• May 06 2024

சிங்கள பௌத்த மேலாதிக்க போக்கு காரணமாகவே தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தினார்கள்...! சபையில் விளக்கமளித்த கஜேந்திரன் எம்.பி...!samugammedia

Sharmi / Dec 8th 2023, 12:57 pm
image

Advertisement

கடந்த வாரம் வடக்கு கிழக்கு மக்கள்  தங்களுடைய உறவுகளை நினைவேந்தும் நினைவேந்தலில் தயாராகிக்கொண்டு இருந்தார்கள். இதனை நிறுத்துவதற்கு அரசு திரைமறைவிலே செயற்பட்டு கொண்டு இருந்தது என  பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன்தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றில் இன்று இடம்பெற்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த காலங்களிலே இவ்வாறான நினைவேந்தல்களை நடத்துவதற்கு முழு சுதந்திரமும் உள்ளது என வாக்குறுதியை ரணில் விக்ரமசிங்கவும்  நிதியமைச்சரும் வழங்கியிருந்தனர். உலக நாடுகளிடம் இருந்து நிதியுதவியையும் ஏனைய உதவிகளையும் பெற்றுக்கொள்வதற்காக மனித உரிமை பேனப்படுவதாகவும் தமிழ் மக்களுடைய  சகல உரிமைகளும் மதிக்கப்படுவதாகவும் காட்டிக்கொண்டு தமிழர்களை முழுமையாக ஒடுக்குகின்ற செயன்முறை இடம் பெற்றுள்ளது. 

நினைவேந்தலை தடுப்பதற்காக கிழக்கு மாகாணம் முழுவதிலும் பொலிஸாரை பயன்படுத்தி மிகப்பெரும் அச்சுறுத்தலும் அட்டூழியங்களும் அரங்கேற்றப்பட்டுள்ளது. 

மேலும் அரசினுடைய தவறுகளை மூடி மறைப்பதற்காகவும் பயங்கரவாத செயற்பாடுகளை மூடி மறைப்பதற்காகவும் சாதாரண மக்களுக்கு எதிராக பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்த மாட்டோம் என்று சர்வதேச மட்டத்திற்கு கொடுத்த வாக்குறுதியை மீறி பயங்கரவாத சட்டம் தமிழர்கள் மீது  பாய்ந்திருப்பதை மூடி மறைக்கும் முறையிலே விஜயதாஸ ராஜபக்ச எனக்கும் எங்களுடைய தலைவர்களுக்கும் எதிராக பொய்களை பதிவு செய்திருக்கின்றார் 

சிங்கள பௌத்த மேலாதிக்க போக்கு காரணமாகவே தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தினார்கள். அந்த ஆயுத போராட்டத்தால் இனவாதம் தோன்றுவதற்கு இனவாத போக்குகள் தான் காரணமாக இருந்தது. தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டமாக இருந்த போதும் அதை தமிழ் மக்களுடைய பயங்கரவாத போராட்டமாக முத்திரை குத்தி இனப்படுகொலை செய்துள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

சிங்கள பௌத்த மேலாதிக்க போக்கு காரணமாகவே தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தினார்கள். சபையில் விளக்கமளித்த கஜேந்திரன் எம்.பி.samugammedia கடந்த வாரம் வடக்கு கிழக்கு மக்கள்  தங்களுடைய உறவுகளை நினைவேந்தும் நினைவேந்தலில் தயாராகிக்கொண்டு இருந்தார்கள். இதனை நிறுத்துவதற்கு அரசு திரைமறைவிலே செயற்பட்டு கொண்டு இருந்தது என  பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன்தெரிவித்துள்ளார்.பாராளுமன்றில் இன்று இடம்பெற்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,கடந்த காலங்களிலே இவ்வாறான நினைவேந்தல்களை நடத்துவதற்கு முழு சுதந்திரமும் உள்ளது என வாக்குறுதியை ரணில் விக்ரமசிங்கவும்  நிதியமைச்சரும் வழங்கியிருந்தனர். உலக நாடுகளிடம் இருந்து நிதியுதவியையும் ஏனைய உதவிகளையும் பெற்றுக்கொள்வதற்காக மனித உரிமை பேனப்படுவதாகவும் தமிழ் மக்களுடைய  சகல உரிமைகளும் மதிக்கப்படுவதாகவும் காட்டிக்கொண்டு தமிழர்களை முழுமையாக ஒடுக்குகின்ற செயன்முறை இடம் பெற்றுள்ளது. நினைவேந்தலை தடுப்பதற்காக கிழக்கு மாகாணம் முழுவதிலும் பொலிஸாரை பயன்படுத்தி மிகப்பெரும் அச்சுறுத்தலும் அட்டூழியங்களும் அரங்கேற்றப்பட்டுள்ளது. மேலும் அரசினுடைய தவறுகளை மூடி மறைப்பதற்காகவும் பயங்கரவாத செயற்பாடுகளை மூடி மறைப்பதற்காகவும் சாதாரண மக்களுக்கு எதிராக பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்த மாட்டோம் என்று சர்வதேச மட்டத்திற்கு கொடுத்த வாக்குறுதியை மீறி பயங்கரவாத சட்டம் தமிழர்கள் மீது  பாய்ந்திருப்பதை மூடி மறைக்கும் முறையிலே விஜயதாஸ ராஜபக்ச எனக்கும் எங்களுடைய தலைவர்களுக்கும் எதிராக பொய்களை பதிவு செய்திருக்கின்றார் சிங்கள பௌத்த மேலாதிக்க போக்கு காரணமாகவே தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தினார்கள். அந்த ஆயுத போராட்டத்தால் இனவாதம் தோன்றுவதற்கு இனவாத போக்குகள் தான் காரணமாக இருந்தது. தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டமாக இருந்த போதும் அதை தமிழ் மக்களுடைய பயங்கரவாத போராட்டமாக முத்திரை குத்தி இனப்படுகொலை செய்துள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement