• May 12 2026

கிண்ணியா நடுத்தீவு ஆயுர்வேத வைத்தியசாலையின் அவல நிலை! அடிப்படை வசதிகளின்றி அவதிப்படும் நோயாளிகள்!

Chithra / May 12th 2026, 9:38 pm
image

கிழக்கு மாகாண அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் 2013ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு, தற்போது பல மாவட்டங்களைச் சேர்ந்த நோயாளிகளின் நம்பிக்கைக்குரிய இடமாக விளங்கும் கிண்ணியா நடுத்தீவு மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலை, போதிய வளங்களின்றி பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளது.


​இந்த வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவுக்கு நாளாந்தம் நூற்றுக்கும் மேற்பட்ட நோயாளிகள் வருகை தருகின்றனர்.


விடுதி வசதி, கிளினிக் மற்றும் சத்திரசிகிச்சை என மூன்று பிரிவுகளும் இயங்கிவரும் நிலையில், நோயாளிகள் தங்குவதற்கோ அல்லது அமர்ந்து இருப்பதற்கோ போதிய ஆசன வசதிகள் இல்லை. 


இதனால், முதியவர்கள் உட்பட நோயாளிகள் மர நிழல்களிலும் வீதியோரங்களிலும் பல மணிநேரம் காத்துக்கிடக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.


​வைத்தியசாலையின் தற்போதைய நிலை குறித்து, வைத்திய பொறுப்பதிகாரி (MOIC) டாக்டர் A.W. மாஷாதிடம் வினவியபோது,


"வைத்தியசாலைக்கு குறைந்தது ஆறு வைத்தியர்கள் தேவைப்படும் நிலையில், தற்போது இருவர் மாத்திரமே பணியில் இருப்பதாகக் குறிப்பிட்டார். பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியிலேயே இந்த வைத்தியசாலையை கொண்டு நடத்துகிறோம். 


இந்த மாதம் மட்டும் இரண்டு பித்தப்பை கல் அகற்றும் அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாகச் செய்யப்பட்டுள்ளன. இன்னும் 10 நோயாளிகள் காத்திருக்கின்றனர். ஆனால் வைத்தியர் தட்டுப்பாடு காரணமாக உரிய காலத்தில் சிகிச்சைகளை வழங்க முடிவதில்லை" என அவர் கவலையுடன் தெரிவித்தார்.


​வாரத்தில் ஐந்து நாட்களும் கிளினிக் சேவைகள் நடைபெறுகின்றன. ஆனால், மின்சார வசதியே இல்லாத ஒரு சிறிய, இருண்ட பழைய கட்டிடத்திலேயே இந்தச் சேவைகள் முன்னெடுக்கப்படுகின்றன. அதன் கூரை இடிந்து விழும் நிலையில் காட்சியளிக்கின்றது.


காலை 6 மணிக்கே வரும் நோயாளிகள், சிகிச்சை முடிந்து திரும்ப மாலை 4 மணி ஆகிவிடுகிறது. அமர ஆசனங்கள் இல்லாததால், "கால் கடுக்க" மணிக்கணக்கில் நிற்பதே தங்களுக்கு மேலதிக உபாதைகளை ஏற்படுத்துவதாக நோயாளிகள் தெரிவிக்கின்றனர். 


ஒரு கட்டிலில் மூன்று முதல் நான்கு பேர் அமர்ந்து சிகிச்சைக்காகக் காத்திருக்கும் காட்சி பார்ப்போரை நெகிழ வைக்கிறது.


​கிண்ணியா பகுதிக்கு மாத்திரமன்றி, மன்னார், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு போன்ற வெளிமாவட்டங்களில் இருந்தும் ஏராளமான நோயாளிகள் இங்கு வருகை தருகின்றனர்.


இங்குள்ள வைத்தியர்களும் ஊழியர்களும் அர்ப்பணிப்புடன் சேவை செய்வதாலேயே தாங்கள் குணமடைந்து வருவதாகத் தெரிவிக்கும் நோயாளிகள், அதேவேளை வளப்பற்றாக்குறை காரணமாக ஒரு வாரத்தில் முடிய வேண்டிய சிகிச்சை பல மாதங்கள் நீடிப்பதாகக் கூறுகின்றனர்.


​வைத்தியசாலைக்கு முறையான மின்சார வசதி மற்றும் புதிய கட்டிட வசதிகளை ஏற்படுத்தல், 

​நோயாளிகள் அமருவதற்குத் தேவையான ஆசனங்கள் மற்றும் அடிப்படைத் தளபாடங்களை வழங்குதல் இந்த வைத்தியசாலையின் தற்போதைய உடனடி தேவைகள் ஆகும். 


​கிண்ணியா பிரதேசத்தில் இவ்வளவு தூரம் புகழ்பெற்ற ஒரு ஆயுர்வேத வைத்தியசாலை, உரிய பராமரிப்பும் வளங்களும் இன்றி நலிவடைவது கவலைக்குரிய விடயமாகும். 


எனவே, சம்பந்தப்பட்ட சுகாதாரத் துறை அதிகாரிகளும் மக்கள் பிரதிநிதிகளும் உடனடியாகத் தலையிட்டு, பௌதிக மற்றும் ஆளணிப் பற்றாக்குறையைத் தீர்க்க முன்வர வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

கிண்ணியா நடுத்தீவு ஆயுர்வேத வைத்தியசாலையின் அவல நிலை அடிப்படை வசதிகளின்றி அவதிப்படும் நோயாளிகள் கிழக்கு மாகாண அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் 2013ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு, தற்போது பல மாவட்டங்களைச் சேர்ந்த நோயாளிகளின் நம்பிக்கைக்குரிய இடமாக விளங்கும் கிண்ணியா நடுத்தீவு மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலை, போதிய வளங்களின்றி பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளது.​இந்த வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவுக்கு நாளாந்தம் நூற்றுக்கும் மேற்பட்ட நோயாளிகள் வருகை தருகின்றனர்.விடுதி வசதி, கிளினிக் மற்றும் சத்திரசிகிச்சை என மூன்று பிரிவுகளும் இயங்கிவரும் நிலையில், நோயாளிகள் தங்குவதற்கோ அல்லது அமர்ந்து இருப்பதற்கோ போதிய ஆசன வசதிகள் இல்லை. இதனால், முதியவர்கள் உட்பட நோயாளிகள் மர நிழல்களிலும் வீதியோரங்களிலும் பல மணிநேரம் காத்துக்கிடக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.​வைத்தியசாலையின் தற்போதைய நிலை குறித்து, வைத்திய பொறுப்பதிகாரி (MOIC) டாக்டர் A.W. மாஷாதிடம் வினவியபோது,"வைத்தியசாலைக்கு குறைந்தது ஆறு வைத்தியர்கள் தேவைப்படும் நிலையில், தற்போது இருவர் மாத்திரமே பணியில் இருப்பதாகக் குறிப்பிட்டார். பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியிலேயே இந்த வைத்தியசாலையை கொண்டு நடத்துகிறோம். இந்த மாதம் மட்டும் இரண்டு பித்தப்பை கல் அகற்றும் அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாகச் செய்யப்பட்டுள்ளன. இன்னும் 10 நோயாளிகள் காத்திருக்கின்றனர். ஆனால் வைத்தியர் தட்டுப்பாடு காரணமாக உரிய காலத்தில் சிகிச்சைகளை வழங்க முடிவதில்லை" என அவர் கவலையுடன் தெரிவித்தார்.​வாரத்தில் ஐந்து நாட்களும் கிளினிக் சேவைகள் நடைபெறுகின்றன. ஆனால், மின்சார வசதியே இல்லாத ஒரு சிறிய, இருண்ட பழைய கட்டிடத்திலேயே இந்தச் சேவைகள் முன்னெடுக்கப்படுகின்றன. அதன் கூரை இடிந்து விழும் நிலையில் காட்சியளிக்கின்றது.காலை 6 மணிக்கே வரும் நோயாளிகள், சிகிச்சை முடிந்து திரும்ப மாலை 4 மணி ஆகிவிடுகிறது. அமர ஆசனங்கள் இல்லாததால், "கால் கடுக்க" மணிக்கணக்கில் நிற்பதே தங்களுக்கு மேலதிக உபாதைகளை ஏற்படுத்துவதாக நோயாளிகள் தெரிவிக்கின்றனர். ஒரு கட்டிலில் மூன்று முதல் நான்கு பேர் அமர்ந்து சிகிச்சைக்காகக் காத்திருக்கும் காட்சி பார்ப்போரை நெகிழ வைக்கிறது.​கிண்ணியா பகுதிக்கு மாத்திரமன்றி, மன்னார், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு போன்ற வெளிமாவட்டங்களில் இருந்தும் ஏராளமான நோயாளிகள் இங்கு வருகை தருகின்றனர்.இங்குள்ள வைத்தியர்களும் ஊழியர்களும் அர்ப்பணிப்புடன் சேவை செய்வதாலேயே தாங்கள் குணமடைந்து வருவதாகத் தெரிவிக்கும் நோயாளிகள், அதேவேளை வளப்பற்றாக்குறை காரணமாக ஒரு வாரத்தில் முடிய வேண்டிய சிகிச்சை பல மாதங்கள் நீடிப்பதாகக் கூறுகின்றனர்.​வைத்தியசாலைக்கு முறையான மின்சார வசதி மற்றும் புதிய கட்டிட வசதிகளை ஏற்படுத்தல், ​நோயாளிகள் அமருவதற்குத் தேவையான ஆசனங்கள் மற்றும் அடிப்படைத் தளபாடங்களை வழங்குதல் இந்த வைத்தியசாலையின் தற்போதைய உடனடி தேவைகள் ஆகும். ​கிண்ணியா பிரதேசத்தில் இவ்வளவு தூரம் புகழ்பெற்ற ஒரு ஆயுர்வேத வைத்தியசாலை, உரிய பராமரிப்பும் வளங்களும் இன்றி நலிவடைவது கவலைக்குரிய விடயமாகும். எனவே, சம்பந்தப்பட்ட சுகாதாரத் துறை அதிகாரிகளும் மக்கள் பிரதிநிதிகளும் உடனடியாகத் தலையிட்டு, பௌதிக மற்றும் ஆளணிப் பற்றாக்குறையைத் தீர்க்க முன்வர வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement