சூரியனின் வடக்கு நோக்கிய நகர்வின் காரணமாக இன்று முதல் எதிர்வரும் 15 ம் திகதி வரையில் சூரியன் இலங்கையின் பல இடங்களுக்கு மேலாக உச்சம் கொடுக்கின்றது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அந்தவகையில் இன்று மதியம் சுமார் 12.13 மணியளவில் டொடான்துவ, ரத்தம், யக்கலமுல்ல, அக்குரஸ்ஸ, முல்கிரிகல, றன்ன, கலமெற்றிய, மற்றும் உஷ்சன்கொட போன்ற இடங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கின்றது.
கண்டி, நுவரெலியா, மாத்தளை மற்றும் ஊவா மாகாணங்கள் தவிந்த நாட்டின் ஏனைய பிரதேசங்களில் இன்றும் அதிகரித்த வெப்பநிலை உணரப்படும்.
மத்திய, சப்ரகமுவ, மேல், வடமத்திய, தென், கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் பல இடங்களில் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் பொலனறுவை மாவட்டத்தின் சில இடங்களிலும் 50 mm வரையிலான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.
காலி தொடக்கம் ஹம்பாந்தோட்டை, பொத்துவில் ஊடாக மட்டக்களப்பு வரையான கடல் பிராந்தியங்களின் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 20 - 30 km வேகத்தில் தென்மேற்குத் திசையில் இருந்து அல்லது மாறுபட்ட திசைகளில் இருந்து காற்று வீசும்.நாட்டைச் சூழ உள்ள கடல் பிராந்தியங்கள் மிதமான அலையுடன் காணப்படும்.
ஆனால் இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.
பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
இலங்கையின் பல இடங்களுக்கு மேலாக உச்சம் கொடுக்கும் சூரியன்; இன்று முதல் 15ம் திகதி வரை ஆபத்து சூரியனின் வடக்கு நோக்கிய நகர்வின் காரணமாக இன்று முதல் எதிர்வரும் 15 ம் திகதி வரையில் சூரியன் இலங்கையின் பல இடங்களுக்கு மேலாக உச்சம் கொடுக்கின்றது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.அந்தவகையில் இன்று மதியம் சுமார் 12.13 மணியளவில் டொடான்துவ, ரத்தம், யக்கலமுல்ல, அக்குரஸ்ஸ, முல்கிரிகல, றன்ன, கலமெற்றிய, மற்றும் உஷ்சன்கொட போன்ற இடங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கின்றது.கண்டி, நுவரெலியா, மாத்தளை மற்றும் ஊவா மாகாணங்கள் தவிந்த நாட்டின் ஏனைய பிரதேசங்களில் இன்றும் அதிகரித்த வெப்பநிலை உணரப்படும்.மத்திய, சப்ரகமுவ, மேல், வடமத்திய, தென், கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் பல இடங்களில் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் பொலனறுவை மாவட்டத்தின் சில இடங்களிலும் 50 mm வரையிலான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.காலி தொடக்கம் ஹம்பாந்தோட்டை, பொத்துவில் ஊடாக மட்டக்களப்பு வரையான கடல் பிராந்தியங்களின் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 20 - 30 km வேகத்தில் தென்மேற்குத் திசையில் இருந்து அல்லது மாறுபட்ட திசைகளில் இருந்து காற்று வீசும்.நாட்டைச் சூழ உள்ள கடல் பிராந்தியங்கள் மிதமான அலையுடன் காணப்படும்.ஆனால் இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.