• Jul 15 2026

கதிர்காம பாதயாத்திரையில் 3வது யாத்திரிகர் மரணம்! அடுத்தடுத்து சோகம்

Chithra / Jul 14th 2026, 11:26 am
image


கதிர்காம பாதயாத்திரையில் கலந்து கொண்டிருந்த மேலும் ஒரு யாத்திரிகர் திடீரென உயிரிழந்துள்ள நிலையில், இந்த ஆண்டுக்கான பாதயாத்திரையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாக அதிகரித்துள்ளது.


இந்தச் சம்பவம் நேற்று (13) காலை குமுக்கனுக்கும் நாவலடிக்கும் இடையிலுள்ள கஜபா வெட்டை பகுதியில் இடம்பெற்றுள்ளது.


ஏறாவூர், களுவன்கேணியைச் சேர்ந்த 52 வயதுடைய பிரதி அதிபர் கே. பாக்கியராஜா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


ஆரம்பகட்ட விசாரணைகளின் அடிப்படையில், மாரடைப்பு காரணமாகவே அவர் உயிரிழந்திருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


உயிரிழந்தவர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீ. யோகேஸ்வரனின் மைத்துனர் (தங்கையின் கணவர்) என்பதும் குறிப்பிடத்தக்கது.


அவரது சடலம் தற்போது பாணமை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், லாகுகலை பிரதேச பிரதம பொதுச் சுகாதார பரிசோதகர் எஸ். புனிதராஜன் சம்பவ இடத்திற்குச் சென்று பார்வையிட்டுள்ளார்.


இதனிடையே, பாதயாத்திரையின் போது நேற்றுமுன்தினம் (12) காரைதீவைச் சேர்ந்த நடராஜா அருள்குமார் என்ற இரண்டாவது யாத்திரிகரும் உயிரிழந்திருந்தார்.


அதேபோல், முதல் உயிரிழப்பு கடந்த 5ஆம் திகதி பொத்துவில் குண்டுமடு பகுதியில் பதிவாகியிருந்ததுடன், உயிரிழந்தவர் வவுனியாவைச் சேர்ந்த  68 வயதுடைய வே.செளந்தரராசா என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


கதிர்காம பாதயாத்திரையில் 3வது யாத்திரிகர் மரணம் அடுத்தடுத்து சோகம் கதிர்காம பாதயாத்திரையில் கலந்து கொண்டிருந்த மேலும் ஒரு யாத்திரிகர் திடீரென உயிரிழந்துள்ள நிலையில், இந்த ஆண்டுக்கான பாதயாத்திரையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாக அதிகரித்துள்ளது.இந்தச் சம்பவம் நேற்று (13) காலை குமுக்கனுக்கும் நாவலடிக்கும் இடையிலுள்ள கஜபா வெட்டை பகுதியில் இடம்பெற்றுள்ளது.ஏறாவூர், களுவன்கேணியைச் சேர்ந்த 52 வயதுடைய பிரதி அதிபர் கே. பாக்கியராஜா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.ஆரம்பகட்ட விசாரணைகளின் அடிப்படையில், மாரடைப்பு காரணமாகவே அவர் உயிரிழந்திருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.உயிரிழந்தவர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீ. யோகேஸ்வரனின் மைத்துனர் (தங்கையின் கணவர்) என்பதும் குறிப்பிடத்தக்கது.அவரது சடலம் தற்போது பாணமை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், லாகுகலை பிரதேச பிரதம பொதுச் சுகாதார பரிசோதகர் எஸ். புனிதராஜன் சம்பவ இடத்திற்குச் சென்று பார்வையிட்டுள்ளார்.இதனிடையே, பாதயாத்திரையின் போது நேற்றுமுன்தினம் (12) காரைதீவைச் சேர்ந்த நடராஜா அருள்குமார் என்ற இரண்டாவது யாத்திரிகரும் உயிரிழந்திருந்தார்.அதேபோல், முதல் உயிரிழப்பு கடந்த 5ஆம் திகதி பொத்துவில் குண்டுமடு பகுதியில் பதிவாகியிருந்ததுடன், உயிரிழந்தவர் வவுனியாவைச் சேர்ந்த  68 வயதுடைய வே.செளந்தரராசா என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement