தாய்லாந்தில் நடைபெற்ற புத்தாண்டு திருவிழாவின் ஒரு பகுதியான தண்ணீர் திருவிழாவில் வீதி விபத்துகளில் சிக்கி 3 நாளில் 191 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தாய்லாந்து நாட்டு மக்களின் புத்தாண்டு சோங்க்ரான் என்று அழைக்கப்படுகின்றது. தாய்லாந்தின் தேசிய புத்தாண்டு ஆண்டுதோறும் ஏப்ரல் 9 ஆம் திகதி கொண்டாடப்படுகிறது.
அதற்கமைய சோங்க்ரான் மத சடங்குகள், பாரம்பரிய நடனங்கள், இசை மற்றும் விருந்துகளுடன் கொண்டாடப்படுகின்றன.
சோங்க்ரான் நீர் திருவிழாவின்போது, பழையன கழித்து விட்டு, புதியதை வரவேற்கும் அடையாளமாக மக்கள் ஒருவர் மீது ஒருவர் தண்ணீரைத் தெளித்துக் கொள்வார்கள்.
தமிழ் புத்தாண்டு கொண்டாட்டங்களைப் போலவே, தாய்லாந்து மக்கள் சோங்க்ரான் திருவிழாவின்போது கோயில்களுக்கு சென்று வழிபாடு நடத்துகின்றனர்.
இந்நிலையில் இந்தத் திருவிழா கடந்த 13 ஆம் திகதி ஆரம்பமானது. நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் இந்தத் தண்ணீர் திருவிழா கடந்த 4 நாட்களாக நடைபெற்று வருகின்றது.
குறித்த விழாவிற்கு செல்லும்போது 3 நாளில் சுமார் 951 வீதி விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன. இந்த விபத்துக்களில் சிக்கி 191 பேர் உயிரிழந்துள்னதாகவும் மேலும் 911 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.
புத்தாண்டு கொண்டாட்டத்தில் உயிரிழப்புக்களும் காயங்களும் ஏற்பட்ட சம்பவம் அந்நாட்டை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மகிழ்ச்சியாக கொண்டாடிய புத்தாண்டு தண்ணீர் திருவிழா; கண்ணீராக மாறிய சோகம் தாய்லாந்தில் நடைபெற்ற புத்தாண்டு திருவிழாவின் ஒரு பகுதியான தண்ணீர் திருவிழாவில் வீதி விபத்துகளில் சிக்கி 3 நாளில் 191 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தாய்லாந்து நாட்டு மக்களின் புத்தாண்டு சோங்க்ரான் என்று அழைக்கப்படுகின்றது. தாய்லாந்தின் தேசிய புத்தாண்டு ஆண்டுதோறும் ஏப்ரல் 9 ஆம் திகதி கொண்டாடப்படுகிறது. அதற்கமைய சோங்க்ரான் மத சடங்குகள், பாரம்பரிய நடனங்கள், இசை மற்றும் விருந்துகளுடன் கொண்டாடப்படுகின்றன. சோங்க்ரான் நீர் திருவிழாவின்போது, பழையன கழித்து விட்டு, புதியதை வரவேற்கும் அடையாளமாக மக்கள் ஒருவர் மீது ஒருவர் தண்ணீரைத் தெளித்துக் கொள்வார்கள். தமிழ் புத்தாண்டு கொண்டாட்டங்களைப் போலவே, தாய்லாந்து மக்கள் சோங்க்ரான் திருவிழாவின்போது கோயில்களுக்கு சென்று வழிபாடு நடத்துகின்றனர்.இந்நிலையில் இந்தத் திருவிழா கடந்த 13 ஆம் திகதி ஆரம்பமானது. நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் இந்தத் தண்ணீர் திருவிழா கடந்த 4 நாட்களாக நடைபெற்று வருகின்றது. குறித்த விழாவிற்கு செல்லும்போது 3 நாளில் சுமார் 951 வீதி விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன. இந்த விபத்துக்களில் சிக்கி 191 பேர் உயிரிழந்துள்னதாகவும் மேலும் 911 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்தி வெளியாகியுள்ளது. புத்தாண்டு கொண்டாட்டத்தில் உயிரிழப்புக்களும் காயங்களும் ஏற்பட்ட சம்பவம் அந்நாட்டை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.