டித்வா புயல் நிலைமை காரணமாக ஊவா பரணகம, மஸ்பன்ன நகருக்கு அருகில் மண் சரிவில் சிக்கிப் புதையுண்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்று 171 நாட்களுக்குப் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மஸ்பன்ன நகரின் பேருந்து நிறுத்தத்திற்கு அருகில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக, அதற்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்துகள், மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கரவண்டிகள் மற்றும் சில வர்த்தக நிலையங்கள் மீது மண்மேடு மற்றும் கற்பாறைகள் வீழ்ந்து மூடியது.
அப்பகுதியில் காணப்பட்ட அதிக ஆபத்து காரணமாக மண் மற்றும் கற்களை அகற்றும் பணிகள் மிகவும் மந்தகதியிலேயே இடம்பெற்றதுடன், தற்போதைய நாட்களிலும் அப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறு மண் மற்றும் கற்பாறைகளை அகற்றும் போதே இந்த முச்சக்கரவண்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது வலப்பனை டிப்போவில் பணிபுரியும் பேருந்து நடத்துனர் ஒருவருக்குச் சொந்தமானது எனவும் கூறப்படுகிறது.
அன்று இரவு இந்த பேருந்து நிறுத்தத்திற்கு அருகில் தனது முச்சக்கரவண்டியை நிறுத்திவிட்டுச் சென்ற வேளையிலேயே, இந்த துரதிர்ஷ்டவசமான நிலையை அவர் எதிர்கொண்டுள்ளார்.
டித்வா அனர்த்தத்தில் மண்ணுக்குள் புதையுண்ட முச்சக்கரவண்டி 171 நாட்களின் பின் மீட்பு டித்வா புயல் நிலைமை காரணமாக ஊவா பரணகம, மஸ்பன்ன நகருக்கு அருகில் மண் சரிவில் சிக்கிப் புதையுண்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்று 171 நாட்களுக்குப் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மஸ்பன்ன நகரின் பேருந்து நிறுத்தத்திற்கு அருகில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக, அதற்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்துகள், மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கரவண்டிகள் மற்றும் சில வர்த்தக நிலையங்கள் மீது மண்மேடு மற்றும் கற்பாறைகள் வீழ்ந்து மூடியது. அப்பகுதியில் காணப்பட்ட அதிக ஆபத்து காரணமாக மண் மற்றும் கற்களை அகற்றும் பணிகள் மிகவும் மந்தகதியிலேயே இடம்பெற்றதுடன், தற்போதைய நாட்களிலும் அப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு மண் மற்றும் கற்பாறைகளை அகற்றும் போதே இந்த முச்சக்கரவண்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது வலப்பனை டிப்போவில் பணிபுரியும் பேருந்து நடத்துனர் ஒருவருக்குச் சொந்தமானது எனவும் கூறப்படுகிறது. அன்று இரவு இந்த பேருந்து நிறுத்தத்திற்கு அருகில் தனது முச்சக்கரவண்டியை நிறுத்திவிட்டுச் சென்ற வேளையிலேயே, இந்த துரதிர்ஷ்டவசமான நிலையை அவர் எதிர்கொண்டுள்ளார்.