அரச உத்தியோகத்தர்கள் மீது நம்பிக்கையில்லாத காரணத்தினால்தான் பிரஜாசக்தியை கொண்டு வந்தோமென பருத்தித்துறை பிரதேச சபையில் என்.பி.பி உறுப்பினர் ஒருவர் தெரிவித்த கருத்தால் சபையில் களேபரம் ஏற்பட்டது.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
இந்த வருடத்திற்கான முதல் அமர்வாக பருத்தித்துறை பிரதேச சபை அமர்வானது நேற்று காலை தவிசாளர் யுகதீஸ் தலைமையில் பருத்தித்துறை பிரதேச சபை மண்டபத்தில் இடம் பெற்றது.
இதன்போது முதலாவது பிரேரணையாக அரசாங்கத்தின் பிரஜா சக்திக்கு எதிராக தவிசாளரால் சபையில் கொண்டுவரப்பட்டது
இதற்கு எதிராக வாதிட்ட தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள், அரச ஊழியர்கள் அரசாங்கத்திற்கு உண்மையாய் இல்லை, அவர்கள் மீது நம்பிக்கையில்லாத காரணத்தினால்தான் இந்த பிரஜாசக்தியை கொண்டு வருகிறோம் என்ற ஒரு கருத்தை முன்வைத்தார்
இதனால் சபையில் கடும் அமளி துமளி ஏற்பட்டது. குறித்த உறுப்பினரின் கருத்திற்கு தவிசாளர் உட்பட ஏனைய உறுப்பினர்கள் தங்களுடைய வன்மையான கண்டனத்தை வெளிப்படுத்தினார்கள்
தவிசாளரால் கொண்டுவரப்பட்ட குறித்த பிரேரணை தமிழரசு கட்சியின் 9 வாக்குகளாலும், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஒரு வாக்குமாக 10 வாக்குகளால் பிரேரணை நிறைவேறியது.
அரச உத்தியோகத்தர்கள் மீது நம்பிக்கையில்லை; அதனால்தான் பிரஜாசக்தி NPP உறுப்பினரின் கருத்தால் களேபரமான சபை அரச உத்தியோகத்தர்கள் மீது நம்பிக்கையில்லாத காரணத்தினால்தான் பிரஜாசக்தியை கொண்டு வந்தோமென பருத்தித்துறை பிரதேச சபையில் என்.பி.பி உறுப்பினர் ஒருவர் தெரிவித்த கருத்தால் சபையில் களேபரம் ஏற்பட்டது.சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,இந்த வருடத்திற்கான முதல் அமர்வாக பருத்தித்துறை பிரதேச சபை அமர்வானது நேற்று காலை தவிசாளர் யுகதீஸ் தலைமையில் பருத்தித்துறை பிரதேச சபை மண்டபத்தில் இடம் பெற்றது.இதன்போது முதலாவது பிரேரணையாக அரசாங்கத்தின் பிரஜா சக்திக்கு எதிராக தவிசாளரால் சபையில் கொண்டுவரப்பட்டதுஇதற்கு எதிராக வாதிட்ட தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள், அரச ஊழியர்கள் அரசாங்கத்திற்கு உண்மையாய் இல்லை, அவர்கள் மீது நம்பிக்கையில்லாத காரணத்தினால்தான் இந்த பிரஜாசக்தியை கொண்டு வருகிறோம் என்ற ஒரு கருத்தை முன்வைத்தார்இதனால் சபையில் கடும் அமளி துமளி ஏற்பட்டது. குறித்த உறுப்பினரின் கருத்திற்கு தவிசாளர் உட்பட ஏனைய உறுப்பினர்கள் தங்களுடைய வன்மையான கண்டனத்தை வெளிப்படுத்தினார்கள்தவிசாளரால் கொண்டுவரப்பட்ட குறித்த பிரேரணை தமிழரசு கட்சியின் 9 வாக்குகளாலும், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஒரு வாக்குமாக 10 வாக்குகளால் பிரேரணை நிறைவேறியது.