• May 27 2026

தெதுறு ஓயாவில் நீராடச் சென்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6ஆக உயர்வு

Chithra / Apr 17th 2026, 10:27 am
image

குருநாகல் - நிக்கவரெட்டிய - தெதுரு ஓயாவில் நீராடச்சென்று காணாமல் போன மேலும் நால்வரின் உடலங்கள் மீட்கப்பட்டுள்ளன

 

தெதுறு ஓயாவில் நேற்று வியாழக்கிழமை (16) நீராடச் சென்ற 15 பேரில் 10 பேர் நீரில் மூழ்கி விபத்துக்குள்ளானார்கள்.


இந்நிலையில் நீரில் மூழ்கியவர்களில் இருவர் காப்பாற்றப்பட்டு வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டதுடன் மேலும் இருவரது சடலங்கள் மீட்கப்பட்டது. 


இதனையடுத்து நீரில் மூழ்கி காணாமல் போனவர்களில் மேலும் 4 பேரின் சடலங்கள் இன்று (17) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


இதன் மூலம், இந்த அனர்த்தத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.


இந்நிலையில், மேலும் காணாமல்போயுள்ள 2 பேரைத் தேடும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 


இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


தெதுறு ஓயாவில் நீராடச் சென்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6ஆக உயர்வு குருநாகல் - நிக்கவரெட்டிய - தெதுரு ஓயாவில் நீராடச்சென்று காணாமல் போன மேலும் நால்வரின் உடலங்கள் மீட்கப்பட்டுள்ளன தெதுறு ஓயாவில் நேற்று வியாழக்கிழமை (16) நீராடச் சென்ற 15 பேரில் 10 பேர் நீரில் மூழ்கி விபத்துக்குள்ளானார்கள்.இந்நிலையில் நீரில் மூழ்கியவர்களில் இருவர் காப்பாற்றப்பட்டு வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டதுடன் மேலும் இருவரது சடலங்கள் மீட்கப்பட்டது. இதனையடுத்து நீரில் மூழ்கி காணாமல் போனவர்களில் மேலும் 4 பேரின் சடலங்கள் இன்று (17) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இதன் மூலம், இந்த அனர்த்தத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.இந்நிலையில், மேலும் காணாமல்போயுள்ள 2 பேரைத் தேடும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Advertisement

Advertisement

Advertisement