• Aug 21 2025

விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச்சென்ற வாகனம்; நெடுங்கேணியில் வீதிக்கரையில் மீட்கப்பட்ட சடலம்

Chithra / Aug 20th 2025, 3:22 pm
image

வவுனியா நெடுங்கேணி பகுதியில் முல்லைத்தீவு பிரதான வீதியில் இருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் காயங்களுடன் நேற்று இரவு மீட்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் கனகராயன்குளம் பெரியகுளத்தைச் சேர்ந்த ச.ரவிக்குமார் என்ற 45 வயதான குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார். 

குறித்த நபர் அந்த பகுதியில் உள்ள மில் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். 

நேற்றயதினம் இரவு அவர் பணிமுடிந்து வெளியில் சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில் முல்லைத்தீவு பிரதானவீதியில் அமைந்துள்ள பாலத்தின் கரையில் அவரது சடலம் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளது.

அவரது சடலதிற்கு அண்மையில் வாகனம் ஒன்றின் உதிரிப்பாகங்கள் உடைந்த நிலையில் காணப்படுகின்றது.  அவரை வாகனம் ஒன்று மோதித்தள்ளிவிட்டு நிறுத்தாமல் சென்றுள்ளதாக பொலிசார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். 

சம்பவம் தொடர்பாக பல்வேறு கோணங்களில் நெடுங்கேணி பொலிசார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச்சென்ற வாகனம்; நெடுங்கேணியில் வீதிக்கரையில் மீட்கப்பட்ட சடலம் வவுனியா நெடுங்கேணி பகுதியில் முல்லைத்தீவு பிரதான வீதியில் இருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் காயங்களுடன் நேற்று இரவு மீட்கப்பட்டுள்ளது.சம்பவத்தில் கனகராயன்குளம் பெரியகுளத்தைச் சேர்ந்த ச.ரவிக்குமார் என்ற 45 வயதான குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார். குறித்த நபர் அந்த பகுதியில் உள்ள மில் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். நேற்றயதினம் இரவு அவர் பணிமுடிந்து வெளியில் சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்தநிலையில் முல்லைத்தீவு பிரதானவீதியில் அமைந்துள்ள பாலத்தின் கரையில் அவரது சடலம் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளது.அவரது சடலதிற்கு அண்மையில் வாகனம் ஒன்றின் உதிரிப்பாகங்கள் உடைந்த நிலையில் காணப்படுகின்றது.  அவரை வாகனம் ஒன்று மோதித்தள்ளிவிட்டு நிறுத்தாமல் சென்றுள்ளதாக பொலிசார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். சம்பவம் தொடர்பாக பல்வேறு கோணங்களில் நெடுங்கேணி பொலிசார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement