• Apr 25 2025

திக்கம் வடிசாலை வடமராட்சி கொத்தணியிடம் கையளிப்பு

Chithra / Apr 25th 2025, 4:39 pm
image


சுமார் முப்பது ஆண்டுகளாக இயங்காமலிருந்த திக்கம் வடிசாலையை மீண்டும் வடமராட்சி பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவு சங்கங்களின் கொத்தணியிடம் இன்று பிற்பகல்  கையளிக்கப்பட்டது.

கைதடி பனை அபிவிருத்தி சபையிலிருந்து நடந்துசென்று  அதன் தலைவர் சகாதேவன் திக்கம் வடிவசாலை வளாகத்தில் வைத்து பனை தென்னை வள கூட்டுறவு சங்கங்களின் வடமராட்சி கொத்தணியிடம் உத்தியோகபூர்வமாக கடிதம் கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் வடமராட்சி, தென்மராட்சி உட்பட யாழ். மாவட்டத்தின் பல்வேறு பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவு சங்கங்கள், கொத்தணிகள் ஆகியவற்றின் தலைவர்கள், செயலாளர்கள், பணிப்பாளர்கள், பனை அபிவிருத்தி சபை பணிப்பாளர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா காலத்தில் குறித்த திக்கம் வடிசாலை தென்னிலங்கையிலுள்ள ஒருவருக்கு நீண்ட கால குத்தகையில் வழங்கப்பட்டிருந்தது. 

அவ் ஒப்பந்தம் இரத்து செய்யப்பட்டே இன்று வடமராட்சி பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவு சங்கங்களின் கொத்தணியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.


திக்கம் வடிசாலை வடமராட்சி கொத்தணியிடம் கையளிப்பு சுமார் முப்பது ஆண்டுகளாக இயங்காமலிருந்த திக்கம் வடிசாலையை மீண்டும் வடமராட்சி பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவு சங்கங்களின் கொத்தணியிடம் இன்று பிற்பகல்  கையளிக்கப்பட்டது.கைதடி பனை அபிவிருத்தி சபையிலிருந்து நடந்துசென்று  அதன் தலைவர் சகாதேவன் திக்கம் வடிவசாலை வளாகத்தில் வைத்து பனை தென்னை வள கூட்டுறவு சங்கங்களின் வடமராட்சி கொத்தணியிடம் உத்தியோகபூர்வமாக கடிதம் கையளிக்கப்பட்டது.இந்நிகழ்வில் வடமராட்சி, தென்மராட்சி உட்பட யாழ். மாவட்டத்தின் பல்வேறு பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவு சங்கங்கள், கொத்தணிகள் ஆகியவற்றின் தலைவர்கள், செயலாளர்கள், பணிப்பாளர்கள், பனை அபிவிருத்தி சபை பணிப்பாளர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா காலத்தில் குறித்த திக்கம் வடிசாலை தென்னிலங்கையிலுள்ள ஒருவருக்கு நீண்ட கால குத்தகையில் வழங்கப்பட்டிருந்தது. அவ் ஒப்பந்தம் இரத்து செய்யப்பட்டே இன்று வடமராட்சி பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவு சங்கங்களின் கொத்தணியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement