• Jun 30 2024

கொள்ளையர்களின் வெறிச் செயல்; வயோதிபப் பெண் படுகொலை! குளியலறையில் வெட்டு காயங்களுடன் மீட்கப்பட்ட வயோதிபர்

Chithra / Jun 27th 2024, 2:02 pm
image

Advertisement


எஹெலியகொட, அருபொல பிரதேசத்தில் வயோதிப தம்பதிகள் வசித்து வந்த வீட்டில் கொள்ளையடிக்கச் சென்ற கொள்ளையர்கள் தம்பதியரை கூரிய ஆயுதத்தால் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக எஹெலியகொட பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவத்தில் வயோதிபப் பெண் கொல்லப்பட்டுள்ளதோடு, ஆண் படுகாயமடைந்த நிலையில், எஹெலியகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பெலிஸார் தெரிவித்தனர்

குறித்த வீட்டில் இருந்த வயோதிப ஆண் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்ட நிலையில் இறந்திருக்கலாம் என நினைத்து கொள்ளையர்கள் தப்பிச் சென்ற போதும், 

அந்த நபர் உயிரிழக்கவில்லை எனவும், ஆபத்தான நிலையில் எஹெலியகொட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த தம்பதியினரின் இரண்டு பிள்ளைகள் வெளிநாட்டில் வசிப்பதாகவும் ஒரு மகள் களனி பிரதேசத்தில் இருப்பதாகவும்,

குறித்த தம்பதியினர் வீட்டில் தனியே தங்கியுள்ளதாகவும் கொள்ளையடிக்க வந்தவர்களே இந்த கொலையை செய்துள்ளதாக சந்தேகிக்கப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

எஹெலியகொட அருபொல நெடுரண பிரதேசத்தைச் சேர்ந்த ஜயசிங்க முதியன்சேலாகே சந்திரலதா அய்ரின் என்ற 74 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

மேலும் அவரது கணவர் 76 வயதுடைய ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி வீட்டின் குளியலறைக்கு அருகில் கூரிய ஆயுதத்தால் வெட்டி கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் இருந்ததாக தெரிவித்த பொலிஸார் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


கொள்ளையர்களின் வெறிச் செயல்; வயோதிபப் பெண் படுகொலை குளியலறையில் வெட்டு காயங்களுடன் மீட்கப்பட்ட வயோதிபர் எஹெலியகொட, அருபொல பிரதேசத்தில் வயோதிப தம்பதிகள் வசித்து வந்த வீட்டில் கொள்ளையடிக்கச் சென்ற கொள்ளையர்கள் தம்பதியரை கூரிய ஆயுதத்தால் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக எஹெலியகொட பொலிஸார் தெரிவித்தனர்.குறித்த சம்பவத்தில் வயோதிபப் பெண் கொல்லப்பட்டுள்ளதோடு, ஆண் படுகாயமடைந்த நிலையில், எஹெலியகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பெலிஸார் தெரிவித்தனர்குறித்த வீட்டில் இருந்த வயோதிப ஆண் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்ட நிலையில் இறந்திருக்கலாம் என நினைத்து கொள்ளையர்கள் தப்பிச் சென்ற போதும், அந்த நபர் உயிரிழக்கவில்லை எனவும், ஆபத்தான நிலையில் எஹெலியகொட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.குறித்த தம்பதியினரின் இரண்டு பிள்ளைகள் வெளிநாட்டில் வசிப்பதாகவும் ஒரு மகள் களனி பிரதேசத்தில் இருப்பதாகவும்,குறித்த தம்பதியினர் வீட்டில் தனியே தங்கியுள்ளதாகவும் கொள்ளையடிக்க வந்தவர்களே இந்த கொலையை செய்துள்ளதாக சந்தேகிக்கப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.எஹெலியகொட அருபொல நெடுரண பிரதேசத்தைச் சேர்ந்த ஜயசிங்க முதியன்சேலாகே சந்திரலதா அய்ரின் என்ற 74 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.மேலும் அவரது கணவர் 76 வயதுடைய ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி வீட்டின் குளியலறைக்கு அருகில் கூரிய ஆயுதத்தால் வெட்டி கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் இருந்ததாக தெரிவித்த பொலிஸார் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement