• Apr 02 2025

வடக்கு, கிழக்கு இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை! நாமல் அதிரடிக் கருத்து

Chithra / Aug 19th 2024, 12:37 pm
image


வடக்கு கிழக்கினை இணைக்க அனுமதிக்க மாட்டோம் என  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டார்.

பேருவளையில் நேற்று இடம்பெற்ற ஆதரவாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

இணைந்த வடக்கு கிழக்கில் அதிகார பகிர்வு என்ற விடயம் தற்போது கோரிக்கையாக முன்வைக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இணைந்த வடகிழக்கில் அதிகார பகிர்வு என்ற விடயத்திற்கு தாம் ஆதரவு வழங்கப்போவதில்லை என தெரிவித்தார். 

இதேவேளை வடக்கு கிழக்கிற்கு காணி, காவல்துறை அதிகாரங்கள் வழங்கப்படமாட்டாது என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

வடக்கு, கிழக்கு இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை நாமல் அதிரடிக் கருத்து வடக்கு கிழக்கினை இணைக்க அனுமதிக்க மாட்டோம் என  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டார்.பேருவளையில் நேற்று இடம்பெற்ற ஆதரவாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இணைந்த வடக்கு கிழக்கில் அதிகார பகிர்வு என்ற விடயம் தற்போது கோரிக்கையாக முன்வைக்கப்பட்டு வருகிறது.இந்த நிலையில் இணைந்த வடகிழக்கில் அதிகார பகிர்வு என்ற விடயத்திற்கு தாம் ஆதரவு வழங்கப்போவதில்லை என தெரிவித்தார். இதேவேளை வடக்கு கிழக்கிற்கு காணி, காவல்துறை அதிகாரங்கள் வழங்கப்படமாட்டாது என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement