சம்பள அதிகரிப்பு , சேவை பெறுமான கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மூதூர் பிரதேச செயலக கிராம உத்தியோகத்தர்கள் இன்று(07) 2 வது நாளாக சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட்டுனர்.
இதனால் மூதூர் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள 42 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுடைய நாளாந்த செயற்பாடுகள் ஸ்தம்பிதம் அடைந்திருந்தன.
இந்நிலையில் தமது தேவைகளை நிறைவேற்றுவதற்காக கிராம உத்தியோகத்தர்களின் அலுவலகத்திற்கு சென்ற மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர்.
நாடளாவிய ரீதியில் உள்ள கிராம சேவகர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய ரீதியில் இரண்டு நாள் சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா மாவட்டம்
நாடளாவிய ரீதியில் கிராம சேவையாளர்களினால் முன்னெடுக்கப்பட்டு வரும் இரண்டு நாள் சுகயீன விடுமுறை வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து வவுனியாவில் கிராம சேவையாளர்கள் நேற்றும் இன்றும் பணி பகிஸ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் காரணமாக பொதுமக்கள் தங்கள் சேவையினை பெற்றுக்கொள்வதில் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர்.
குறித்த பணிபகிஸ்கரிப்பானது சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து குறித்த பணிபகிஸ்ப்பு போராட்டம் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இரண்டாவது நாளாக தொடரும் கிராம உத்தியோகத்தர்களின் போராட்டம். மக்கள் விசனம். சம்பள அதிகரிப்பு , சேவை பெறுமான கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மூதூர் பிரதேச செயலக கிராம உத்தியோகத்தர்கள் இன்று(07) 2 வது நாளாக சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட்டுனர்.இதனால் மூதூர் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள 42 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுடைய நாளாந்த செயற்பாடுகள் ஸ்தம்பிதம் அடைந்திருந்தன. இந்நிலையில் தமது தேவைகளை நிறைவேற்றுவதற்காக கிராம உத்தியோகத்தர்களின் அலுவலகத்திற்கு சென்ற மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர்.நாடளாவிய ரீதியில் உள்ள கிராம சேவகர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய ரீதியில் இரண்டு நாள் சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.வவுனியா மாவட்டம்நாடளாவிய ரீதியில் கிராம சேவையாளர்களினால் முன்னெடுக்கப்பட்டு வரும் இரண்டு நாள் சுகயீன விடுமுறை வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து வவுனியாவில் கிராம சேவையாளர்கள் நேற்றும் இன்றும் பணி பகிஸ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இதன் காரணமாக பொதுமக்கள் தங்கள் சேவையினை பெற்றுக்கொள்வதில் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர்.குறித்த பணிபகிஸ்கரிப்பானது சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து குறித்த பணிபகிஸ்ப்பு போராட்டம் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.