கிழக்கிலங்கையில் பிரசித்தி பெற்ற சின்னக் கதிர்காமம் என்றழைக்கப்படும் திருகோணமலை - வெருகல் ஸ்ரீ சித்திரவேலாயுதர் சுவாமி தேவஸ்தானத்தின் தீர்த்தோற்சவம் வெருகல் மஹாவலி கங்கை ஆற்றில் இன்று காலை இடம்பெற்றது.
கஜாவல்லி, மஹாவல்லி சமேத சித்திர வேலாயுதர் சுவாமியார் எழுந்தருளி, பக்த அடியார்களின் அரோகரா கோசத்துடன் தீர்த்த கரைக்கு சென்று தீர்த்தம் இடம்பெற்றது.
வெருகல் ஸ்ரீ சித்திரவேலாயுதர் சுவாமி தேவஸ்தானத்தின் வருடாந்த மஹோட்சவம் ஆகஸ்ட் மாதம் 25 ஆம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, 18 நாட்கள் திருவிழாக்கள் இடம்பெற்று இன்று இடம்பெற்ற தீர்த்தோற்சவத்துடன் வருடாந்த மஹோட்சவம் நிறைவடைந்தது.
இவ் தீர்தோற்சவத்தில் நாட்டின் பல பாகங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்த அடியார்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
வெருகல் சித்திரவேலாயுதர் சுவாமி ஆலயத்தின் தீர்த்த உற்சவம் கிழக்கிலங்கையில் பிரசித்தி பெற்ற சின்னக் கதிர்காமம் என்றழைக்கப்படும் திருகோணமலை - வெருகல் ஸ்ரீ சித்திரவேலாயுதர் சுவாமி தேவஸ்தானத்தின் தீர்த்தோற்சவம் வெருகல் மஹாவலி கங்கை ஆற்றில் இன்று காலை இடம்பெற்றது.கஜாவல்லி, மஹாவல்லி சமேத சித்திர வேலாயுதர் சுவாமியார் எழுந்தருளி, பக்த அடியார்களின் அரோகரா கோசத்துடன் தீர்த்த கரைக்கு சென்று தீர்த்தம் இடம்பெற்றது.வெருகல் ஸ்ரீ சித்திரவேலாயுதர் சுவாமி தேவஸ்தானத்தின் வருடாந்த மஹோட்சவம் ஆகஸ்ட் மாதம் 25 ஆம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, 18 நாட்கள் திருவிழாக்கள் இடம்பெற்று இன்று இடம்பெற்ற தீர்த்தோற்சவத்துடன் வருடாந்த மஹோட்சவம் நிறைவடைந்தது.இவ் தீர்தோற்சவத்தில் நாட்டின் பல பாகங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்த அடியார்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.