நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் அஞ்சலி நிகழ்வை நடத்த அனுமதிக்க கூடாது என பொலிஸார் விடுத்த கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
சட்டத்தரணி மணிவண்ணன், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்டோர் திலீபனின் நினைவிடத்திற்கு உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்த நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், இந்த நினைவேந்தல்களுக்கு தடை விதிக்கக் கோரி பொலிஸார் நீதிமன்றத்தை அணுகியிருந்தனர்.
குறித்த விடயம் தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்காக எடுக்கப்பட்டது.
இதன் போது சட்டத்தரணி மணிவண்ணன் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தார்.
எனினும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், கிளிநொச்சியில் உள்ள வழக்கொன்றுக்காகச் சென்றதால் இந்த வழக்கில் அவரால் கலந்து கொள்ள முடியவில்லை.
அத்துடன் எதிராளிகள் தரப்பில் மூத்த சட்டத்தரணி சிறீகாந்தா தலைமையில் சட்டத்தரணிகள் திருக்குமரன், மகிந்தன், றமணன், ரிசிகேசன், கௌதமன் உள்ளிட்டவர்கள் நீதி மன்றில் முன்னிலையானார்கள்.
இவ்வழக்கில் இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதியரசர் ஏ.ஆனந்தராஜா, 2011ஆம் ஆண்டு புலிச் சின்னங்களைப் பயன்படுத்த தடைவிதித்து வர்த்தமானி அறிவித்தலை வெளியிடப்பட்டது .எனினும் இறந்தவர்களின் நினைவேந்தல் நடத்த தடை இல்லை. இதன் பின்னர் 13 வருடங்களாக மக்கள் நினைவேந்தலை அனுஷ்டித்து வருகின்றனர். அவற்றைத் தடுப்பதற்கு ஜனாதிபதியோ, பாதுகாப்பு அமைச்சோ, பாராளுமன்றமோ எந்தவொரு சட்ட நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், அஞ்சலி நிகழ்வுகளை நடத்த தடை விதிக்க வேண்டும் என பொலிஸார் கோரிக்கை விடுத்து வருவதை ஏற்க முடியாது. என தெரிவித்தார்.
இதேவேளை தேர்தல் காலம் என்பதால், அதைக் கருத்திற்கொண்டு அஞ்சலிக்குத் தடை விதிக்கவேண்டும் என்றும் பொலிஸார் கோரினார்கள். இதற்கு, தேர்தல் காலத் தின்போது வாகனப் பேரணிகள் நடத்து வதற்கு மட்டுமே தடை விதிக்க முடியும் என்று தெரிவித்த நீதிவான் அவ்வாறு வாகனப் பேரணிகள் இடம்பெறாது என் பதற்கான உத்தரவாதங்களை எதிர்த்தரப்பினரிடம் இருந்து பெற்றுக்கொண்டார். அத்துடன் வழக்கை நீதிவான் முடிவுறுத்தினார்.
“மேலும், ஒலிபெருக்கிகளை பயன்படுத்த அனுமதி வழங்கும் அதிகாரம் பொலிஸாரிடம் இருப்பதால், இது தொடர்பில் பொலிஸாரே இறுதி முடிவை எடுக்கலாம் எனவும் நீதிபதி அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
திலீபனை அஞ்சலிக்க தடை இல்லை - நீதிமன்றம் தீர்ப்பு நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் அஞ்சலி நிகழ்வை நடத்த அனுமதிக்க கூடாது என பொலிஸார் விடுத்த கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.சட்டத்தரணி மணிவண்ணன், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்டோர் திலீபனின் நினைவிடத்திற்கு உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்த நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், இந்த நினைவேந்தல்களுக்கு தடை விதிக்கக் கோரி பொலிஸார் நீதிமன்றத்தை அணுகியிருந்தனர்.குறித்த விடயம் தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்காக எடுக்கப்பட்டது. இதன் போது சட்டத்தரணி மணிவண்ணன் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தார். எனினும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், கிளிநொச்சியில் உள்ள வழக்கொன்றுக்காகச் சென்றதால் இந்த வழக்கில் அவரால் கலந்து கொள்ள முடியவில்லை. அத்துடன் எதிராளிகள் தரப்பில் மூத்த சட்டத்தரணி சிறீகாந்தா தலைமையில் சட்டத்தரணிகள் திருக்குமரன், மகிந்தன், றமணன், ரிசிகேசன், கௌதமன் உள்ளிட்டவர்கள் நீதி மன்றில் முன்னிலையானார்கள்.இவ்வழக்கில் இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதியரசர் ஏ.ஆனந்தராஜா, 2011ஆம் ஆண்டு புலிச் சின்னங்களைப் பயன்படுத்த தடைவிதித்து வர்த்தமானி அறிவித்தலை வெளியிடப்பட்டது .எனினும் இறந்தவர்களின் நினைவேந்தல் நடத்த தடை இல்லை. இதன் பின்னர் 13 வருடங்களாக மக்கள் நினைவேந்தலை அனுஷ்டித்து வருகின்றனர். அவற்றைத் தடுப்பதற்கு ஜனாதிபதியோ, பாதுகாப்பு அமைச்சோ, பாராளுமன்றமோ எந்தவொரு சட்ட நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், அஞ்சலி நிகழ்வுகளை நடத்த தடை விதிக்க வேண்டும் என பொலிஸார் கோரிக்கை விடுத்து வருவதை ஏற்க முடியாது. என தெரிவித்தார்.இதேவேளை தேர்தல் காலம் என்பதால், அதைக் கருத்திற்கொண்டு அஞ்சலிக்குத் தடை விதிக்கவேண்டும் என்றும் பொலிஸார் கோரினார்கள். இதற்கு, தேர்தல் காலத் தின்போது வாகனப் பேரணிகள் நடத்து வதற்கு மட்டுமே தடை விதிக்க முடியும் என்று தெரிவித்த நீதிவான் அவ்வாறு வாகனப் பேரணிகள் இடம்பெறாது என் பதற்கான உத்தரவாதங்களை எதிர்த்தரப்பினரிடம் இருந்து பெற்றுக்கொண்டார். அத்துடன் வழக்கை நீதிவான் முடிவுறுத்தினார். “மேலும், ஒலிபெருக்கிகளை பயன்படுத்த அனுமதி வழங்கும் அதிகாரம் பொலிஸாரிடம் இருப்பதால், இது தொடர்பில் பொலிஸாரே இறுதி முடிவை எடுக்கலாம் எனவும் நீதிபதி அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.