• Mar 18 2025

சஜித் தலைமையில் இடம்பெறவுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் மாநாடு..!

Sharmi / Mar 17th 2025, 11:33 am
image

ஐக்கிய மக்கள் சக்தியின் மாநாடு எதிர்வரும் 29 ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளதாக கட்சியின் மூத்த உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு முன்னர் கட்சி மாநாட்டை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், நாளைமறுதினம்(19) நடைபெறும் கட்சி நிர்வாகக் குழுக் கூட்டத்தில் மாநாட்டை நடத்துவது குறித்து விரிவாக விவாதிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

அதன்படி, மாநாடு தொடர்பான நடவடிக்கைகளை எவ்வாறு நடத்துவது என்பது குறித்து விவாதிக்க ஐக்கிய மக்கள் சக்தி கட்சி மேலாண்மைக் குழுவிற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

பொது மாநாட்டில் பங்கேற்க ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரிவுகள் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்த கட்சி ஆர்வலர்கள் அழைக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.

சஜித் தலைமையில் இடம்பெறவுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் மாநாடு. ஐக்கிய மக்கள் சக்தியின் மாநாடு எதிர்வரும் 29 ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளதாக கட்சியின் மூத்த உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு முன்னர் கட்சி மாநாட்டை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், நாளைமறுதினம்(19) நடைபெறும் கட்சி நிர்வாகக் குழுக் கூட்டத்தில் மாநாட்டை நடத்துவது குறித்து விரிவாக விவாதிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.அதன்படி, மாநாடு தொடர்பான நடவடிக்கைகளை எவ்வாறு நடத்துவது என்பது குறித்து விவாதிக்க ஐக்கிய மக்கள் சக்தி கட்சி மேலாண்மைக் குழுவிற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.பொது மாநாட்டில் பங்கேற்க ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரிவுகள் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்த கட்சி ஆர்வலர்கள் அழைக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement