• Aug 13 2026

இலங்கையில் தற்போது வெள்ள அபாயம் இல்லை: இயல்பு நிலைக்குத் திரும்பும் ஆறுகள்!

Chithra / Aug 11th 2026, 9:48 am
image


இலங்கை முழுவதும் மழைப்பொழிவு குறைந்துள்ளதால், நாட்டின் எந்தப் பகுதியிலும் தற்போது வெள்ள அபாயம் இல்லை என நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.


நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் பணிப்பாளர் பொறியியலாளர் எல்.எஸ். சூரியபண்டார இன்று (11) காலை இதனைத் தெரிவித்துள்ளார்.


கடந்த 24 மணி நேரத்தில் களு மற்றும் மகாவலி ஆறுகளின் மேல் நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலேயே அதிகபட்ச மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அப்பகுதிகளில் சுமார் 20 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.


நேற்று (10) காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும், மேல், வடமேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் மழைவீழ்ச்சி பதிவாகியிருந்தது.


எனினும், இப்பகுதிகளில் பதிவான மழைவீழ்ச்சி 10 மில்லிமீற்றருக்கும் குறைவாகவே காணப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.நாட்டின் ஏனைய பகுதிகளிலும் 10 மில்லிமீற்றருக்கும் குறைவான மழைவீழ்ச்சியே பதிவாகியுள்ளது.


மழைவீழ்ச்சி குறைந்துள்ளதால், நாட்டின் ஆறுகளில் நீர்மட்டம் வேகமாக உயர்வது தடுக்கப்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக தற்போது எந்தப் பகுதியிலும் வெள்ள அபாயம் இல்லை என்றும் நீர்ப்பாசனத் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.



இந்நிலையில்  இன்று சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 


மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.மேலும், ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


மாத்தறை தொடக்கம்  ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 - 60 கிலோ மீற்றரிலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக்கூடும். 


கொழும்பு தொடக்கம் காலி, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் கடல் அலையானது சுமார் 2.0 - 2.5 m உயரத்திற்கு மேலெளக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


இலங்கையில் தற்போது வெள்ள அபாயம் இல்லை: இயல்பு நிலைக்குத் திரும்பும் ஆறுகள் இலங்கை முழுவதும் மழைப்பொழிவு குறைந்துள்ளதால், நாட்டின் எந்தப் பகுதியிலும் தற்போது வெள்ள அபாயம் இல்லை என நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் பணிப்பாளர் பொறியியலாளர் எல்.எஸ். சூரியபண்டார இன்று (11) காலை இதனைத் தெரிவித்துள்ளார்.கடந்த 24 மணி நேரத்தில் களு மற்றும் மகாவலி ஆறுகளின் மேல் நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலேயே அதிகபட்ச மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அப்பகுதிகளில் சுமார் 20 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.நேற்று (10) காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும், மேல், வடமேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் மழைவீழ்ச்சி பதிவாகியிருந்தது.எனினும், இப்பகுதிகளில் பதிவான மழைவீழ்ச்சி 10 மில்லிமீற்றருக்கும் குறைவாகவே காணப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.நாட்டின் ஏனைய பகுதிகளிலும் 10 மில்லிமீற்றருக்கும் குறைவான மழைவீழ்ச்சியே பதிவாகியுள்ளது.மழைவீழ்ச்சி குறைந்துள்ளதால், நாட்டின் ஆறுகளில் நீர்மட்டம் வேகமாக உயர்வது தடுக்கப்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக தற்போது எந்தப் பகுதியிலும் வெள்ள அபாயம் இல்லை என்றும் நீர்ப்பாசனத் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.இந்நிலையில்  இன்று சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.மேலும், ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.மாத்தறை தொடக்கம்  ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 - 60 கிலோ மீற்றரிலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக்கூடும். கொழும்பு தொடக்கம் காலி, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் கடல் அலையானது சுமார் 2.0 - 2.5 m உயரத்திற்கு மேலெளக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement