பெறுமதிசேர் வரி அதிகரிப்பினால் மருந்துகளின் விலை 25% அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதாக அகில இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அண்மைக்காலமாக மருந்துப் பொருட்கள் மற்றும் சுகாதார உபகரணங்களின் விலை மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாக சங்கத்தின் பொதுச் செயலாளர் டொக்டர் ஜயந்த பண்டார சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேவேளை, இந்த ஆண்டு மருந்து விலை உயர்வு தாங்க முடியாத நெருக்கடியாக மாறும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தொற்றாத நோயினால் பாதிக்கப்பட்ட இலட்சக்கணக்கான நோயாளிகள் மருந்துகளை உட்கொள்வதை நிறுத்தியுள்ளதாகவும், அது ஒரு நாடு என்ற வகையில் பாரதூரமான நிலைமை எனவும் எச்சரித்துள்ளார்.
மருந்துகளின் விலை அதிகரிக்கும் அபாயம். மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை பெறுமதிசேர் வரி அதிகரிப்பினால் மருந்துகளின் விலை 25% அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதாக அகில இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.அண்மைக்காலமாக மருந்துப் பொருட்கள் மற்றும் சுகாதார உபகரணங்களின் விலை மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாக சங்கத்தின் பொதுச் செயலாளர் டொக்டர் ஜயந்த பண்டார சுட்டிக்காட்டியுள்ளார்.அதேவேளை, இந்த ஆண்டு மருந்து விலை உயர்வு தாங்க முடியாத நெருக்கடியாக மாறும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.மேலும், தொற்றாத நோயினால் பாதிக்கப்பட்ட இலட்சக்கணக்கான நோயாளிகள் மருந்துகளை உட்கொள்வதை நிறுத்தியுள்ளதாகவும், அது ஒரு நாடு என்ற வகையில் பாரதூரமான நிலைமை எனவும் எச்சரித்துள்ளார்.