• Sep 20 2024

100 வயதைக் கடந்த 450 பேர் இலங்கையில் வசிப்பதாக அமைச்சர் தகவல்!

Chithra / Jul 12th 2024, 8:03 am
image

Advertisement

 

இலங்கையில்  100 வயதை கடந்த 450 பேர் வசிப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய  தெரிவித்துள்ளார்.

குறித்த தகவலை நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், அவர்கள் வயது முதிர்ந்தவர்களுக்கான விசேட அரச கொடுப்பனவுக்குத் தகுதி பெற்றிருப்பதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் நாட்டில் 2.7 மில்லியன் பேர் 60 வயதைக் கடந்தவர்களாக இருப்பதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

இதேவேளை மக்கள் தொகை பிரச்சினை குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் ஜூலை 11 ஆம் திகதி உலக மக்கள் தொகை தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகின்றது.


100 வயதைக் கடந்த 450 பேர் இலங்கையில் வசிப்பதாக அமைச்சர் தகவல்  இலங்கையில்  100 வயதை கடந்த 450 பேர் வசிப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய  தெரிவித்துள்ளார்.குறித்த தகவலை நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது அவர் தெரிவித்துள்ளார்.அத்துடன், அவர்கள் வயது முதிர்ந்தவர்களுக்கான விசேட அரச கொடுப்பனவுக்குத் தகுதி பெற்றிருப்பதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.மேலும் நாட்டில் 2.7 மில்லியன் பேர் 60 வயதைக் கடந்தவர்களாக இருப்பதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.இதேவேளை மக்கள் தொகை பிரச்சினை குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் ஜூலை 11 ஆம் திகதி உலக மக்கள் தொகை தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகின்றது.

Advertisement

Advertisement

Advertisement