• Feb 11 2026

எங்கள் ஆட்சியை அசைக்க எதிரணிக்குச் சக்தியில்லை! அமைச்சர் பிமல் சூளுரை

Chithra / Jan 23rd 2026, 8:13 am
image


எமது ஆட்சியை எந்த வகையிலும் எதிரணிகளால் கவிழ்க்க முடியாது என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க உறுதியாகத் தெரிவித்தார்.


தேசிய அம்மக்கள் சக்தி அரசுக்கு மக்கள் ஆதரவு தொடர்ச்சியாக வலுப்பெற்று வருகின்றது என்றும், அதனால் அரசியல் ரீதியான எந்தச் சவாலையும் வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும் என்றும் ஊடகங்களிடம் அவர் கூறினார்.


தேசிய மக்கள் சக்தி அரசு நாட்டின் அரசியல், பொருளாதார மற்றும் சமூக மாற்றங்களைப் பொறுப்புடன் முன்னெடுத்து வருகின்றது.


கடந்த கால ஆட்சிகளால் உருவாக்கப்பட்ட நெருக்கடிகளிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்காகத் தற்போதைய அரசு திடமான முடிவுகளை எடுத்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.


எதிரணிகள் இந்த அரசை நிலையற்றதாக காட்ட முயற்சிக்கின்றன, அவை அனைத்தும் அரசியல் இலாபத்துக்காக மேற்கொள்ளப்படும் முயற்சிகளே என்றும் குறிப்பிட்டார்.


மக்கள் உண்மையைப் புரிந்து கொண்டுள்ளதால், இவ்வாறான முயற்சிகள் எதுவும் வெற்றியடையாது என்றும் அவர் கூறினார்.


மேலும், எதிர்வரும் தேர்தல்களிலும் தேசிய மக்கள் சக்தி வெற்றிவாகை சூடும்..நாட்டு மக்கள் அரசின் செயற்பாடுகளை நேரடியாக அனுபவித்து வருவதால், மீண்டும் வலுவான ஆதரவை வழங்குவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.


நாட்டின் ஊழல் அரசியலை முற்றாக ஒழிப்பதே தேசிய மக்கள் சக்தியின் பிரதான இலக்கு, அதற்காக எந்த அரசியல் அழுத்தங்களுக்கும் அடிபணியாமல் செயற்படுவதாகவும் அவர் கூறினார்.


சுத்தமான அரசியல் கலாச்சாரத்தை உருவாக்குவதில் அரசு உறுதியாக இருக்கின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.

எங்கள் ஆட்சியை அசைக்க எதிரணிக்குச் சக்தியில்லை அமைச்சர் பிமல் சூளுரை எமது ஆட்சியை எந்த வகையிலும் எதிரணிகளால் கவிழ்க்க முடியாது என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க உறுதியாகத் தெரிவித்தார்.தேசிய அம்மக்கள் சக்தி அரசுக்கு மக்கள் ஆதரவு தொடர்ச்சியாக வலுப்பெற்று வருகின்றது என்றும், அதனால் அரசியல் ரீதியான எந்தச் சவாலையும் வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும் என்றும் ஊடகங்களிடம் அவர் கூறினார்.தேசிய மக்கள் சக்தி அரசு நாட்டின் அரசியல், பொருளாதார மற்றும் சமூக மாற்றங்களைப் பொறுப்புடன் முன்னெடுத்து வருகின்றது.கடந்த கால ஆட்சிகளால் உருவாக்கப்பட்ட நெருக்கடிகளிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்காகத் தற்போதைய அரசு திடமான முடிவுகளை எடுத்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.எதிரணிகள் இந்த அரசை நிலையற்றதாக காட்ட முயற்சிக்கின்றன, அவை அனைத்தும் அரசியல் இலாபத்துக்காக மேற்கொள்ளப்படும் முயற்சிகளே என்றும் குறிப்பிட்டார்.மக்கள் உண்மையைப் புரிந்து கொண்டுள்ளதால், இவ்வாறான முயற்சிகள் எதுவும் வெற்றியடையாது என்றும் அவர் கூறினார்.மேலும், எதிர்வரும் தேர்தல்களிலும் தேசிய மக்கள் சக்தி வெற்றிவாகை சூடும்.நாட்டு மக்கள் அரசின் செயற்பாடுகளை நேரடியாக அனுபவித்து வருவதால், மீண்டும் வலுவான ஆதரவை வழங்குவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.நாட்டின் ஊழல் அரசியலை முற்றாக ஒழிப்பதே தேசிய மக்கள் சக்தியின் பிரதான இலக்கு, அதற்காக எந்த அரசியல் அழுத்தங்களுக்கும் அடிபணியாமல் செயற்படுவதாகவும் அவர் கூறினார்.சுத்தமான அரசியல் கலாச்சாரத்தை உருவாக்குவதில் அரசு உறுதியாக இருக்கின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement