எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுன கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்துவதற்கு பொருத்தமான வேட்பாளர் கட்சிக்குள் இல்லை என ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரும், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
நெலும் மாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அலுவலகத்தில் இன்றையதினம்(27) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
இது தொடர்பில் தொடர்ந்து கருத்து தெரிவித்த அமைச்சர் பிரசன்ன,
தற்போதைக்கு நாடாளுமன்றத் தேர்தலின் மூலம் நாட்டில் நிலையான ஆட்சி கிடைக்காது எனவும், நாடு எதிர்கொண்டுள்ள நிலைமையில் இருந்து மீள்வதற்கு நிலையான அரசாங்கம் ஒன்றை நியமிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
அதேவேளை, ஜனாதிபதி தேர்தலின் பின்னர் பாராளுமன்ற தேர்தலை நடத்தி அதனை நியமிக்க முடியும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய காலத்தில் ஸ்திரமற்ற நிலையில் இருந்த நாட்டை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஸ்திரப்படுத்தியுள்ளார்.
இந்நிலையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதிக்கு மீண்டும் ஒரு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் எனவும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மொட்டுக் கட்சியில் முன்னிறுத்துவதற்கு பொருத்தமான வேட்பாளர் இல்லை அமைச்சர் பிரசன்ன மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட மொட்டுக் கட்சியில் பொருத்தமான ஆள் இல்லை. பிரசன்ன வெளிப்படை. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுன கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்துவதற்கு பொருத்தமான வேட்பாளர் கட்சிக்குள் இல்லை என ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரும், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.நெலும் மாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அலுவலகத்தில் இன்றையதினம்(27) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.இது தொடர்பில் தொடர்ந்து கருத்து தெரிவித்த அமைச்சர் பிரசன்ன,தற்போதைக்கு நாடாளுமன்றத் தேர்தலின் மூலம் நாட்டில் நிலையான ஆட்சி கிடைக்காது எனவும், நாடு எதிர்கொண்டுள்ள நிலைமையில் இருந்து மீள்வதற்கு நிலையான அரசாங்கம் ஒன்றை நியமிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.அதேவேளை, ஜனாதிபதி தேர்தலின் பின்னர் பாராளுமன்ற தேர்தலை நடத்தி அதனை நியமிக்க முடியும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.ஜனாதிபதி கோட்டாபய காலத்தில் ஸ்திரமற்ற நிலையில் இருந்த நாட்டை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஸ்திரப்படுத்தியுள்ளார்.இந்நிலையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதிக்கு மீண்டும் ஒரு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் எனவும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மொட்டுக் கட்சியில் முன்னிறுத்துவதற்கு பொருத்தமான வேட்பாளர் இல்லை அமைச்சர் பிரசன்ன மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.