• Jul 09 2026

முடிவுக்கு வந்த அமெரிக்காவின் அசுர வான் தாக்குதல் -80-க்கும் மேற்பட்ட ராணுவ இலக்குகள் தரைமட்டம்!!

Ziya / Jul 8th 2026, 2:54 pm
image

மத்திய கிழக்கில் பெரும் போர் மேகங்களைச் சூழ்ந்துள்ள நிலையில், ஈரான் மற்றும் அதன் ஆதரவுப் படைகளுக்குச் சொந்தமான வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் (IRGC) அதிவேகத் தாக்குதல் படகுகள் உள்ளிட்ட 80-க்கும் மேற்பட்ட மூலோபாய ராணுவ இலக்குகளைத் தரைமட்டமாக்கிய பின்னர், தனது தற்போதைய அசுரத் தாக்குதல் அலைகள் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளையகம் (CENTCOM) அதிகாரப்பூர்வமாகப் பிரகடனம் செய்துள்ளது. 


அமெரிக்காவின் இந்த அதிரடித் தாக்குதலால் ஒட்டுமொத்த வளைகுடா பிராந்தியமும், சர்வதேச எரிசக்திச் சந்தைகளும் உச்சகட்டப் பதற்றத்தில் உறைந்துள்ளன.


ஈரானின் வான் பாதுகாப்பு அரண்கள், ஏவுகணை ஏவுதளங்கள், ஆயுதக் கிடங்குகள் மற்றும் ஹோர்முஸ் ஜலசந்தியில் அச்சுறுத்தலாக விளங்கிய IRGC-ன் கடற்படைப் படகுகள் என 80-க்கும் மேற்பட்ட முக்கிய இலக்குகள் மீது அமெரிக்காவின் அதிநவீன போர் விமானங்கள் மற்றும் கப்பற்படை ஏவுகணைகள் மூலம் இந்தத் கொடூரத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.



பிராந்தியத்தில் உள்ள அமெரிக்கப் படைகள் மற்றும் சர்வதேச வர்த்தகக் கப்பல்களின் பாதுகாப்பை உறுதி செய்யவே இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டதாக CENTCOM தெரிவித்துள்ளது.


அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அண்மையில் ஈரானுக்கு விடுத்திருந்த, "ஒன்று ஒப்பந்தம் செய், இல்லையேல் கதையை முடிப்போம்" என்ற அசுர ராணுவ எச்சரிக்கையின் நேரடிப் பிரதிபலிப்பாகவே இந்தத் தாக்குதல் பார்க்கப்படுகிறது.

முடிவுக்கு வந்த அமெரிக்காவின் அசுர வான் தாக்குதல் -80-க்கும் மேற்பட்ட ராணுவ இலக்குகள் தரைமட்டம் மத்திய கிழக்கில் பெரும் போர் மேகங்களைச் சூழ்ந்துள்ள நிலையில், ஈரான் மற்றும் அதன் ஆதரவுப் படைகளுக்குச் சொந்தமான வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் (IRGC) அதிவேகத் தாக்குதல் படகுகள் உள்ளிட்ட 80-க்கும் மேற்பட்ட மூலோபாய ராணுவ இலக்குகளைத் தரைமட்டமாக்கிய பின்னர், தனது தற்போதைய அசுரத் தாக்குதல் அலைகள் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளையகம் (CENTCOM) அதிகாரப்பூர்வமாகப் பிரகடனம் செய்துள்ளது. அமெரிக்காவின் இந்த அதிரடித் தாக்குதலால் ஒட்டுமொத்த வளைகுடா பிராந்தியமும், சர்வதேச எரிசக்திச் சந்தைகளும் உச்சகட்டப் பதற்றத்தில் உறைந்துள்ளன.ஈரானின் வான் பாதுகாப்பு அரண்கள், ஏவுகணை ஏவுதளங்கள், ஆயுதக் கிடங்குகள் மற்றும் ஹோர்முஸ் ஜலசந்தியில் அச்சுறுத்தலாக விளங்கிய IRGC-ன் கடற்படைப் படகுகள் என 80-க்கும் மேற்பட்ட முக்கிய இலக்குகள் மீது அமெரிக்காவின் அதிநவீன போர் விமானங்கள் மற்றும் கப்பற்படை ஏவுகணைகள் மூலம் இந்தத் கொடூரத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.பிராந்தியத்தில் உள்ள அமெரிக்கப் படைகள் மற்றும் சர்வதேச வர்த்தகக் கப்பல்களின் பாதுகாப்பை உறுதி செய்யவே இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டதாக CENTCOM தெரிவித்துள்ளது.அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அண்மையில் ஈரானுக்கு விடுத்திருந்த, "ஒன்று ஒப்பந்தம் செய், இல்லையேல் கதையை முடிப்போம்" என்ற அசுர ராணுவ எச்சரிக்கையின் நேரடிப் பிரதிபலிப்பாகவே இந்தத் தாக்குதல் பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement