• Nov 07 2025

ரணிலுக்கு பொதுஜன பெரமுன ஒருபோதும் ஆதரவளிக்காது! சாகர காரியவசம் பகிரங்கம்

Chithra / Oct 12th 2025, 2:34 pm
image

 

எதிர்வரும் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவிற்கு பொதுஜன பெரமுன ஒருபோதும் ஆதரவளிக்காது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் ஊடகமொன்றிற்கு வழங்கிய பேட்டியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் தலைவராக தேர்ந்தெடுப்பதற்கோ அல்லது வரவிருக்கும் தேர்தல்களில் அவரை வழிநடத்துவதற்கோ அல்லது ஐக்கிய தேசியக்கட்சிக்கு ஆதரவளிக்கவோ எந்த எண்ணமும் இல்லை.

ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கைகளுக்கும் பொதுஜன பெரமுனவின் கொள்கைகளுக்கும் இடையிலான இணக்கமின்மையே இதற்கு காரணம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதியாக்க ஆதரவளித்திருந்த நிலையில், பின்னர் கொள்கைகளில் வேறுபாடு காணப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

இருப்பினும், தற்போதைய அரசாங்கத்தின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக எதிர்க்கட்சி அரசியல் கட்சிகளுடன் இணைந்து பொதுஜன பெரமுன செயல்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

ரணிலுக்கு பொதுஜன பெரமுன ஒருபோதும் ஆதரவளிக்காது சாகர காரியவசம் பகிரங்கம்  எதிர்வரும் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவிற்கு பொதுஜன பெரமுன ஒருபோதும் ஆதரவளிக்காது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.நேற்றைய தினம் ஊடகமொன்றிற்கு வழங்கிய பேட்டியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் தலைவராக தேர்ந்தெடுப்பதற்கோ அல்லது வரவிருக்கும் தேர்தல்களில் அவரை வழிநடத்துவதற்கோ அல்லது ஐக்கிய தேசியக்கட்சிக்கு ஆதரவளிக்கவோ எந்த எண்ணமும் இல்லை.ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கைகளுக்கும் பொதுஜன பெரமுனவின் கொள்கைகளுக்கும் இடையிலான இணக்கமின்மையே இதற்கு காரணம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.முன்னதாக ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதியாக்க ஆதரவளித்திருந்த நிலையில், பின்னர் கொள்கைகளில் வேறுபாடு காணப்பட்டதாகவும் கூறியுள்ளார்.இருப்பினும், தற்போதைய அரசாங்கத்தின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக எதிர்க்கட்சி அரசியல் கட்சிகளுடன் இணைந்து பொதுஜன பெரமுன செயல்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement