புத்தளம் - முந்தல் சின்னப்பாடு பகுதியில் உள்ள வீடொன்றில் தொங்கிய நிலையில் இளைஞர் ஒருவர் நேற்று மாலை (27) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
முந்தல் - சின்னப்பாடு பகுதியைச் சேர்ந்த வர்ணகுலசூரிய லசிந்த கவிஸ்க லிவேரா எனும் 19 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த இளைஞர் மீன்பிடித் தொழில் நிமித்தம் முல்லைத்தீவு - கொக்கிளாய் பகுதிக்குச் சென்ற நிலையில், இரண்டு நாட்களின் பின்பு நேற்று (27) திடீரென வீட்டுக்கு வந்துள்ளார் எனவும், அதன்பின்னர் வீட்டின் அறையொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து, அங்கிருந்தவர்கள் குறித்த இளைஞனை உடனடியாக கொத்தாந்தீவு வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும், அவரை பரிசோதனை செய்த வைத்தியர் அந்த இளைஞர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, சம்பவம் பற்றி உடப்பு பொலிஸாருக்கும், புத்தளம் பகுதிக்குப் பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரிக்கும் தெரியப்படுத்தப்பட்டது.
இதன்போது, சம்பவ இடத்திற்கும், கொத்தாந்தீவு வைத்தியசாலைக்கும் விஜயம் செய்த புத்தளம் பகுதிக்குப் பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி தேசமான்ய பதுர்தீன் முஹம்மது ஹிசாம், அங்கு மரண விசாரணையை மேற்கொண்டதுடன், சடலத்தை பிரேத பரிசோதனைக்காக புத்தளம் தள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறும் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன், உயிரிழந்த இளைஞனின் சடலம் இன்று (28) பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன், தனக்குத் தானே சுருக்கிட்டதால் இந்த மரணம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து சடலத்தை தாயிடம் ஒப்படைத்துள்ளதாகவும் புத்தளம் பகுதிக்குப் பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி தேசமான்ய பதுர்தீன் முஹம்மது ஹிசாம் தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பில் உடப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
திடீரென வீட்டுக்கு வந்த இளைஞர்;தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு புத்தளம் - முந்தல் சின்னப்பாடு பகுதியில் உள்ள வீடொன்றில் தொங்கிய நிலையில் இளைஞர் ஒருவர் நேற்று மாலை (27) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.முந்தல் - சின்னப்பாடு பகுதியைச் சேர்ந்த வர்ணகுலசூரிய லசிந்த கவிஸ்க லிவேரா எனும் 19 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.குறித்த இளைஞர் மீன்பிடித் தொழில் நிமித்தம் முல்லைத்தீவு - கொக்கிளாய் பகுதிக்குச் சென்ற நிலையில், இரண்டு நாட்களின் பின்பு நேற்று (27) திடீரென வீட்டுக்கு வந்துள்ளார் எனவும், அதன்பின்னர் வீட்டின் அறையொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டார் எனத் தெரிவிக்கப்படுகிறது.இதனையடுத்து, அங்கிருந்தவர்கள் குறித்த இளைஞனை உடனடியாக கொத்தாந்தீவு வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும், அவரை பரிசோதனை செய்த வைத்தியர் அந்த இளைஞர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.இதனையடுத்து, சம்பவம் பற்றி உடப்பு பொலிஸாருக்கும், புத்தளம் பகுதிக்குப் பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரிக்கும் தெரியப்படுத்தப்பட்டது.இதன்போது, சம்பவ இடத்திற்கும், கொத்தாந்தீவு வைத்தியசாலைக்கும் விஜயம் செய்த புத்தளம் பகுதிக்குப் பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி தேசமான்ய பதுர்தீன் முஹம்மது ஹிசாம், அங்கு மரண விசாரணையை மேற்கொண்டதுடன், சடலத்தை பிரேத பரிசோதனைக்காக புத்தளம் தள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறும் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.அத்துடன், உயிரிழந்த இளைஞனின் சடலம் இன்று (28) பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன், தனக்குத் தானே சுருக்கிட்டதால் இந்த மரணம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து சடலத்தை தாயிடம் ஒப்படைத்துள்ளதாகவும் புத்தளம் பகுதிக்குப் பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி தேசமான்ய பதுர்தீன் முஹம்மது ஹிசாம் தெரிவித்தார்.இந்த சம்பவம் தொடர்பில் உடப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.