• Nov 22 2024

திருகோணமலையில் களைகட்டிய உழவர் திருநாள்...!samugammedia

Sharmi / Jan 29th 2024, 9:13 am
image

உலகத் தமிழர் கலை மற்றும் பண்பாட்டுப் பேரவையும், திருகோணமலை நகராட்சி மன்ற பொது நூலகமும் இணைந்து நடாத்திய "உழவர் திருநாள்" உலகத் தமிழர் கலை மற்றும் பண்பாட்டுப் பேரவையின் இலங்கை கிளையின் தலைவர் சுந்தரம் சிவபாலன் தலைமையில் திருகோணமலை நகராட்சி மன்ற கேட்போர் கூடத்தில் கடந்த சனிக்கிழமை (27) நடைபெற்றது.

ஆன்மீக அருளுரையினை வேதாகம மாமணி.பிரம்ம ஸ்ரீ.சோ.ரவிச்சந்திரக் குருக்கள் வழங்கி வைத்தார்.முதன்மை விருந்தினராக, உலகத் தமிழர் கலை மற்றும் பண்பாட்டுப் பேரவையின் சர்வதேச தலைவர் த.மகிபாதேவனும், சிறப்பு விருந்தினராக திருகோணமலை நகராட்சி மன்றச் செயலாளர் வெ.இராஜசேகரும் கலந்து சிறப்பித்தனர்.

வரவேற்புரையினை  நூலக உதவியாளர் அ.அச்சுதன் வழங்கினார்.  வரவேற்பு நடனத்தினை ஈழத்துக் கலையரசி.திருமதி சிவ தர்ஷினியின் மாணவிகள் வழங்கி மகிழ்வித்தனர்.

"உழவர் நடனத்தை திருகோணமலை பாரதி தமிழ் வித்தியாலய மாணவர்கள் வழங்க, அதிபர்.திருமதி.சுஜந்தினி நெறிப்படுத்தியிருந்தார்.

சிறப்புரையை கவிஞர்.தில்லைநாதன் பவித்திரன் நிகழ்த்தினார்.

பொங்கல் பாடலை ஓய்வுபெற்ற கலாசார உத்தியோகத்தர் மகேந்திரராசா வழங்கினார்.

நிகழ்ச்சித் தொகுப்பினையும், கல்லூரி மாணவர்களின் விவாத அரங்கினையும்கவிஞர் க.யோகானந்தன் தலைமையேற்று நெறிப்படுத்தினார்.

விருந்தினர்களின் உரைகளைத் தொடர்ந்து உலகத் தமிழர் கலை மற்றும் பண்பாட்டுப் பேரவையின் செயலாளர் க.நேமிநாதனின் நன்றியுரையுடன்  விழா நிறைவு பெற்றது.

அதேவேளை, நகராட்சிமன்ற விநாயகர் ஆலயத்தில் சிறப்புப் பொங்கலும் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.


திருகோணமலையில் களைகட்டிய உழவர் திருநாள்.samugammedia உலகத் தமிழர் கலை மற்றும் பண்பாட்டுப் பேரவையும், திருகோணமலை நகராட்சி மன்ற பொது நூலகமும் இணைந்து நடாத்திய "உழவர் திருநாள்" உலகத் தமிழர் கலை மற்றும் பண்பாட்டுப் பேரவையின் இலங்கை கிளையின் தலைவர் சுந்தரம் சிவபாலன் தலைமையில் திருகோணமலை நகராட்சி மன்ற கேட்போர் கூடத்தில் கடந்த சனிக்கிழமை (27) நடைபெற்றது.ஆன்மீக அருளுரையினை வேதாகம மாமணி.பிரம்ம ஸ்ரீ.சோ.ரவிச்சந்திரக் குருக்கள் வழங்கி வைத்தார்.முதன்மை விருந்தினராக, உலகத் தமிழர் கலை மற்றும் பண்பாட்டுப் பேரவையின் சர்வதேச தலைவர் த.மகிபாதேவனும், சிறப்பு விருந்தினராக திருகோணமலை நகராட்சி மன்றச் செயலாளர் வெ.இராஜசேகரும் கலந்து சிறப்பித்தனர்.வரவேற்புரையினை  நூலக உதவியாளர் அ.அச்சுதன் வழங்கினார்.  வரவேற்பு நடனத்தினை ஈழத்துக் கலையரசி.திருமதி சிவ தர்ஷினியின் மாணவிகள் வழங்கி மகிழ்வித்தனர்."உழவர் நடனத்தை திருகோணமலை பாரதி தமிழ் வித்தியாலய மாணவர்கள் வழங்க, அதிபர்.திருமதி.சுஜந்தினி நெறிப்படுத்தியிருந்தார்.சிறப்புரையை கவிஞர்.தில்லைநாதன் பவித்திரன் நிகழ்த்தினார்.பொங்கல் பாடலை ஓய்வுபெற்ற கலாசார உத்தியோகத்தர் மகேந்திரராசா வழங்கினார்.நிகழ்ச்சித் தொகுப்பினையும், கல்லூரி மாணவர்களின் விவாத அரங்கினையும்கவிஞர் க.யோகானந்தன் தலைமையேற்று நெறிப்படுத்தினார்.விருந்தினர்களின் உரைகளைத் தொடர்ந்து உலகத் தமிழர் கலை மற்றும் பண்பாட்டுப் பேரவையின் செயலாளர் க.நேமிநாதனின் நன்றியுரையுடன்  விழா நிறைவு பெற்றது.அதேவேளை, நகராட்சிமன்ற விநாயகர் ஆலயத்தில் சிறப்புப் பொங்கலும் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement