மூதூர் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மல்லிகைத்தீவு கிராமத்திற்குள் இன்று(26) அதிகாலை, உட்புகுந்த காட்டு யானைகள் சேதம் விளைவித்துள்ளன.
இதன்போது மல்லிகைத்தீவு மகா வித்தியாலயத்தின் சுற்றுமதில், பாடசாலையில் நடப்பட்டிருந்த வாழை மரங்கள் போன்றவற்றையும் சேதப்படுத்தியுள்ளது.
இப்பாடசாலையின் சுற்றுமதிலை இதற்கு முன்னர் இரண்டு தடவைகள் காட்டு யானைகள் சேதப்படுத்தியுள்ளதாக கிராம மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
காட்டு யானை அட்டகாசம் தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் பல தடவைகள் தெரியப்படுத்தியும் இதுவரை எந்தவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.
எனவே, இது விடயத்தில் உரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு தமக்கான தீர்வினை பெற்று தர வேண்டும் என மூதூர் மல்லிகைத்தீவு கிராம மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
மூதூரில் தொடரும் யானைகளின் அட்டகாசம். பாடசாலை சுற்றுமதில் தகர்ப்பு. மூதூர் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மல்லிகைத்தீவு கிராமத்திற்குள் இன்று(26) அதிகாலை, உட்புகுந்த காட்டு யானைகள் சேதம் விளைவித்துள்ளன.இதன்போது மல்லிகைத்தீவு மகா வித்தியாலயத்தின் சுற்றுமதில், பாடசாலையில் நடப்பட்டிருந்த வாழை மரங்கள் போன்றவற்றையும் சேதப்படுத்தியுள்ளது.இப்பாடசாலையின் சுற்றுமதிலை இதற்கு முன்னர் இரண்டு தடவைகள் காட்டு யானைகள் சேதப்படுத்தியுள்ளதாக கிராம மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.காட்டு யானை அட்டகாசம் தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் பல தடவைகள் தெரியப்படுத்தியும் இதுவரை எந்தவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.எனவே, இது விடயத்தில் உரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு தமக்கான தீர்வினை பெற்று தர வேண்டும் என மூதூர் மல்லிகைத்தீவு கிராம மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.