• Feb 14 2026

வாழை, தென்னை மரங்களை முற்றாக அழித்த காட்டு யானை; இலட்சங்களை இழந்த கிளிநொச்சி விவசாயின் கோரிக்கை

Chithra / Feb 13th 2026, 12:22 pm
image

கிளிநொச்சி - தர்மபுரம் பகுதியில் நேற்றிரவு புகுந்த காட்டு யானைகளால் விவசாயி ஒருவரின், ஒரு ஏக்கர் வரையான வாழை மரங்களை மற்றும் தென்னை முற்றாக அழித்துள்ளன.


புளியம்பொக்கனை கம நலசேவை பிரிவுக்குட்பட்ட தர்மபுரம் பகுதியில் வாழ்வாதாரத்திற்காக வைக்கப்பட்டிருந்த ஒரு ஏக்கர் வாழை, தென்னை மரங்களை யானைகள் முற்று முழுதாக அழித்து துவம்சம் செய்துள்ளன.


குறித்த வாழை செய்கை தற்பொழுது அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.


இதனால் பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயி தெரிவித்தார்.  


எனவே குறித்த விடயம் தொடர்பாக  சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் வந்து பார்வையிட்டு நஷ்ட ஈட்டை பெற்று தர வேண்டும் என பாதிக்கப்பட்ட விவசாயி கோரிக்கை விடுத்தார். 


வாழை, தென்னை மரங்களை முற்றாக அழித்த காட்டு யானை; இலட்சங்களை இழந்த கிளிநொச்சி விவசாயின் கோரிக்கை கிளிநொச்சி - தர்மபுரம் பகுதியில் நேற்றிரவு புகுந்த காட்டு யானைகளால் விவசாயி ஒருவரின், ஒரு ஏக்கர் வரையான வாழை மரங்களை மற்றும் தென்னை முற்றாக அழித்துள்ளன.புளியம்பொக்கனை கம நலசேவை பிரிவுக்குட்பட்ட தர்மபுரம் பகுதியில் வாழ்வாதாரத்திற்காக வைக்கப்பட்டிருந்த ஒரு ஏக்கர் வாழை, தென்னை மரங்களை யானைகள் முற்று முழுதாக அழித்து துவம்சம் செய்துள்ளன.குறித்த வாழை செய்கை தற்பொழுது அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.இதனால் பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயி தெரிவித்தார்.  எனவே குறித்த விடயம் தொடர்பாக  சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் வந்து பார்வையிட்டு நஷ்ட ஈட்டை பெற்று தர வேண்டும் என பாதிக்கப்பட்ட விவசாயி கோரிக்கை விடுத்தார். 

Advertisement

Advertisement

Advertisement