• Mar 10 2026

வீதியோரம் நடந்து சென்றவர்களுக்கு நடந்த துயரம்; சிறுவனையும், முதியவரையும் பலியெடுத்த அதிவேகம்

Chithra / Feb 15th 2026, 8:18 am
image

மாத்தறை மாவட்டம், கம்புறுபிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற வீதி விபத்தில் சிறுவன் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.


நேற்று மாலை கம்புறுபிட்டிய பகுதியில் சிறுவன் ஒருவன் தனது தந்தையுடன் வீதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, பின்னால் அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று அவர்கள் மீது மோதியுள்ளது.


இந்த விபத்தில் மேற்படி சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், அவருடன் சென்ற தந்தை சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.


சம்பவத்தில் கம்புறுபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 9 வயதுடைய சிறுவனே உயிரிழந்துள்ளார்.


மோட்டார் சைக்கிளின் அதீத வேகமே இந்த விபத்துக்குக் காரணம் எனப் பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


விபத்துடன் தொடர்புடைய மோட்டார் சைக்கிள் செலுத்துநர் காயமடைந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். 


அவர் பொலிஸ் பாதுகாப்பின் கீழ் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.


இதேவேளை


கம்பஹா மாவட்டம், பியகமை பிரதேசத்தில் இடம்பெற்ற கோர விபத்தில் வயோதிபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.


நேற்று இரவு பியகமை பகுதியில் வீதியின் ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்த வயோதிபர் மீது, பின்னால் வந்த டிப்பர் ரக வாகனம் ஒன்று மோதியுள்ளது.


அதிவேகமாக வந்த டிப்பர் வாகனம் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து மோதியதே இந்த விபத்துக்குக் காரணம் எனப் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


இந்த விபத்தில் பியகமை பிரதேசத்தைச் சேர்ந்த 72 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


விபத்து தொடர்பில் டிப்பர் வாகனத்தின் சாரதியைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.


உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.


சம்பவம் குறித்து பியகமை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், கைது செய்யப்பட்ட சாரதியை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தவும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.


வீதியோரம் நடந்து சென்றவர்களுக்கு நடந்த துயரம்; சிறுவனையும், முதியவரையும் பலியெடுத்த அதிவேகம் மாத்தறை மாவட்டம், கம்புறுபிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற வீதி விபத்தில் சிறுவன் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.நேற்று மாலை கம்புறுபிட்டிய பகுதியில் சிறுவன் ஒருவன் தனது தந்தையுடன் வீதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, பின்னால் அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று அவர்கள் மீது மோதியுள்ளது.இந்த விபத்தில் மேற்படி சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், அவருடன் சென்ற தந்தை சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.சம்பவத்தில் கம்புறுபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 9 வயதுடைய சிறுவனே உயிரிழந்துள்ளார்.மோட்டார் சைக்கிளின் அதீத வேகமே இந்த விபத்துக்குக் காரணம் எனப் பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.விபத்துடன் தொடர்புடைய மோட்டார் சைக்கிள் செலுத்துநர் காயமடைந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் பொலிஸ் பாதுகாப்பின் கீழ் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.இதேவேளைகம்பஹா மாவட்டம், பியகமை பிரதேசத்தில் இடம்பெற்ற கோர விபத்தில் வயோதிபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.நேற்று இரவு பியகமை பகுதியில் வீதியின் ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்த வயோதிபர் மீது, பின்னால் வந்த டிப்பர் ரக வாகனம் ஒன்று மோதியுள்ளது.அதிவேகமாக வந்த டிப்பர் வாகனம் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து மோதியதே இந்த விபத்துக்குக் காரணம் எனப் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.இந்த விபத்தில் பியகமை பிரதேசத்தைச் சேர்ந்த 72 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.விபத்து தொடர்பில் டிப்பர் வாகனத்தின் சாரதியைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.சம்பவம் குறித்து பியகமை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், கைது செய்யப்பட்ட சாரதியை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தவும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement