• Sep 21 2024

தமது கட்சி ஆதரிக்கும் ஜனாதிபதி வேட்பாளரே வெற்றிபெறுவார்! - ரிஷாத் நம்பிக்கை

Chithra / Aug 11th 2024, 3:17 pm
image

Advertisement

 

தமது கட்சி ஆதரிக்கும் ஜனாதிபதி வேட்பாளரே வெற்றிபெறுவார் எனத் தெரிவித்த, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், எதிர்வரும் 14 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தலில் எமது கட்சி யாரை ஆதரிக்கும் என்று உத்தியோகபூர்வமாக அறிவிப்போம் எனவும் கூறினார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி எதிர் வரும் ஜனாதிபதி தேர்தலின் போது யாரை ஆதரிப்பது என்பது குறித்து புத்தளம் மாவட்ட ஆதரவாளர்களுடனான சந்திப்பு நேற்று (10) இரவு  புத்தளம் தில்லையடி பகுதியில் இடம்பெற்றது.

இந்த சந்திப்பில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான என்.டி.எம்.தாகார், எஸ்.ஏ.எஹியா, புத்தளம் நகர சபை முன்னாள் பிரதி தலைவர் ஏ.ஓ.அலிகான் உட்பட, கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள், முன்னாள் உள்ளுராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள், முக்கியஸ்தர்கள், ஆதரவாளர்கள் என ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது சந்திப்பில் கலந்துகொண்ட ஆதரவாளர்களின் கருத்துக்களை கேட்டறிந்துகொண்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் , பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன்  பின்னர் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு தொடர்ந்தும் பேசிய அவர் மேலும் கூறியதாவது,

நான்கு வருடங்கள் எதிர்க் கட்சி அரசியல் செய்துள்ளோம். ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்தில் என்னையும் ஒரு பாத்திரமாக சித்தரித்து என்னையும் எனது குடும்பத்தினரையும் சிறையில் அடைத்தார்கள்.

என்னுடைய புகைப்படத்தை வைத்திருந்த காரணத்திற்காக ஆதரவாளர் ஒருவரை கைது செய்து அவரையும் சிறையில் அடைத்து கஷ்டப்படுத்தினார்கள்.

இதனால் நானும், எனது குடும்பமும் மாத்திரமின்றி ஒருசில ஆதரவாளர்களும் கடும் துன்பங்களுக்கு உள்ளாகியிருந்தோம்.

அப்போது கொரோனா காலம் என்பதால் எனக்கு கொரோனா ஏற்பட்டால் அதனை காரணம் காட்டி என்னை சிறைக்குள்ளேயே கொலை செய்யப் பார்த்தார்கள். என்னையும், எனது மனைவி உட்பட குடும்பத்தினரை சிறையில் அடைத்து அதில் இன்பத்தை கண்டார்கள்.

எனது அரசியல் வாழ்வை முடிவுக்கு கொண்டுவரலாம் என்றும், எமது கட்சியை முழுமையாக இல்லாமல் செய்துவிடலாம் என்று திட்டமிட்டவர்களுக்கு எங்களது மீள்வருகை பெரும் தலையிடியை ஏற்படுத்தியது. 

எமது கட்சிக்கு அகில இலங்கை ரீதியாக நல்ல வரவேற்பு இருக்கிறது. கடந்த காலங்களை போல வரும் காலங்களிலும் பாராளுமன்ற தேர்தல் மற்றும் உள்ளூராட்சி மன்றத் தேர்ரதல்களில் அதிகமான உறுப்பினர்களை நாம் பெறுவோம் என்பதில் சந்தேகமில்லை.

எங்களுக்கு எதிராக பல குற்றச்சாட்டுக்களை அடிக்கிக் கொண்டே போனார்கள். எனினும் எவ்வாறான சவால்கள் வந்தாலும் இறைவனின் உதவியால் எல்லா வகையான சதிகளிலும் வெற்றிபெற்று முன்னேறிச் செல்கிறோம்.

இந்த அடிப்படையில்தான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் யாருக்கு அகில  இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி ஆதரவு வழங்குவது என்று கட்சியின் ஆதரவாளர்களோடு கலந்துரையாடி இறுதி முடிவை எடுப்பதற்காக இந்த சந்திப்பை ஏற்பாடு செய்தோம்.

இதுபோல தமது கட்சியின் ஆதரவாளர்களை அழைத்து தேர்தலில் யாரை ஆதரிக்க வேண்டும் என்று இவ்வாறு வேறு எந்தக் கட்சியும் கேட்டதாக தெரியவில்லை.

எனவே, நாங்கள் எமது கட்சியின் ஆதரவாளர்களின் கருத்துக்களை கேட்டு , அவர்களின் ஆலோசனைகளைப் பெற்று உயர்பீட கூட்டத்தில் இறுதி முடிவை எடுக்கவுள்ளோம்.

கடந்த 06 ஆம் திகதி எமது கட்சியின் உயர்பீடம் கூடிய போது கட்சிக்குள் சில உறுப்பினர்கள் ரணில் விக்ரமசிங்கவையும், இன்னும் சிலர் சஜித் பிரேமதாசவையும் ஆதரிக்க வேண்டும் என்ற கருத்துப்பட தெரிவித்தனர்.

எனவே , உயர்பீட உறுப்பினர்களின் கருத்துகளுக்கும் மதிப்பளித்து அவர்கள் சொன்ன கருத்துக்களையும் உள்வாங்கினோம்.

இந்த அடிப்படையில் இரண்டு வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பலர் தமது கருத்துக்களை முன்வைத்தமையால் அன்றைய தினம் இறுதி முடிவை எடுக்க முடியாமல் எதிர்வரும் 14 ஆம் திகதி எமது இறுதி முடிவை அறிவிப்பதாக கூறினோம்.

மேலும், கட்சியின் உயிர்பீட ஆலோசனையின் படி எமது கட்சியின் ஆதரவாளர்கள் , முக்கியஸ்தர்களை சந்தித்துக் கலந்துரையாடி வருகிறோம்.

அந்த வகையில்தான் புத்தளத்தில் உள்ள எமது கட்சியின் ஆதரவாளர்களின் கருத்துக்களும் கேட்கப்பட்டது. மாவட்ட ரீதியாக சென்று   ஆதரவாளர்களின் கருத்துக்களை கேட்டறிந்துகொண்ட பின்னர், எதிர்வரும் 14 ஆம் திகதி எமது கட்சியன் இறுதி முடிவை அறிவிப்போம் என்றார்.


தமது கட்சி ஆதரிக்கும் ஜனாதிபதி வேட்பாளரே வெற்றிபெறுவார் - ரிஷாத் நம்பிக்கை  தமது கட்சி ஆதரிக்கும் ஜனாதிபதி வேட்பாளரே வெற்றிபெறுவார் எனத் தெரிவித்த, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், எதிர்வரும் 14 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தலில் எமது கட்சி யாரை ஆதரிக்கும் என்று உத்தியோகபூர்வமாக அறிவிப்போம் எனவும் கூறினார்.அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி எதிர் வரும் ஜனாதிபதி தேர்தலின் போது யாரை ஆதரிப்பது என்பது குறித்து புத்தளம் மாவட்ட ஆதரவாளர்களுடனான சந்திப்பு நேற்று (10) இரவு  புத்தளம் தில்லையடி பகுதியில் இடம்பெற்றது.இந்த சந்திப்பில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான என்.டி.எம்.தாகார், எஸ்.ஏ.எஹியா, புத்தளம் நகர சபை முன்னாள் பிரதி தலைவர் ஏ.ஓ.அலிகான் உட்பட, கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள், முன்னாள் உள்ளுராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள், முக்கியஸ்தர்கள், ஆதரவாளர்கள் என ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.இதன்போது சந்திப்பில் கலந்துகொண்ட ஆதரவாளர்களின் கருத்துக்களை கேட்டறிந்துகொண்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் , பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன்  பின்னர் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.அங்கு தொடர்ந்தும் பேசிய அவர் மேலும் கூறியதாவது,நான்கு வருடங்கள் எதிர்க் கட்சி அரசியல் செய்துள்ளோம். ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்தில் என்னையும் ஒரு பாத்திரமாக சித்தரித்து என்னையும் எனது குடும்பத்தினரையும் சிறையில் அடைத்தார்கள்.என்னுடைய புகைப்படத்தை வைத்திருந்த காரணத்திற்காக ஆதரவாளர் ஒருவரை கைது செய்து அவரையும் சிறையில் அடைத்து கஷ்டப்படுத்தினார்கள்.இதனால் நானும், எனது குடும்பமும் மாத்திரமின்றி ஒருசில ஆதரவாளர்களும் கடும் துன்பங்களுக்கு உள்ளாகியிருந்தோம்.அப்போது கொரோனா காலம் என்பதால் எனக்கு கொரோனா ஏற்பட்டால் அதனை காரணம் காட்டி என்னை சிறைக்குள்ளேயே கொலை செய்யப் பார்த்தார்கள். என்னையும், எனது மனைவி உட்பட குடும்பத்தினரை சிறையில் அடைத்து அதில் இன்பத்தை கண்டார்கள்.எனது அரசியல் வாழ்வை முடிவுக்கு கொண்டுவரலாம் என்றும், எமது கட்சியை முழுமையாக இல்லாமல் செய்துவிடலாம் என்று திட்டமிட்டவர்களுக்கு எங்களது மீள்வருகை பெரும் தலையிடியை ஏற்படுத்தியது. எமது கட்சிக்கு அகில இலங்கை ரீதியாக நல்ல வரவேற்பு இருக்கிறது. கடந்த காலங்களை போல வரும் காலங்களிலும் பாராளுமன்ற தேர்தல் மற்றும் உள்ளூராட்சி மன்றத் தேர்ரதல்களில் அதிகமான உறுப்பினர்களை நாம் பெறுவோம் என்பதில் சந்தேகமில்லை.எங்களுக்கு எதிராக பல குற்றச்சாட்டுக்களை அடிக்கிக் கொண்டே போனார்கள். எனினும் எவ்வாறான சவால்கள் வந்தாலும் இறைவனின் உதவியால் எல்லா வகையான சதிகளிலும் வெற்றிபெற்று முன்னேறிச் செல்கிறோம்.இந்த அடிப்படையில்தான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் யாருக்கு அகில  இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி ஆதரவு வழங்குவது என்று கட்சியின் ஆதரவாளர்களோடு கலந்துரையாடி இறுதி முடிவை எடுப்பதற்காக இந்த சந்திப்பை ஏற்பாடு செய்தோம்.இதுபோல தமது கட்சியின் ஆதரவாளர்களை அழைத்து தேர்தலில் யாரை ஆதரிக்க வேண்டும் என்று இவ்வாறு வேறு எந்தக் கட்சியும் கேட்டதாக தெரியவில்லை.எனவே, நாங்கள் எமது கட்சியின் ஆதரவாளர்களின் கருத்துக்களை கேட்டு , அவர்களின் ஆலோசனைகளைப் பெற்று உயர்பீட கூட்டத்தில் இறுதி முடிவை எடுக்கவுள்ளோம்.கடந்த 06 ஆம் திகதி எமது கட்சியின் உயர்பீடம் கூடிய போது கட்சிக்குள் சில உறுப்பினர்கள் ரணில் விக்ரமசிங்கவையும், இன்னும் சிலர் சஜித் பிரேமதாசவையும் ஆதரிக்க வேண்டும் என்ற கருத்துப்பட தெரிவித்தனர்.எனவே , உயர்பீட உறுப்பினர்களின் கருத்துகளுக்கும் மதிப்பளித்து அவர்கள் சொன்ன கருத்துக்களையும் உள்வாங்கினோம்.இந்த அடிப்படையில் இரண்டு வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பலர் தமது கருத்துக்களை முன்வைத்தமையால் அன்றைய தினம் இறுதி முடிவை எடுக்க முடியாமல் எதிர்வரும் 14 ஆம் திகதி எமது இறுதி முடிவை அறிவிப்பதாக கூறினோம்.மேலும், கட்சியின் உயிர்பீட ஆலோசனையின் படி எமது கட்சியின் ஆதரவாளர்கள் , முக்கியஸ்தர்களை சந்தித்துக் கலந்துரையாடி வருகிறோம்.அந்த வகையில்தான் புத்தளத்தில் உள்ள எமது கட்சியின் ஆதரவாளர்களின் கருத்துக்களும் கேட்கப்பட்டது. மாவட்ட ரீதியாக சென்று   ஆதரவாளர்களின் கருத்துக்களை கேட்டறிந்துகொண்ட பின்னர், எதிர்வரும் 14 ஆம் திகதி எமது கட்சியன் இறுதி முடிவை அறிவிப்போம் என்றார்.

Advertisement

Advertisement

Advertisement