• Mar 07 2026

பாடசாலைக்கு அருகே மஞ்சள் கடவை இல்லை; விபத்துக்களை சந்திக்கும் ஆபத்தில் மாணவர்கள்!

shanu / Oct 21st 2025, 11:09 am
image

ஹட்டன் - புளியாவத்தை ஹொன்சி கல்லூரிக்கு அருகில் பிரதான வீதியில்  மஞ்சள் கடவை இல்லாமையால் மாணவர்கள் விபத்துக்களை சந்திக்கும் வகையில் ஆபத்தான நிலையில் பாடசாலைக்கு சென்று வருகின்றனர். 


ஹட்டன் சாஞ்சிமலை பிரதான வீதியில் அமைந்துள்ள ஹொன்சி கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள் பாதையை கடப்பதற்கு மஞ்சள் கடவை இல்லாமல் பல அசெளகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாக பிரதேச மக்களும் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களும்  சுட்டிக்காட்டுகின்றனர். 


குறித்த பாடசாலை பிரதான வீதியில் அமைந்துள்ளது. இதனால் அவ்வழியே பயணிக்கும் பேருந்துகள், வேறு வாகனங்களை பாதுகாப்பின்றி மாணவர்கள் கடந்து செல்கின்றனர்.


அத்துடன் குறித்த வீதியில்  பயணிக்கும் பேருந்துகளும் தரிப்பிடத்தை தவிர்த்து பாடசாலை நுழைவாயிலில் பேருந்தை நிறுத்துகின்றது. 


இதனால் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் வீதியைக் கடந்து செல்வதில் பெரும் சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.  


இவ்வாறு மாணவர்கள், ஆசிரியர்கள் வீதியைக் கடந்து செல்லும் போது பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்களும் அதே நேரத்தில் பயணித்தால் விபத்துக்கள் நேரிட வாய்ப்புக்கள் காணப்படுகின்றன. 


எனவே இது தொடர்பாக உரிய நோர்வூட் வீதி அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகள் மற்றும் ஹட்டன் நகர சபை முதல்வர் கவனம் செலுத்துமாறு கோரிக்கை விடப்பட்டுள்ளது.

பாடசாலைக்கு அருகே மஞ்சள் கடவை இல்லை; விபத்துக்களை சந்திக்கும் ஆபத்தில் மாணவர்கள் ஹட்டன் - புளியாவத்தை ஹொன்சி கல்லூரிக்கு அருகில் பிரதான வீதியில்  மஞ்சள் கடவை இல்லாமையால் மாணவர்கள் விபத்துக்களை சந்திக்கும் வகையில் ஆபத்தான நிலையில் பாடசாலைக்கு சென்று வருகின்றனர். ஹட்டன் சாஞ்சிமலை பிரதான வீதியில் அமைந்துள்ள ஹொன்சி கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள் பாதையை கடப்பதற்கு மஞ்சள் கடவை இல்லாமல் பல அசெளகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாக பிரதேச மக்களும் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களும்  சுட்டிக்காட்டுகின்றனர். குறித்த பாடசாலை பிரதான வீதியில் அமைந்துள்ளது. இதனால் அவ்வழியே பயணிக்கும் பேருந்துகள், வேறு வாகனங்களை பாதுகாப்பின்றி மாணவர்கள் கடந்து செல்கின்றனர்.அத்துடன் குறித்த வீதியில்  பயணிக்கும் பேருந்துகளும் தரிப்பிடத்தை தவிர்த்து பாடசாலை நுழைவாயிலில் பேருந்தை நிறுத்துகின்றது. இதனால் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் வீதியைக் கடந்து செல்வதில் பெரும் சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.  இவ்வாறு மாணவர்கள், ஆசிரியர்கள் வீதியைக் கடந்து செல்லும் போது பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்களும் அதே நேரத்தில் பயணித்தால் விபத்துக்கள் நேரிட வாய்ப்புக்கள் காணப்படுகின்றன. எனவே இது தொடர்பாக உரிய நோர்வூட் வீதி அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகள் மற்றும் ஹட்டன் நகர சபை முதல்வர் கவனம் செலுத்துமாறு கோரிக்கை விடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement