டும். அரசாங்கத்தை நெருக்கடிக்குள்ளாக்குவதாக குறிப்பிட்டுக் கொண்டு தேசிய மக்கள் சக்தியை நெருக்கடிக்குள்ளாக்கும் செயற்பாடுகளுக்கு நாங்கள் ஒத்துழைப்பு வழங்க போவதில்லை.பாராளுமன்றத்தின் அதிகாரத்தை மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு வழங்கியுள்ளார்கள். அதுபோலவே தேசிய மக்கள் சக்தி வெற்றிப்பெற்றுள்ள 265 உள்ளுராட்சிமன்றங்களில் ஆட்சியமைக்க இடமளிக்க வேண்டும்.எதிர்க்கட்சிகளின் புதிய அரசியல் கூட்டணியில் நாங்கள் பங்காளியாக போவதில்லை ஏனெனில் அது தவறு ஜனநாயக கோட்பாடுகளுக்கு முரணானது. என்றார்.

Advertisement

Advertisement

Advertisement