காற்றின் வேகம் காரணமாக காற்றாலையில் அமைக்கப்பட்டருந்த காற்றாடி இயந்திரம் உடைந்து விழுந்து 6 துண்டுகளாக சிதறிய சம்பவம் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இடம்பெற்றுள்ளது.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே சீலநாயக்கன்பட்டி செரியன்காடு தோட்டம் பகுதியில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான காற்றாலை செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான காற்றாலை எந்திரங்கள் நிறுவப்பட்டு மின்உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் நேற்று காலை காற்றின் வேகம் காரணமாக காற்றாலையில் அமைக்கப்பட்டு இருந்த காற்றாடி எந்திரம் உடைந்து விழுந்து 6 துண்டுகளாக சிதறியது.
காற்றாலை அமைந்துள்ள பகுதியில் விவசாய நிலங்கள் உள்ள நிலையில் நேற்றுறு காலை யாரும் பணியில் ஈடுபடாததால் அதிர்ஷ்டவசமாக விவசாயிகள் உயிர் தப்பியதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன
சேதமடைந்த காற்றாலை எந்திரத்தின் மதிப்பு ரூ.3 கோடி இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
காற்றாலை எந்திரம் அருகே உள்ள மின் கம்பிகள் துண்டிக்கப்பட்டதால் அப்பகுதியில் மின்தடை ஏற்பட்டது. இதனால் அப்பகுதி கிராமமக்கள் அவதிக்கு உள்ளாகினர்.
எனவே காற்றாலை எந்திரங்களை முறையாக பராமரித்து இயக்க வேண்டும் என கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் இலங்கையின் மன்னார், பூநகரி பகுதிகளிலும் கற்றாலை அமைக்கும் திட்டத்தை இந்தியாவின் பிரபல நிறுவனமான அதானி மேற்கொள்ள திட்டமிட்டிருந்த நிலையில் மக்களின் நீண்ட கால கடும் எதிர்ப்பால் தற்சமயம் கைவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
காற்றின் வேகத்தால் திடீரென உடைந்து விழுந்த காற்றாலை இயந்திரம் காற்றின் வேகம் காரணமாக காற்றாலையில் அமைக்கப்பட்டருந்த காற்றாடி இயந்திரம் உடைந்து விழுந்து 6 துண்டுகளாக சிதறிய சம்பவம் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இடம்பெற்றுள்ளது. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே சீலநாயக்கன்பட்டி செரியன்காடு தோட்டம் பகுதியில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான காற்றாலை செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான காற்றாலை எந்திரங்கள் நிறுவப்பட்டு மின்உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.இந்தநிலையில் நேற்று காலை காற்றின் வேகம் காரணமாக காற்றாலையில் அமைக்கப்பட்டு இருந்த காற்றாடி எந்திரம் உடைந்து விழுந்து 6 துண்டுகளாக சிதறியது. காற்றாலை அமைந்துள்ள பகுதியில் விவசாய நிலங்கள் உள்ள நிலையில் நேற்றுறு காலை யாரும் பணியில் ஈடுபடாததால் அதிர்ஷ்டவசமாக விவசாயிகள் உயிர் தப்பியதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன சேதமடைந்த காற்றாலை எந்திரத்தின் மதிப்பு ரூ.3 கோடி இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது. காற்றாலை எந்திரம் அருகே உள்ள மின் கம்பிகள் துண்டிக்கப்பட்டதால் அப்பகுதியில் மின்தடை ஏற்பட்டது. இதனால் அப்பகுதி கிராமமக்கள் அவதிக்கு உள்ளாகினர். எனவே காற்றாலை எந்திரங்களை முறையாக பராமரித்து இயக்க வேண்டும் என கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இந்நிலையில் இலங்கையின் மன்னார், பூநகரி பகுதிகளிலும் கற்றாலை அமைக்கும் திட்டத்தை இந்தியாவின் பிரபல நிறுவனமான அதானி மேற்கொள்ள திட்டமிட்டிருந்த நிலையில் மக்களின் நீண்ட கால கடும் எதிர்ப்பால் தற்சமயம் கைவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.