• Nov 24 2024

நாட்டின் புலனாய்வுத்துறையை இந்த அரசு பலப்படுத்த வேண்டும் - முன்னாள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் வலியுறுத்து

Chithra / Oct 29th 2024, 7:52 am
image


"வீதி தடைகளையும் பாதுகாப்பு அரண்களையும் நீக்கி, பாதுகாப்பு  காரணங்களுக்காக மூடப்பட்டிருந்த வீதிகளைத் திறந்து விட்டுள்ளதன் மூலம் நாடு பாதுகாப்பான நிலையில் இருக்கின்றது என அரசு  நினைக்கக்கூடாது. பாதுகாப்பு அரண்களை அகற்றுவதாக இருந்தால் நாட்டின் புலனாய்வுத்துறையை இந்த அரசு அரசு பலப்படுத்த வேண்டும். அத்துடன் இந்த நாடு சுவிசர்லாந்து அல்ல என்பதைப் பிரதமர் ஹரிணி புரிந்துகொண்டிருப்பதையிட்டு மகிழ்ச்சியடைகின்றோம்." - இவ்வாறு முன்னாள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன் தெரிவித்தார்.

ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,

"ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அதிகாரத்துக்கு வந்ததுடன் நாட்டின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு பல வருட காலமாக மூடப்பட்டிருந்த வீதிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. அங்கு வைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு அரண்கள் அகற்றப்பட்டன.

இதன் மூலம் நாட்டின் பாதுகாப்பு உறுதியாகி இருக்கின்றது என அரசு சிறுபிள்ளைத்தனமாக நினைத்துவிடக்கூடாது. தேசிய பாதுகாப்பு என்பது மிகவும் விஸ்தீரமானதாகும்.

அதனால் பாதுகாப்பு கருதி மூடப்பட்டிருந்த வீதிகளை மீண்டும் திறப்பதாக இருந்தால் எமது புலனாய்வுத்துறையைப் பலப்படுத்த வேண்டும். அவர்களின் மன நிலையை உயர்ந்த மட்டத்தில் வைக்க வேண்டும்.

ஆனால், எமக்குக் கிடைத்த தகவலுக்கமைய எமது புலனாய்வுத்துறையினரின் மனநிலை வீழ்ச்சியடைந்திருக்கின்றது. அவர்கள் தொடர்பில் அரசு கவனம் செலுத்த வேண்டும்.

புலனாய்வுப் பிரிவின் பிரதானி ஜெனரல் சுரேஸ் சலேயை அந்தப்  பதவியில் இருந்து உடனடியாக நீக்கி இருப்பது குறித்து நாங்கள் ஆச்சரியமடைகின்றோம்.

முக்கியமான பதவியில் இருக்கும் ஒருவரை அவ்வாறு திடீரென நீக்கக்கூடாது என்பதே எமது நிலைப்பாடு. அவருடன் தனிப்பட்ட பிரச்சினைகள் இருந்தாலும், அவருக்கு அடுத்தபடியாக அந்தப் பதவிக்கு வர இருப்பவருக்கு அவரின் அனுபவங்களைப் பெற்றுக்கொள்ள சிறிது காலம் அந்தப் பதவியில் அவரை வைத்திருக்க வேண்டும். அவ்வாறு செயற்பட்டிருந்தால், அறுகம்பே சம்பந்தமான நிலை ஏற்பட்டிருக்காது.

தனிப்பட்ட விடயங்களுக்காக நாட்டின் பாதுகாப்பைப் பலவீனப்படுத்த வேண்டாம் என அரசிடம் கேட்டுக்காெள்கின்றோம். அத்துடன் எமது நாடு சுவிட்சர்லாந்து அல்ல. அதனால் பாதுகாப்பு தொடர்பில் அவதானமாகச் செயற்பட வேண்டும் எனப் பாதுகாப்புப் பிரிவினர் பிரதமருக்குத் தெரிவித்ததாகப் பிரதமர் தெரிவித்திருந்தார். இந்த நாடு சுவிட்சர்லாந்து அல்ல என்பதைப் பிரதமர் புரிந்துகொண்டதையிட்டு நாங்கள் மகிழ்ச்சியடைகின்றோம்.

ஏனெனில் அவர்கள் எதிர்க்கட்சியில் இருக்கும் பிரபுக்களுக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு தொடர்பாகவும், அந்தப் பாதுகாப்பு தரப்பினருக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகள், பாதுகாப்புக்காகச்  செல்லும் வாகனம் தொடர்பாகவும் பல்வேறு குற்றச்சாட்டுக்களைத்  தெரிவித்தார்கள்.

ஆனால், அந்தப் பதவிக்கு வந்த பின்னர் அந்தப் பாதுகாப்பு வழங்கப்படுவது நபருக்கு அல்ல, அந்தப் பதவிக்கு என்பதை தற்போது பிரதமர் புரிந்துகொண்டிருப்பதையிட்டு மகிழ்ச்சியடைகின்றோம்.

எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு எங்களுக்கு எப்படி வேண்டுமானாலும் கதைக்கலாம். ஆனால், ஆட்சி செய்யும்போது, பல்வேறு வரையறைகளுக்கு உட்பட்டே நாங்கள் செயற்பட வேண்டும் என்பதை ஜே.வி.பி. தற்போதாவது உணர்ந்துகொள்ள வேண்டும்." - என்றார்.

நாட்டின் புலனாய்வுத்துறையை இந்த அரசு பலப்படுத்த வேண்டும் - முன்னாள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் வலியுறுத்து "வீதி தடைகளையும் பாதுகாப்பு அரண்களையும் நீக்கி, பாதுகாப்பு  காரணங்களுக்காக மூடப்பட்டிருந்த வீதிகளைத் திறந்து விட்டுள்ளதன் மூலம் நாடு பாதுகாப்பான நிலையில் இருக்கின்றது என அரசு  நினைக்கக்கூடாது. பாதுகாப்பு அரண்களை அகற்றுவதாக இருந்தால் நாட்டின் புலனாய்வுத்துறையை இந்த அரசு அரசு பலப்படுத்த வேண்டும். அத்துடன் இந்த நாடு சுவிசர்லாந்து அல்ல என்பதைப் பிரதமர் ஹரிணி புரிந்துகொண்டிருப்பதையிட்டு மகிழ்ச்சியடைகின்றோம்." - இவ்வாறு முன்னாள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன் தெரிவித்தார்.ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,"ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அதிகாரத்துக்கு வந்ததுடன் நாட்டின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு பல வருட காலமாக மூடப்பட்டிருந்த வீதிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. அங்கு வைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு அரண்கள் அகற்றப்பட்டன.இதன் மூலம் நாட்டின் பாதுகாப்பு உறுதியாகி இருக்கின்றது என அரசு சிறுபிள்ளைத்தனமாக நினைத்துவிடக்கூடாது. தேசிய பாதுகாப்பு என்பது மிகவும் விஸ்தீரமானதாகும்.அதனால் பாதுகாப்பு கருதி மூடப்பட்டிருந்த வீதிகளை மீண்டும் திறப்பதாக இருந்தால் எமது புலனாய்வுத்துறையைப் பலப்படுத்த வேண்டும். அவர்களின் மன நிலையை உயர்ந்த மட்டத்தில் வைக்க வேண்டும்.ஆனால், எமக்குக் கிடைத்த தகவலுக்கமைய எமது புலனாய்வுத்துறையினரின் மனநிலை வீழ்ச்சியடைந்திருக்கின்றது. அவர்கள் தொடர்பில் அரசு கவனம் செலுத்த வேண்டும்.புலனாய்வுப் பிரிவின் பிரதானி ஜெனரல் சுரேஸ் சலேயை அந்தப்  பதவியில் இருந்து உடனடியாக நீக்கி இருப்பது குறித்து நாங்கள் ஆச்சரியமடைகின்றோம்.முக்கியமான பதவியில் இருக்கும் ஒருவரை அவ்வாறு திடீரென நீக்கக்கூடாது என்பதே எமது நிலைப்பாடு. அவருடன் தனிப்பட்ட பிரச்சினைகள் இருந்தாலும், அவருக்கு அடுத்தபடியாக அந்தப் பதவிக்கு வர இருப்பவருக்கு அவரின் அனுபவங்களைப் பெற்றுக்கொள்ள சிறிது காலம் அந்தப் பதவியில் அவரை வைத்திருக்க வேண்டும். அவ்வாறு செயற்பட்டிருந்தால், அறுகம்பே சம்பந்தமான நிலை ஏற்பட்டிருக்காது.தனிப்பட்ட விடயங்களுக்காக நாட்டின் பாதுகாப்பைப் பலவீனப்படுத்த வேண்டாம் என அரசிடம் கேட்டுக்காெள்கின்றோம். அத்துடன் எமது நாடு சுவிட்சர்லாந்து அல்ல. அதனால் பாதுகாப்பு தொடர்பில் அவதானமாகச் செயற்பட வேண்டும் எனப் பாதுகாப்புப் பிரிவினர் பிரதமருக்குத் தெரிவித்ததாகப் பிரதமர் தெரிவித்திருந்தார். இந்த நாடு சுவிட்சர்லாந்து அல்ல என்பதைப் பிரதமர் புரிந்துகொண்டதையிட்டு நாங்கள் மகிழ்ச்சியடைகின்றோம்.ஏனெனில் அவர்கள் எதிர்க்கட்சியில் இருக்கும் பிரபுக்களுக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு தொடர்பாகவும், அந்தப் பாதுகாப்பு தரப்பினருக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகள், பாதுகாப்புக்காகச்  செல்லும் வாகனம் தொடர்பாகவும் பல்வேறு குற்றச்சாட்டுக்களைத்  தெரிவித்தார்கள்.ஆனால், அந்தப் பதவிக்கு வந்த பின்னர் அந்தப் பாதுகாப்பு வழங்கப்படுவது நபருக்கு அல்ல, அந்தப் பதவிக்கு என்பதை தற்போது பிரதமர் புரிந்துகொண்டிருப்பதையிட்டு மகிழ்ச்சியடைகின்றோம்.எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு எங்களுக்கு எப்படி வேண்டுமானாலும் கதைக்கலாம். ஆனால், ஆட்சி செய்யும்போது, பல்வேறு வரையறைகளுக்கு உட்பட்டே நாங்கள் செயற்பட வேண்டும் என்பதை ஜே.வி.பி. தற்போதாவது உணர்ந்துகொள்ள வேண்டும்." - என்றார்.

Advertisement

Advertisement

Advertisement